Wednesday, February 06, 2019

மகாலட்சுமி பொருட்செல்வம் மட்டும் தருபவளா?! தெரிந்த கதை... தெரியாத தகவல்

Manjari Sharma’s Darshan. Named for a Sanskrit word which means “sight”, “vision” or “view, Manjari’s new project seeks to photographically recreate nine classical images of Hindu Gods and Goddesses. These icons are deeply connected to Sharma’s spiritual upbringing. By melding them with her reverence and devotion to photography, she is creating altars of her own.
பொதுவா மகாலட்சுமின்னாலே பணம், நகை, தங்கம்ன்னு வாரிக்கொடுக்கும் செல்வத்துக்கு அதிபதின்னு மட்டும்தான் நினைச்சுக்கிட்டிருக்கோம். ஆனா லட்சுமி தேவி  வெறும் பணம், தங்கம், வைரம், வைடூரியத்தை வழங்குபவள் இல்லை. தனம்,  தனம், தான்யம், சந்தானம், சௌபாக்யம், தைர்யம், வைராக்யம், வெற்றி, மனச்சாந்தி என அனைத்து செல்வத்தையும் வழங்குபவளே  மகாலட்சுமி.  பணம் படைத்தவர்களையே   'லட்சுமி கடாட்சம் பெற்றவர்கள்’ ன்னு சொல்றோம். ஆனால், பெற்றோர், உற்றார், நட்பு, மனைவி, குழந்தை, பசு, வயல்வெளியோடு மகிழ்ச்சியோடு இருப்பவனை அப்படி சொல்வதில்லை.  அதுசரி, எது மகிழ்ச்சி தரும்ன்னு அறியாத  ஆட்கள்தானே நாம! அது தெரிஞ்சா நாம ஏன் இப்படி கஷ்டப்படுறோம்.

இப்படிலாம் நாம பணம் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் தந்து பூஜைகள் செய்வோம்ன்னுதான் ஒரு திருவிளையாடலே நடந்திருக்கு.  மகாலட்சுமிக்கு செல்வத்தை அள்ளித் தரும் சக்தி மட்டும்தான் உண்டா?ன்னு இன்றைய தெரிந்த கதை, தெரியாத தகவல் தொடரில் பார்க்கப்போறோம்.!!
OM SRE DHANA LAKSHMI DEVIE NAMO NAMAHA

ஆதிபராசக்தி தன்னிலிருந்து தன்னைப் போலவே சக்திகள் கொண்ட இரு தேவிகளை உருவாக்கினார். ஆதிபராசக்தியின் இடபாகத்திலிருந்து தோன்றியவள் ரமாதேவி. ஆதிபராக்தியின் வலபாகத்திலிருந்து தோன்றியவள் ராதா தேவி'ரமா’ ன்ற சொல்லுக்கு மிகவும் அழகானவள் எனப்பொருள். ரமாதேவியை ஆதிபராசக்தி 'மகாலட்சுமி’ எனப் பெயரிட்டு அழைத்து, அவளை மகாவிஷ்ணுவிடம் மனைவியாக ஒப்படைத்தார். மகாலட்சுமி செல்வத்தின் நாயகியாகச் செயல்படுவாள் என அப்போது தேவி பாகவதத்தில் எதும் குறிப்பில்லை.  அவள் அன்பின் வடிவம்,  விஷ்ணு பத்தினி,  விஷ்ணுவுக்கு சேவை செய்யும் தேவி என்று மட்டுமே தேவி பாகவதம் கூறுகிறது.
Lakshmi ~ Hindu Goddess of Beauty and Light. Manifestation of Abundance in all forms ~ Love, Light, Peace, Joy, Health, Wealth, Creativity and on and on... She knows the secret key and wants to share it with all ❤
துர்வாச மகரிஷியின் சாபத்தால் தேவேந்திரன் முதலான தேவர்கள் தங்கள் பதவிகளை இழந்தனர். தேவலோக செல்வங்கள்ன்னு சொல்லப்படும் வலம்புரி சங்கு, காமதேனு என அனைத்தும்  மறைந்தன. தேவலோக ஐஸ்வர்யங்களுக்கு ஆதாரமான சுவர்க்க லட்சுமியும் தேவலோகத்தைத் துறந்து மகாலட்சுமியுடன் ஐக்கியமானாள். பாதிக்கப்பட்ட தேவர்கள் அனைவரும் வைகுண்டம் சென்று, காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவை நோக்கி தவமிருந்தனர். அவர்கள்முன் காட்சியளித்த விஷ்ணுபகவானிடம்  தங்கள் இளமை, ஆயுள், இழந்த அனைத்துச் செல்வங்கள் ஆகியவற்றை மீட்டுத் தந்து, மீண்டும் தேவலோகம் உருவாக அருள்புரியுமாறு பிரார்த்தனை செய்தனர். 

காக்கும் கடவுளான விஷ்ணு மனமிரங்கி  ''நீங்கள் இழந்த செல்வங்களைப் பெற மகாலட்சுமி ஒரு அவதாரம் எடுப்பாள். அதற்காக,  நீங்கள் பாற்கடலைக் கடைய வேண்டும். அதில் தோன்றும் அமிர்தம் உங்களுக்கு நிரந்தர இளமையையும், மரணமில்லாப் பெருவாழ்வையும் கொடுக்கும்.  பாற்கடலில் தோன்றும் மகாலட்சுமி, நீங்கள் இழந்த சௌபாக்யங்களையும், செல்வங்களையும் பெற அருள்புரிவாள்' என மகாவிஷ்ணு தேவர்களுக்கு வரமளித்தார். 
Image may contain: cloud, outdoor and water

பாற்கடலைக் கடைவதென்பது அத்தனை சுலபமா? மகாவிஷ்ணுவே இதற்கு வழி கூறினார். ''மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி எனும் பாம்பைக் கயிறாக்கி, தேவர்கள் ஒருபுறமும், அசுரர்கள் மறுபுறமும் கயிறை இழுத்துப் பாற்கடலைக் கடைந்தால், மகாலட்சுமி தோன்றி உங்கள் கோரிக்கை நிறைவேறுமென  என வாக்களித்தார். 
Image may contain: 2 people
பாற்கடலைக் கடையும் பணி தொடங்கியது. முதலில், ஆலகால விஷம் தோன்றியது. அனைவரும் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து சிவனாரை வேண்ட, சிவபெருமான் தோன்றி விஷத்தை அருந்தி, தேவர்களையும் அசுரர்களையும் காப்பாற்றினார். பாற்கடலைக் கடையும் பணி மீண்டும் தொடர்ந்தது. 
Image may contain: 1 person
பாற்கடலிலிருந்து வலம்புரி சங்கு, காமதேனும், ஐராவதம், ரம்பை, ஊர்வசி, மேனகை உள்ளிட்ட 60,000 பெண்கள், மூதேவி எனப்படும் மூத்த தேவி,  மாதிரியான அபூர்வமான பல அரியவைகள் தோன்றின. முடிவில், ஒளிமயமான ரூப லாவண்யத்துடன் தேவி மகாலட்சுமி தோன்றினாள். தேவியைக் கண்டதுமே அனைத்து தேவர்களும் அசுரர்களும், அவள் அழகைக் கண்டு மயங்கி, அவளை அடைய விரும்பினார்கள். அப்போது மகாலட்சுமி, ''என்னை அடைய வேண்டுமென்று விரும்பும் எவரையும் நான் தேர்ந்தெடுக்கப்போவதில்லை. என்னைக் கண்டு எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கும் ஒருவரையே நான் சரணடைவேன்'' எனக்கூறினாள். 
LAKSHMI NARAYANA
அதன்படி, எதனாலும் பாதிக்கப்படாமல் யோக நித்திரையிலிருந்த மகாவிஷ்ணுவின் பாதங்களைச் சரணடைந்தாள்.  ''எந்தெந்த இடங்களில் தர்மம், நியாயம், நீதி, நேர்மை, நல்லொழுக்கம் ஆகியவை நிலைத்திருக்கிறதோ, அங்கெல்லாம் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். செய்வாள் என பிரம்மதேவரே சொல்வதாய் தேவி பாகவத்தில் சொல்லப்பட்டிருக்கு.  எனவே, தேவர்கள் தர்மத்தையும், ஒழுக்கத்தையும் நிலைநாட்டி வாழ உறுதி பூண்டால், மகாலட்சுமி தேவலோகச் செல்வங்கள் அனைத்தையும் மீண்டும் அளிப்பாள்'' எனவும், ''மகாலட்சுமி திருப்தியையும், மனச்சாந்தியையும் வழங்கும் கருணைமிக்க தேவியாவாள். வெறும் பொருட்செல்வங்களை மட்டும் விரும்பி அவளை வழிபடுபவர்கள் ஏமாற்றம்தான் அடைவார்கள்'' எனவும் பிரம்மதேவன் தேவர்களிடம் கூறினார்.
மகாலட்சுமியின் பெருமையை அறிந்த தேவர்கள், அவளை பக்தியோடு சரணடைந்தார்கள். அப்போது, அவளிடமிருந்து வெளிப்பட்ட சுவர்க்க லட்சுமி மீண்டும் தேவலோகத்தை அடைந்தாள். தேவலோகம் மீண்டும் தெய்வீகச் செல்வங்களோடு ஒளிவீசியது.  மகாலட்சுமி துதி பாடி அவளை தேவர்கள் வணங்கினர்.
திசைக்காவல் புரியும் அஷ்டதிக் பாலகர்களில் ஒருவர் குபேரன். அவர் வடதிசைக் காவலன். சிறந்த சிவபக்தரும்கூட! தேவலோகச் செல்வங்கள் அனைத்தையும் பாதுகாத்து, தகுதியானவர்களுக்குச் சரியான தருணத்தில் அந்தச் செல்வங்களை வழங்கும் அதிகாரம் அவருக்குத் தரப்பட்டது. மகாலட்சுமி கடாட்சம் பெற்றவர்களுக்கு நவநிதியையும் வழங்குகிறார் குபேரன். 

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களால் கிடைக்கும் செல்வங்கள் அனைத்தும் நவநிதியில் அடங்கும். மகாலட்சுமியின் அருட்பார்வை பெற்றவர்களுக்கு உலகியல் செல்வங்களோடு நிம்மதியும், சாந்தியும் கிடைக்க குபேரன் வழிசெய்கிறார். பேராசையும் அதர்மமும்மிக்க மனிதர்கள் சிலருக்கும் பொருட்செல்வங்கள் இருக்கலாம். அது, அவர்கள் பூர்வஜென்ம புண்ணியத்தின் பலனாக இருக்கலாம். ஆனால், சத்யமும் நேர்மையும் இல்லாதவர்கள் பெற்ற செல்வத்தால் அவர்களுக்கு நிம்மதி கிடைப்பதில்லை. 
மணிராஜ்: அஷ்டலட்சுமி கடாட்சம் அருளும் அட்சயதிருதியை
மகாலட்சுமி என்பவள் பொருட்செல்வத்தை மட்டும் தருபவள் அல்ல.  மனித வாழ்க்கைக்குத் தேவையான எட்டுவகைச் செல்வங்களையும் அளிப்பவள்.
Adi Lakshmi
ஆதி லட்சுமி: இவளுக்கு 'ரமணா’ன்ற பேரும் உண்டு. மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தரக்கூடியவள் இவள். 
SHRI KAMALA LAKSHMI DEVI ॐ
தான்ய லட்சுமி: உயிர் வாழும் ஜந்துக்கள் அனைத்துக்கும் உணவு அவசியம். அந்த உணவை வழங்குபவள். விவசாயத்தை வளப்படுத்தும் இவளே, பசித்தவனுக்கு உணவு கிடைக்கச் செய்யும் கருணைத் தாயாகவும் திகழ்கிறாள்.
SHRI LAKSHMI DEVI
தனலட்சுமி: உணவுக்கு அடுத்தபடியாக மனித வாழ்க்கைக்குத் தேவையானது உடை, இருப்பிடம். இவற்றை அடைய வழி செய்வது 'தனம்’ எனப்படுகிறது.  தனம்ன்னா பொருள் செல்வம். இன்னிக்கு நாம பரவலா கும்பிடும் லட்சுமிதேவி இவள்தான். அந்த தனத்தைத் தந்தருளுபவள் இவள்.
Image result for சந்தான லட்சுமி
சந்தான லட்சுமி: குழந்தை செல்வம் இல்லன்னா எத்தனை செல்வமும் பெற்றிருந்து பலனில்லை. துணை இல்லாமல் குழந்தை இல்லை. சிறந்த வாழ்க்கைத்துணையையும்,  குழந்தைச்செல்வத்தையும் அளிப்பவள் இவளே!
Image may contain: 1 person
கஜ லட்சுமி: லட்சுமிக்கு 'க்ஷீராப்தி தனயை’ ன்னு இன்னொரு பெயருண்டு. இதற்கு பாற்கடலில் தோன்றியவள் என அர்த்தம்.  பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியபோது இரண்டு யானைகள் தோன்றி, தங்கள் தும்பிக்கையில் தாங்கிய பொற்குடத்தால் தேவிக்குப் பாலாபிஷேகம் செய்தன. இருபுறங்களிலும் யானைகள் நின்றதால், அவள் கஜலட்சுமி எனப்பட்டாள். இன்றும் ஆலய கர்ப்பக்கிர வாயிலிலும், வீடுகளின் வாசற்படி நிலையிலும் கஜலட்சுமி சிற்பம் இருக்கும். மனத்தூய்மையையும், மனஅமைதியையும் தருபவள் இவள்.
Image may contain: 1 person
வித்யாலட்சுமி: அறிவாற்றல் இல்லையென்றால், எத்தனைச் செல்வங்கள் இருந்தாலும் பயனிருக்காது. அறிவாற்றல் வளர ஆதாரமாக விளங்குபவள் வித்யாலட்சுமி. உயரிய ஞானத்தை அடைய வழி செய்பவளும் இவளே! இவள் சரஸ்வதியின் அம்சம். 
Maa Chandika - Hindu Posters (Reprint on Glazed Paper - Unframed)
விஜய லட்சுமி: கடுமையான முயற்சியும், உழைப்பும் நிச்சயமாக வெற்றி தரும். அந்த உழைப்புக்குரிய சக்தியைத் தந்து வெற்றியோடு வாழ அருள்புரிபவள் விஜயலட்சுமி. வெற்றிக்கு அதிபதி  இந்த தேவி. 
Jai Maa
தைரிய லட்சுமி: கல்வி, செல்வம், குழந்தை, மனைவி, வீடு, வாசல் மட்டும் இருந்தால்போதுமா?!  அதை கட்டிக்காக்க தீயவர்களோடு தைரியம் வேணுமே! தர்மநெறியில் நினைத்ததைச் செய்து முடிக்க மனோபலமும், உடல்பலம், வைராக்யம், தைரியம் இவற்றை தருபவள் இந்த தைரியலட்சுமி.
அஷ்டலட்சுமிகளில் யார் பெரியவர் என போட்டி எழுந்ததாம். அதனை நீருபிக்க பணக்காரனான ஒருவனது வாழ்வில் திடீரெனத் துன்பங்கள் சூழ்ந்தது. பணம், வீடு, வாசல், குடும்பம் ஆகியவற்றை அவன் ஒவ்வொன்றாய் இழக்க நேரிட்டது. நொந்துபோன அவன், தனது பிரமாண்டமான வீட்டின் வெளிவாசலருகே கொஞ்ச நேரம் உட்கார்ந்தான். ஒவ்வொரு லட்சுமியாக அவன் வீட்டைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர். தான்யலட்சுமி வெளியேறினாள். வீட்டில் சாப்பிட ஏதுமில்லாமல் ஆயிற்று. அதன்பின், தனலட்சுமி வெளியேறினாள். வீட்டில் உள்ள பணமும், பொன்னும், பொருளும் போயின. சந்தானலட்சுமி வெளியேறியதும் அவன் மனைவி மக்கள் அவனைத் தனியே விட்டுச் சென்றனர். தொடர்ந்து கஜலட்சுமி, விஜயலட்சுமி, ஆதிலட்சுமி ஆகியோரும் வெளியேறினர். அவர்கள் தன்னை விட்டுப் போவதை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான் அந்தப் பணக்காரன். கடைசியாக தைரியலட்சுமி அவனை விட்டுக் கிளம்ப முற்பட்டாள். அவள் வெளியேறும்போது அவன் ஓடிச்சென்று அவள் பாதங்களில் விழுந்து, ''தாயே! தயவுசெய்து நீங்கள் மட்டும் என்னை விட்டுப் போய்விடாதீர்கள்!'' எனக் கதறினான். அவனது வேண்டுகோளுக்கிணங்க தைரியலட்சுமி வெளியேறாமல் அவனோடு இருந்தாள். அதன்பின், வெளியே சென்ற மற்ற லட்சுமிகளும் ஒவ்வொருவராக வீட்டுக்குள் வந்தனர். இழந்த செல்வங்கள் அனைத்தையும் மீண்டும் பெற்றான் அந்தப் பணக்காரன்.
அதனால் எதை இழந்தாலும் தைரியத்தை இழக்காமல் இருந்தால் எல்லாவற்றையும் போராடி பெற்றிடலாம். தர்மத்தைக் கடைப்பிடித்து ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள் வீட்டில் அஷ்டலட்சுமிகளும் வீற்றிருந்து அருள்புரிவார்கள் என சாஸ்திரம் சொல்கிறது. இதையேதான் மகாலட்சுமியும் சொன்னாள். வாழ்வில் எல்லா செல்வமும் கிடைக்க மகாலட்சுமி அருள்புரியட்டும்..
நன்றியுடன்,
ராஜி

10 comments:

  1. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...

    ReplyDelete
    Replies
    1. அதுக்குதான் சந்தான லட்சுமி அருள் வேணும்ண்ணே

      Delete
  2. லஷ்மி கடாட்சம்.

    ReplyDelete
  3. திண்டுக்கல்லாரை வழிமொழிகின்றேன் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல்லாருக்கு சொன்ன பதிலே இங்கும்...

      Delete
  4. ஆத்தாடீ... எம்புட்டுப் பெரிய இடுகை. படங்களில் சில மிக நன்றாக இருக்கின்றன. இடுகை ஆரம்பத்தில் போட்டிருக்கும் சினிமா நடிகை படம்தான் சுத்தமா நல்லா இல்லை.

    ReplyDelete
    Replies
    1. இதுவே பெரிய இடுகையா?! ரைட்டு... மத்த பதிவுலாம் படிக்கலை போல!

      நடிகை படத்தை மாத்திடலாம்/ அது நடிகைன்னு தெரியாது எனக்கு..

      Delete
  5. ஒரு புராண படத்தை கண்டு களித்தது மாதிரி இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. புராண கதையாச்சே! அப்படிதான் இருக்கும்

      Delete