Tuesday, February 26, 2019

ஓமப்பொடி - கிச்சன் கார்னர்

நம் அம்மாக்கள்லாம் கொஞ்சம் மெனக்கெட்டு  முறுக்கு, தட்டை, ஓமப்பொடி, பொருள்விளங்கா உருண்டை, அதிரசம்ன்னு செஞ்சு டப்பாக்களில் அடுக்கி வச்சுடுவாங்க. கணக்கு வழக்கில்லாம சாப்பிட்டாலும் உடம்புக்கு ஒன்னும் ஆனதில்லை. பாதி முறுக்கு சாப்பிட்டாலும் திருப்தியா இருக்கும்.

இப்ப இதுலாம் செய்ய சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு கடையில் வாங்கி சாப்புடுறதால திருப்தியும் இல்ல, உடலுக்கும் கேடு. வெளியூர் போகும்போதும், பசங்க காலேஜ் டூர் போகும்போதும், வீட்டுக்கும் அப்பப்ப எதாவது செஞ்சு வச்சிடுவேன். முறுக்கு, ஓமப்பொடி, தட்டை, ரவா லட்டுன்னு...  இப்படி நாமளே செஞ்சு கொடுக்குறதால மனசுக்கு ஒரு திருப்தி.

பசங்களுக்கு பிடிச்ச ஓமப்பொடி செய்யுறது எப்படின்னு பார்க்கலாமா?!
தேவையான பொருட்கள்...
கடலைமாவு - ஒரு கப்
அரிசி மாவு - 1/2 கப்
மிளகாய் தூள் - 
உப்பு
எண்ணெய்
பெருங்காயம் - சிறிது
ஓமம்- ஒரு டேபிள் ஸ்பூன்...

ஓமத்தை சுடுதண்ணில போட்டு ஊறவச்சு, 2மணிநேரம் கழிச்சு அரைச்சு வடிகட்டி வச்சுக்கனும்... 
அரிசிமாவும், கடலைமாவையும் நல்லா கலந்துக்கிட்டு அதில் தேவையான அளவுக்கு உப்பு போட்டுக்கனும். 
தேவையான அளவுக்கு தனி மிளகாய் தூள் சேர்த்துக்கனும்.. 
பெருங்காயத்தூள் சேர்த்து நல்லா கலந்துவிட்டுக்கிட்டு, ஓமத்தை அரைச்சு வடிக்கட்டிய தண்ணியும், தேவையான அளவுக்கு தண்ணி சேர்த்து சப்பாத்தி மாவு அளவுக்கு பிசையனும்.. 
மாவு கெட்டியா இருந்தால்தான் ஓமப்பொடி நல்லா வரும். இல்லன்னா ஒருமாதிரி கடக்முடக்ன்னு இருக்கும்.
முறுக்கு குழாயில் சின்ன சின்ன துளைகள் இருக்கும் அச்சை எடுத்து உள்பக்கம் கொஞ்சம் எண்ணெய் தடவிக்கனும்... 
பிசைஞ்சு வச்சிருக்கும் மாவை கொஞ்சமெடுத்து முறுக்கு குழலில் போட்டுக்கனும்...

எண்ணெய் காய்ந்ததும் முறுக்கு அச்சில் இருக்கும் மாவை பிழிஞ்சு விடனும்.. எண்ணெயிலிருந்து ஆவி கிளம்பி கைகளில் படும். கவனமா இருக்கனும். 
ஒருபக்கம் வெந்ததும், இன்னொரு பக்கம் திருப்பிவிட்டு வேகவிட்டு எடுக்கனும்...

ஓமப்பொடி தயார்..
காய்ந்திருக்கும் எண்ணெயில் கறிவேப்பிலையை போட்டு பொரிய விட்டு எடுத்து ஓமப்பொடியில் போட்டுக்கனும்.

பிசைஞ்ச மாவு கெட்டியா இருக்குறதால மாவு லேசில் பிழிய வராது.  அதேப்போல எண்ணெயில் நேரடியா பிழியுறதால கையில் எண்ணெய் சூடு படும். இந்த ரெண்டு காரணம்தான் இதை அடிக்கடி செய்யவிடுவதில்லை..

ஒருகிலோ கடலைப்பருப்போடு 200கிராம் பச்சரிசி சேர்த்து மெஷினில் அரைச்சு வச்சுக்கலாம். பஜ்ஜி, ஓமப்பொடி, பக்கோடா செய்ய உதவும். சிலர் ஓமம்  சேர்க்க மாட்டாங்க. நிறைய பேர் மிளகாய் தூள் சேர்க்காம மஞ்சப்பொடி சேர்த்து செய்வாங்க. என் பிள்ளைகளுக்கு காரம் வேணுங்குறதால நான் மிளகாய் தூள் சேர்த்துக்குறேன். 

மாலை நேரத்துல பிள்ளைகளுக்கு சாப்பிட கொடுக்க ஓமப்பொடி தயார்.

நன்றியுடன்,
ராஜி

15 comments:

  1. இதெல்லாம் எங்க வீட்டிலே சர்வ சாதாரணம்...

    ReplyDelete
    Replies
    1. உன் தங்கச்சி சோம்பேறின்னு தெரியாதா உங்களுக்கு?!

      Delete
  2. இதே இதே தான் ராஜி...நான் சில சமயம் அரிசி மாவு கம்மியாவோ இல்லை கடலைமாவுல அப்படியேவோ செஞ்சுருக்கேன்...கடலைமாவுல அப்படியே செய்யறதுல டேஸ்ட் நல்லாருக்கும்...

    உங்க ஓமப்பொடி பார்க்கவே சூப்பரா இருக்கு..

    கீதா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ருசியும் நல்லாவே இருந்துச்சு கீதாக்கா.

      எனது மகனின் ஹாஸ்டலில் இருக்கும் வெளிமாநில பிள்ளைக்கு முறுக்கு பேர் தெரில. கைல சுத்தி இந்த ஸ்னாக்ஸ் வேணும்ன்னு கேட்டானாம். வீட்டில் முறுக்கு மாவு இல்ல. இந்த மாவு இருந்துச்சு கொஞ்சம் செஞ்சு கொடுத்து விட்டேன். என்ன இந்த ஓமப்பொடியில் ஒரு பிரச்சனைன்னா கையில் சூடு படும். இந்தமுறை என் பையன் கைக்கொடுத்தான். அதனால் நான் தப்பிச்சேன்.

      Delete
  3. ஓமப்பொடி நல்லாவே வந்திருக்கு. எனக்கு இது அவ்வளவு பிடிக்காது. எனக்குப் பிடித்தது காராச்சேவு (பூண்டு போட்டது).

    ஆமாம்...வீட்ல கடலை மிட்டாய் செய்யறதில்லையா?

    ReplyDelete
    Replies
    1. செய்வோமே! உண்மையை சொல்லனும்ன்னா நான் செய்யமாட்டேன். சூடு தாங்க மாட்டேன். ஆனா, அம்மா செய்வாங்க.

      Delete
  4. கடலை மாவு வயிற்றை அடைக்கும்னு இதெல்லாம் சும்மா டேஸ்ட் பண்றதோட சரி!... ஓமப்பொடி நல்லா வந்திருக்கு போல... அழகா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. அதுலாம் ஒன்னும் பண்ணாது. ஓமம், பெருங்காயம்லாம் போட்டிருக்கோமில்ல!

      Delete
  5. எனக்கு எப்பவும் பிடித்தமானது.

    ReplyDelete
    Replies
    1. இங்கயும் எல்லாருக்கும் பிடிக்கும்

      Delete
  6. மிகவும் பிடித்தமானது

    ReplyDelete
  7. சூப்பரா இருக்கு ராஜி க்கா...

    அடுத்த வாரம் போட்டுறலாம் ...

    ReplyDelete
    Replies
    1. அப்படியே ஆரணிக்கு ஒரு பார்சல்

      Delete
  8. இப்படியெல்லாம் செய்யுறது இல்லை. அதனால கடையில வாங்குறது தான்

    ReplyDelete