Monday, February 25, 2019

மரணத்துக்கு பின் உயிர் எங்கு செல்கிறது?! ஐஞ்சுவை அவியல்

உன்னோடுலாம் மல்லுக்கட்ட என்னால் ஆகாது மாமா. இருந்த சுவடே இல்லாம காத்தோடு காத்தாய் கரைஞ்சு போயிரனும்...  

கரைஞ்சு போயிட்டு... அப்புறம் என்னவாகுவியாம்!!??


சொர்க்கமோ நரகமோ அதுக்கு போயிருவேன். எப்படியும் நரகம்தான். ஆனாலும், உன் மூஞ்சியிலேயே முழிக்காம உன் சகவாசமே இருக்காம போயிடுவேனில்ல! அதுபோதுமெனக்கு..


ம்ம்ம் ஒரு உயிர் உடலைவிட்டு பிரிஞ்சதும் உடனே சொர்க்கமோ நரகமோ போறதில்லை. உயிர் உடலிலிருந்து பிரிஞ்சு மூணு  நாள்வரை நீரிலும், அடுத்த மூன்று நாட்களுக்கு நெருப்பிலும், அடுத்த மூன்று நாட்கள் ஆகாயத்திலும் இருக்கும். இந்த 9 நாட்களிலும் ஒவ்வொரு நாளும் தான் இருந்த தன் வீட்டிற்கு என்ன நடக்குது?! யார் அழறாங்க?! யார் மகிழ்ச்சியடையுறாங்கன்னும் துக்கம் கேட்கப்போவோர் வருவோரையும் அட்டெண்டஸ் எடுக்குறமாதிரி வந்து பார்த்துக்கிட்டு வாசலியே நிக்கும். 10வது நாளில் தன் வீட்டிற்குள் அந்த உயிர் வரும். அதனால்தான் பத்தாம் நாள் காரியம் செய்வது முக்கியம்ன்னு சாஸ்திரம் சொல்லுது. ஆனா, இப்பலாம் ஐந்து நாட்களிலேயே காரியம் செஞ்சுடுறாங்க. இது தப்பு.

11,12வது நாளில் நாம் கொடுக்கும் பிண்டத்தை உண்கிறது. 13வது நாளில்தான் எமதூதர்கள் கயிற்றால்  கட்டி உயிரை இழுத்துச்செல்ல,  தன் வீட்டை பார்த்தபடியே நாள் ஒன்றுக்கு 247 காததூரம் பகலிலும் இரவிலும் செல்கிறது. இவ்வாறு நடந்து செல்லும்போது அந்த உயிருக்கு பசி,  தாகம் அதிகம் ஏற்படும்.  பசியோடு நடந்து செல்லும் அந்த உயிர்,  மாதத்தில் ஒருநாள் அதாவது அந்த உயிர் இறந்த திதியன்று ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுக்க அனுமதி அளிக்கப்படும். அதனாலதான், ஒரு உயிர் இறந்தபின் ஒவ்வொரு மாதமுமம் இறந்த திதியன்று மாசிகாபிண்டம் கொடுத்து அந்த ஜீவனின் பசியை போக்கும் வழக்கம் உண்டானது. இவ்வாறு 12 மாதங்களும் வரக்கூடிய திதியன்று பிண்டம் கொடுத்து அந்த உயிரின் பசியை போக்கனும். இப்படியே ஒரு ஆண்டுக்காலம் நடந்து செல்லும் அந்த உயிர் ஒரு ஆண்டு நிறைவடைந்தவுடன் எமலோகத்தை அடைகிறது. உடலிலிருந்து நீங்கி ஆன்மா எமலோகம் செல்ல  ஓர் ஆண்டுகாலம் பிடிப்பதால்தான் அந்த வீட்டில் ஓர் ஆண்டுக்கு குதூகுலம், கொண்டாட்டம் சுபகாரியம் நடத்தக்கூடாதுன்னு சாஸ்திரம் சொல்லுது. அதுக்கப்புறம்தான் அந்த உயிர் பாவம் செய்திருப்பின் கர்மத்தால் ஆகிய சரீரம் பெற்று எமலோகம் செல்லும். அந்த உயிர் புண்ணியம் செய்திருப்பின் சூரிய மண்டலம் மார்க்கமா பிரம்மலோகம் செல்கிறதுன்னு புராணங்கள் சொல்கிறது. 


சரி சொல்லிட்டு போகட்டும். இதுலாம் மக்களை நல்வழிப்படுத்த சாமி, பூதம், சொர்க்கம், நரகம்ன்னு சொல்லி வச்சது. என்னமோ நீ பின்னாடியே போய் பார்த்தமாதிரியே பேசுறியே!



இதுக்குலாம் பார்க்கனுமா?! எல்லாம் பெரியவங்க சொல்றதுதான்!!  பயத்தால் மட்டும் பணிய வைக்கமுடியாது. எதிராளியை பணிய வைக்க  சாம, தான, பேத, தண்டம்ன்னு நால்வகை தந்திரங்களை  சாணக்கியர் சொல்லிக் கொடுத்திருக்கார். 

சாமம் - இன்சொல் கூறல், சமாதானம் பேசுதல்... எதிராளியோடு போராடுவதற்கு முன்னமயே எதிராளியோடு பேசியோஒ, கெஞ்சியோ, மிரட்டியோ வழிக்கு கொண்டு வரனும். அடுத்ததா, தானம் - தானம் கொடுத்து வழிக்கு கொண்டு வருதல். அவனுக்கு பிடிச்சமாதிரி பொன்,பொருள்,பெண்...இப்படி கிஃப்டா கொடுத்து எதிராளியை மடக்கனும். பேதம் - ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல். நிராகரிப்பு எல்லாரையுமே அசைச்சு பார்க்கும். அதனால் எதிராளியை நிராகரிச்சும், மிரட்டியும் பண்ணியும் பணியவைக்கலம். தண்டம் - தடியால் அடித்துக் கனிய வைக்க, அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பிகளும் உதவமாட்டாங்க. அதனால வெளுத்து கட்டனும்.. 

 இப்படி சாம, பேத,தான, தண்டத்துக்குலாம் மசியாத சில ஜென்மங்க உன்னைய மாதிரி இருக்கே! அதையெல்லாம் என்ன மாமா பண்ணுறதாம்?!

தெரியலியே! அதுலாம் வித்தியாசமான வடிவமைப்புன்னு விட்டுடவேண்டியதுதான்..
முன்னலாம் திருமணம் முடிஞ்சு வீட்டுக்கு வரும் மாப்ளைகளை வரவேற்பதே ஒரு சடங்கு. மச்சினிச்சிகளாம் ஒன்று சேர்ந்து ஆரத்தி எடுப்பாங்க. அவ்வளவு எளிதாய்  மாப்பிள்ளையை வீட்டுக்குள் விடமாட்டாங்க. சினிமாக்கு கூட்டி போ, புடவை வாங்கி தான்னு எதாவது கோரிக்கை வைப்பாங்க. அதுக்கெல்லாம் மாப்ளை மல்லுக்கட்டி, போராடி மச்சினிச்சி காசு கொடுத்தபின்தான் வீட்டுக்குள்ளயே விடுவாங்க. வீட்டுக்குள் வந்தபின்னும் ராக்கிங்க் தொடரும்.. காப்பில உப்பு கலக்குறது, தேள்,பாம்பு பொம்மையை வீசுறதுன்னு கலாட்டா செய்வாங்க. மாப்ளை எந்த நேரத்தில் என்ன நடக்குமோன்னு எச்சரிக்கையா இருக்கனும். நான் சின்ன வயசா இருக்கும்போது ஒருவீட்டில் இப்படிதான்  ஒரு மாப்ளை வீட்டுக்குள் வரும்போது வாசல்படியில் கோணிப்பையை விரிச்சு அதன்கீழ கேழ்வரகை கொட்டி அதில் கால்வச்சு வழுக்கி மாப்ளை விழுந்து அன்னிக்கு கோவிச்சுக்கிட்டு போனவர்தான் அப்புறம் மாமியார் வீட்டுக்கு வந்தாலும் வாசப்படியிலேயே உக்காந்துட்டு அப்படியே திரும்ப போய்டுவார். இந்த வீடியோவை பார்த்தபின் அந்த நினைவுதான் வந்திட்டுது..

ம்ம் இதுக்குலாம்தான் எனக்கு கொடுப்பினை இல்லியே! 
ம்ம் இப்பவும் ஒன்னும் கெட்டுப்போயிடல. மச்சினிச்சி இருக்க வீடா பார்த்து கட்டிக்க...
கூல்.. சும்மா தமாசுக்கு சொன்னேன் புள்ள!

எங்க கூலாய் இருக்கிறது?! 
வெயில்காலம் வந்திட்டுது.. இனிதான் மரங்களோட அருமை எல்லாருக்கும் தெரியவரும்.  அதை சொல்லுறமாதிரி இந்த படம் ட்விட்டர்ல வந்துச்சு மாமா. அதான் சுட்டுக்கிட்டேன்.
இப்பவாவது சுதாகரிக்கலைன்னா இந்த நிலை வருவது உறுதி. 

இன்றைய விடுகதை..
 3 கால் இருக்கும் - நடக்காது..

ரெண்டு தலை இருக்கும் - பேசாது பார்க்காது
அது என்ன மாமா?!

நன்றியுடன்,
ராஜி

16 comments:

  1. சாணக்கியர் ஏதோ தெரியாமல் சொல்லிட்டார்... விட்டு விடுங்கள்... இரண்டு நாளா சாணக்கியத்தனம் தான் எங்கும் ஓடிட்டிட்டிட்டிட்டு இருக்கு...!

    அப்புறம்....

    வர்றேன்...!

    ReplyDelete
    Replies
    1. இங்கு அரசியல் பேசாதீர்

      Delete
  2. சுவையான ஐஞ்சுவை அவியல்....

    காணொளி இரண்டு நாட்கள் முன்னர் தான் பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. பார்த்தாச்சா?!
      அடுத்து புதுசா போட ட்ரை பண்றேன்

      Delete
  3. உயிர் விடயம் சொன்னது உண்மையோ, பொய்யோ ஆனால் மனம் கனத்து விட்டது. எனது தங்கை வனிதாவை நினைவூட்டி விட்டது

    ReplyDelete
    Replies
    1. மன்னிச்சு அண்ணே!

      Delete
  4. உயிரின் பயணம் விஷயத்தில் இன்னொரு தகவலும் உண்டு. அது காலக்கணக்கு. அந்த உயிரின் ஒருநாள் பயணம் நமக்கு ஒரு வருட காலம்.

    ReplyDelete
    Replies
    1. கேள்விப்பட்டிருக்கேன் சகோ

      Delete
  5. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  6. ஆஹா கூட நின்று பார்த்தமாதிரியே வர்ணனை ஒரு உயிர் உடலைவிட்டு பிரிஞ்சதும் உடனே சொர்க்கமோ நரகமோ போறதில்லை. உயிர் உடலிலிருந்து பிரிஞ்சு மூணு நாள்வரை நீரிலும், அடுத்த மூன்று நாட்களுக்கு நெருப்பிலும், அடுத்த மூன்று நாட்கள் ஆகாயத்திலும் இருக்கும். இந்த 9 நாட்களிலும் ஒவ்வொரு நாளும் தான் இருந்த தன் வீட்டிற்கு என்ன நடக்குது?! யார் அழறாங்க?! யார் மகிழ்ச்சியடையுறாங்கன்னும் துக்கம் கேட்கப்போவோர் வருவோரையும் அட்டெண்டஸ் எடுக்குறமாதிரி வந்து பார்த்துக்கிட்டு வாசலியே நிக்கும்

    ReplyDelete
    Replies
    1. இதுலாம் படிச்சவைப்பா. அப்படி பார்த்தால் எதையுமே நம்பமுடியாதே!

      Delete
  7. உயிர் பற்றி இப்படிப் பலவிதங்களில் சொல்லக் கேட்டிருக்கிறேன். வீடியோ நிகழ்வு இப்படியும் உண்டோ?

    அவியல் நன்றாக இருந்தது.

    துளசிதரன்

    ராஜி கல்யாணத்துல இப்படி எல்லாம் உண்டோ..மாப்பிள்ளை ராகிங்க்? ஓ கிட்டத்தட்ட நலுங்கு போலத்தான் இல்லையா...

    வெயில் தொடங்கிடுச்சு...இங்கு பங்களூரிலும் கொஞ்சம் சூடுதான் வெளியே சென்றால் கொஞ்சம் தெரிகிறது.. வீட்டினுள் இருந்தால் தெரிவதில்லை..

    சாணக்கியர் சொன்னது எல்லாம் மண்டைல ஏறலை ஹிஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. என் பெரியப்பாக்கு மூன்று மகள்கள் பெரிய அக்காவுக்கு கல்யாணம் ஆகும்போது எனக்கு விவரம் தெரியாது. ஆனா, சின்ன அக்காக்கு கல்யாணம் ஆகும்போது நான் எட்டாவது படிக்குறேன். நான் என் தங்கச்சிதான் ஆரத்தி எடுத்தோம். சினிமாவுக்கு கூட்டி போக சொன்னோம், மாமா மாட்டேன்,. உன் அக்காவை மட்டும்தான் கூட்டி போவேன்னு சொன்னாரு. ட்ரெஸ் கேட்டோம், மாட்டேன்னுட்டாரு... கடைசியா மச்சினிச்சி காசுன்னு வாங்கிட்டுதான் விட்டோம். அப்புறம் அவர் எங்களை சினிமாவுக்கு கூட்டிப்போனதுலாம் தனிக்கதை.

      கல்யாணமாகி மாப்ளை மாமியார் வீட்டுக்கு வரும்போது, வயசுல மூத்த பெரியவங்க பலர் இருந்தாலும் மச்சினிச்சிங்கதான் ஆரத்தி எடுக்கனும். அதான் வழக்கம். இப்பலாம் மாறிட்டுது. ஆனா, கல்யாண பொண்ணுக்கு எத்தனை அக்கா தங்கச்சிங்க இருக்காங்களோ அத்தனை பேருக்கு பைசா கொடுப்பாங்க. அதேமாதிரி மாமியார் பணம்ன்னும் இருக்கு. வசதிக்கு தக்கவாறு புடவை, ஜாக்கெட், பைசான்னு எத்தனை மாமியார் உண்டோ அத்தனை பேருக்கும் கொடுத்துடுவாங்க.

      Delete
  8. why my comment was not published

    ReplyDelete
  9. உயிர் பற்றி நானும் படித்திருக்கிறேன்.

    கடைசி புகைப்படம் சீக்கிரம் உண்மையாகிவிடும் என்று தான் தோன்றுகிறது

    ReplyDelete