Sunday, January 12, 2014

பதிவர்கள்லாம் சேர்ந்துக் கொண்டாடும் சமத்துவ பொங்கல்பதிவர் சந்திப்பு நடத்தி புத்தகம் வெளியிடுறது, குறும்படம் வெளியிடுறது மட்டும்தானே இத்தனை நாள் நாம செஞ்சோம். வெவ்வேற இடம்,மொழி, கலாச்சாரம், சாதி, மதத்து ஆளுங்கலாம் ஒண்ணு சேர்ந்துதானே எதுவா இருந்தாலும் கூடி கும்மியடிக்கிறோம். அதனால, இந்த பொங்கல் பண்டிகையை எல்லா பதிவர்களும் சேர்ந்து சமத்துவப் பொங்கல் வைக்கலாம்ன்னு ஒரு ஐடியா தோணவே மின்னல் வரிகள் கணேஷ் அண்ணா தலைமைல எல்லோரும் ஒண்ணுக் கூடியாச்சு. 

”மின்னல் வரிகள்”கணேஷ் : ஏம்மா ஆதி! பொங்கல் வைக்கும் இடத்தை சுத்தம் பண்ணி கோலம் போட்டு விடும்மா!

ஆதி வெங்கட்: போங்க கணேஷ் அண்ணா, இப்பதான் டெல்லி, ஸ்ரீரங்கம்ன்னு ரெண்டு இடத்துலயும் வீடு சுத்தம் பண்ணி, கோலம் போட்டதுல உடம்புக்கு முடியல. நீங்க வேற யார்கிட்டயாவது சொல்லிக்கோங்க. 

”மின்னல் வரிகள்”கணேஷ் : ஏம்மா! அமைதியான, அடக்கமான பொண்ணு நீயே செய்யலைன்னா வேற யார் செய்வாங்க!?

ஆதி வெங்கட்: ஏன்? உங்க தங்கச்சி சசிக்கிட்ட சொல்லுங்களேன். 

”மின்னல் வரிகள்”கணேஷ் :எங்கம்மா! அவளுக்கு கிராமத்து பாணில கவிதை எழுத வருமே தவிர, இதெல்லாம் தெரியாதும்மா!  

ஆதி வெங்கட்: சரி, சரி நானே செய்யுறேன். இதுக்கப்புறம் வேற எதும் செய்ய மாட்டேன்.

”மின்னல் வரிகள்”கணேஷ் : சரிம்மா! பானை வாங்க யாரை அனுப்பலாம்.

ஆரூர் மூனா செந்தில்: நான் போறேனே சார்.

”மின்னல் வரிகள்”கணேஷ் : ஒண்ணும் வேணாம். உன்னை அனுப்பினா எப்படி பஸ் ஏறினேன், ஆட்டோக்காரன் இடிச்சது முதற்கொண்டு பானை உடையாம கொண்டு வந்தது எப்படின்னு கதையா சொல்லி சாகடிப்பே. நான் யாரையாவது அனுப்புறேன்.

ஆரூர் மூனா செந்தில்: உங்க சிஷ்யன் சீனுவை அனுப்ப வேண்டியதுதானே!

”மின்னல் வரிகள்”கணேஷ் : ஐயோ! அவனையா!? அப்புறம் பானை விக்குறவங்கக்கிட்ட போய் காதலிப்பது எப்படி? நீங்க லவ் லெட்டர் எழுதுனீங்களா!? கவிதை எழுத வருமா!?ன்னு இம்சை பண்ணிட்டு இருப்பான். 

கோவை நேரம் ஜீவா! நான் போய் வாங்கி வரவா!?

”மின்னல் வரிகள்”கணேஷ் : ஒண்ணும் வேணாம் சாமி! பானை கடைக்கு பக்கத்துல எதாவது ஹோட்டல், திண்பண்டக் கடை இருந்தா நீ பதிவு தேத்தப் போய்டுவே!

கோவை நேரம் ஜீவா! அப்ப ஆவியை அனுப்பலாமா!?

ஆவி: நானே கொலை வெறில இருக்கேன். யாராவது என்னைப் பத்தி பேசினீங்க. என் பேருக்கேத்த மாதிரி மாறிடுவேன்

”மின்னல் வரிகள்”கணேஷ் :என்ன சோகம் ஆவி!

ஸ்கூல் பையன்: ம்ம் அவன் ஆளு நஸ்ரியா நடிச்ச படம் ஏதும் வரலியாம்!! அதான். விடு ஆவி.., தமிழ்ல வராட்டி என்ன!? மலையாளத்துல ஒரு படம் வந்திருக்கு. அதைப் பார்த்து மனசு ஆத்திக்கோ!

ஆவி: ம்க்கும், என்ன இருந்தாலும் தாய் மொழிப்போல வருமா!?

ஸ்கூல் பையன்: அடப்பாவி, உன் மொழிப்பற்றை காட்ட வேண்டிய நேரமா இது!?

”மின்னல் வரிகள்”கணேஷ் : நல்லா வாய்ச்சிருக்கானுங்கப் பாரு எனக்குன்னு. ஏர்ல பூட்டுன எருமைங்க மாதிரி. நீங்கதான் இப்படின்னா, கரும்பு, அரிசி, வெல்லம், நெய்லாம் வாங்கப்போன நம்ம ஆஃபீசர் என்ன ஆனார்ன்னு தெரியலியே! 5 பொருளை வாங்கி வர மூணு மணி நேரமா!?

நாய் நக்ஸ்: பர்ச்சேஸ் பண்ணப் போன இடத்துல கரும்பு, மஞ்சள் எங்க விளைஞ்சது!? வெல்லத்துல ஈ மொய்ச்சதுன்னு சொல்லி கடைக்காரனை ரெய்டு விட்டுக்கிட்டு இருக்கார். இப்பதான் போன்ல சொன்னார்.

”மின்னல் வரிகள்”கணேஷ் : அப்படியா!? பொங்கல் அதுவுமா ஒரு ஆச்சர்யம் நீங்க போன் போட்டு பேசி இருக்கீங்க பாரு நக்ஸ்!!

நாய் நக்ஸ்: நான் போன் போட்டதா சொன்னேனா!? வழக்கம்போல மிஸ்டு கால் விட்டேன். சண்டைக்கு நடுவால ஆஃபீசர் போன் பண்ணி சொன்னார்.

”மின்னல் வரிகள்”கணேஷ் : அதானே பார்த்தேன். நீங்கதான் போன் பண்ணி பேசிட்டீங்களோன்னு!!  பொருட்கள்லாம் வாங்க யாரை அனுப்புறதுன்னு தெரியலியே!

வெங்கட் நாகராஜ்: நான் வேணுமின்னா கடைவீதிக்கு போய் பொருட்கள் வாங்கி வரவா!? 

”மின்னல் வரிகள்”கணேஷ் : நீங்க பொறுப்பானவர்தான். போய் வாங்க. ஆனா, உங்க காதை அங்க இங்க கதைக் கேட்க அனுப்பாம போனமா வந்தமான்னு இருக்கனும். இப்பவே நல்ல நேரம் போய்க்கிட்டு இருக்கு. 

ரூபக் ராம்: எங்களையே வெரட்டிக்கிட்டு இருக்கீங்களே! உங்க ஆசைத்தங்கச்சி ராஜி சும்மாதானே இருக்காங்க. அவங்களைக் கூப்பிட்டு வேலை வாங்குங்களேன்.

ராஜி: ஹலோ! நான் ஒண்ணும் சும்மா இல்ல ரூபக். நீங்கலாம் பொங்கல் வைக்கும்போது எனக்கு செமத்தியான வேலை இருக்கு. அதனால நான் முன்கூட்டியே ரெஸ்ட் எடுத்துக்குறேன்.

மதுரை தமிழன்: எல்லாம் வாங்கி வந்து, மொழுகி, கழுவி நாங்கலாம் பொங்கல் வைக்கும்போது மேடத்துக்கு என்ன வேலை இருக்கு? பதிவு தேத்த போட்டோ எடுக்குறதும், குறிப்பெடுக்குறதும்தானே!

ராஜி:!!!!!!!!!!!!!!!!!??????

”மின்னல் வரிகள்”கணேஷ் : ராஜி வாயை அடைக்க பெரிய அண்ணன் என்னால ஆகலைன்னாலும், சின்ன அண்ணன் மதுரை தமிழ்னால மட்டும்தான் முடியுது...

ராஜா: இப்படியே பேசிட்டு இருந்தே சாயந்தரம் ஆகிடுச்சு. இனி எங்க பொங்கல் வச்சு சாப்புடுறது!? வயத்துக்குதான் ஒண்ணும் கிடைக்கலை. காதுக்காவது பொங்கல் கிடைக்கட்டும். எல்லோரும் சத்தமா சொல்லுங்க பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!!
பொங்கலோ பொங்கல்!!
பொங்கலோ பொங்கல்!!
பொங்கலோ பொங்கல்!!
பொங்கலோ பொங்கல்!!

25 comments:

 1. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி சரவணன்

   Delete
 2. நானாவது கொஞ்சம் பேசுவேன், இந்த ரூபக்கு பேசவே மாட்டாரே...

  ReplyDelete
  Replies
  1. என்னதான் அண்ணாக்கள் பாசமா இருந்தாலும் தம்பிகளுக்கு பயமிருக்கும். ஆனா, அக்காக்கள்கிட்ட பயத்தோடு பாசமும் உரிமையும் இருக்கும். அதான் இங்க ரூபக் பேசி இருக்கார்.

   Delete
 3. வழக்கம் போல பதிவர்களை வைத்து கல கல பொங்கல் கொண்டாடிட்டீங்களே, பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்,

  ReplyDelete
  Replies
  1. பதிவை ரசித்தமைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி சகோ!

   Delete
 4. எனதினிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. நஸ்ரியா படம் வரலேன்னா என்ன.. தல படம் வந்திருக்கே..

  ReplyDelete
 6. கலாட்டா பொங்கல்..!

  ReplyDelete
 7. இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள் தங்கச்சி !....பாத்தீங்களா
  இங்கேயும் அக்காவுக்கு காலில் மேஜர் அறுவைச் சிகிச்சை
  நடைபெறப் போகுது அவளே ஓரிரு மாதங்களுக்கு இந்தப்
  பக்கமே வர முடியாத சூழநிலையில் இருப்பதைப் புரிந்து
  கொண்டு எந்த வேலைக்கும் என்னைக் கூப்பிடவே இல்லை
  பாசம் என்றால் இது தான் பாசம் இலையா ?..)))).போன தடவை உங்கள்
  அம்மாவுக்குக் கூட இந்த அறுவைச் சிகிச்சை நடந்தது இல்லையா ?..
  நானும் போகின்றேன் வருகின்ற 24 தை முதல் .இதுக்காக ஒண்ணும்
  கோயில் குளமென்று ஏறி இறங்க வேண்டாம் சொல்லிப் புட்டேன் :)))

  ReplyDelete
 8. கல கல பொங்கல்...

  தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
 9. அக்கா பொங்கல் வாழ்த்துக்கள் . என்னைய விட்டுடீங்க பாத்திகளா . நானும் என் ஆவி அண்ணா கூட சோகமா போய் உக்காந்துக்குறேன் :(((((((((

  ReplyDelete
 10. அடுத்த பதிவர் மாநாட்டில் இந்த சமத்துவப் பொங்கலையே நாடகமாகப் போடலாம். இதில் வரும் பதிவர்களே அவரவர் பாத்திரஙளை ஏற்று நடித்தால் இன்னும் நன்றாக இருக்கும்!
  சகோதரி ராஜிக்கும் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. பொங்கலுக்கு சக்கரை பொங்கல் பண்ணுவாங்கன்னு கேள்விபட்டு இருக்கேன் ஆனா இங்க ஒரு அம்மா வாயிலேயே சக்கரைப் பொங்கல் பண்ணி எல்லோறையும் மகிழ்வித்து இருக்காங்க... எங்க ஊருல இதை பொங்கலுன்ன்னு சொல்ல மாட்டாங்க அல்வா கொடுக்குறதுன்னு சொல்லுவாங்க....

  ReplyDelete
 12. பொங்கலுக்கு எங்களை கூப்பிட்டு அல்வா கொடுத்திருக்காங்க இதுக்கு போய் கோவிச்சுகிட்டு இருக்கீங்க. இல்ல உங்களுக்கு அல்வாதான் வேணுமுன்னா ஆபிஸருக்கு ஒரு போனை போடுங்க

  ReplyDelete
 13. சமத்துவ பொங்கல் அசத்தல் ஆனால் கடைசிவரை பொங்கல் சாப்பாட்டை கண்ணுல காட்டலையே அவ்வ்வ்வ்....

  இனிய பொங்கல் வாழ்த்துக்கள் யாவருக்கும்....

  ReplyDelete
 14. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
  சமத்துவ பொங்கல் வைக்காமல் ஒருவரை ஒருவர் நன்றாக வாரி இருக்கிறீர்கள்... ஹா... ஹா...

  ReplyDelete
 15. சமத்துவ பொக்கல் சூப்பர் கமடி. பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. செம கும்மி தானுங்கோ.. மிகவும் அருமையான பதிவு. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. பொங்கலை வைத்து இப்படியெல்லாம் காமெடி பண்ண முடியும், இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.
  தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி

  ReplyDelete
 18. ரொம்ப அருமையான ரசனையான நகைச்சுவைப்பதிவு!!! சூப்பர்! நல்ல பதிவு!!!

  வாழ்த்துக்கள் சகோதரி!!

  துளசிதரன், கீதா

  ReplyDelete
 19. பொங்கலுக்கு எங்களையும் இழுத்தாச்சா.... சரி சரி.

  மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.....

  ReplyDelete
  Replies
  1. இபி நீங்கலாம் இல்லாம ஒரு கொண்டாட்டமா!? வாய்ப்பே இல்ல சகோ!

   Delete