Saturday, January 25, 2014

மனைவின்னா போகப்பொருளா!? - கேபிள் கலாட்டா

பாப் பாடல்கள்ன்னாலே ஆங்கிலத்துல இரைச்சலும், காதலும், காமமும் பொங்கி வழியும்ன்னு பொதுவா ஒரு கெட்டப்பேர் இருக்கு. சில தமிழ் பாப் பாடல்கள் வந்தாலும் மக்கள் மனசுல அவ்வளவா பதியலை/ அதுலயும் ஆங்கிலம் கலந்துதான் வந்திருக்கு. ஆனா, மக்கள் டிவில பாப் பாடல்கள் தமிழ்ல ஒளிப்பரப்பாகுது. அம்மாவைப் (அந்த அம்மா இல்லீங்கோ! பெத்த அம்மா)  பற்றிய பாடின எல்லோருக்கும் புரியுற மாதிரியும் நல்ல கருத்தாழம் மிக்கதா இருந்துச்சு. புதிய முயற்சிக்கு பாராட்டுகள்.


சன் டிவில சொல்லுங்கண்ணே! சொல்லுங்க!ன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. அதுல ஒரு பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளை வச்சு ஒரு நிகழ்ச்சி நடந்துச்சு. உங்களுக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்கனும்ன்னு கேட்ட கேள்விக்கு எல்லா மாணவர்களும், அழகா இருக்கனும், படிச்சு வேலைக்கு போகனும், பணக்கார பொண்ணா இருக்கனும்ன்னு சொன்னாங்க. அதேப்போல மாணவிகளை கேட்ட போது, வீட்டு வேலைகளை செய்யனும், பணக்காரனா இருக்கனும்ன்னுதான் சொன்னாங்களே தவிர ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கனும், விட்டு கொடுத்து போற நல்லவரா இருக்கனும்ன்னு யாருமே சொல்லல.

மனைவின்னா போகப்பொருளாகவும், வாழ்க்கைத்தரத்தை உயர்த்துற ஒரு ஏணியாக மட்டுமே பார்க்கும் ஆண்களையும், கணவன்ன்னா சம்பாதிச்சு போட்டு வீட்டு வேலைகளை செஞ்சு நோகாம வச்சிருக்கும் ஒரு மெசினா பார்க்கும் பொண்ணுங்களையும் பார்க்கும்போது எரிச்சலாதான் வருது. இது மாதிரியான படிச்ச முட்டாள்களை என்ன செய்வது!? இவங்கலாம் படிச்சு என்ன சாதிக்க போறாங்க!?

புதிய தலைமுறை சேனல்ல சனிக்கிழமை ராத்திரி 8.30க்கு கொஞ்சம் சோறு வரலாறு நிகழ்ச்சி போடுறாங்க. பார்க்க தவறவிட்டவங்களுக்காக ஞாயிறு மதியம் மீண்டும் ஒளிப்பரப்புறாங்க. மக்கள் டிவில போட்ட அதே நிகழ்ச்சிதான் இப்ப புதிய தலைமுறை டிவில வருது.

உணவும் உணவு சார்ந்த வரலாறும்... வரலாறும் வரலாறு சார்ந்த உணவும் ஒரு ஊரின் சிறப்பு உணவுகள், அவ்வூரின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், தெரு ஓர உணவுகள், அது சார்ந்த சுவாரஸ்யமான வரலாற்று பின்னனிகளும் இந்நிகழ்ச்சில வருது. எதாவது ஒரு உணவு, அதன் வரலாறு, அதன் செய்முறைகள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறுது.

பரோட்டா, அல்வா, பிரியாணி, சப்பாத்தி, கூட்டு, அதிரசம்ன்னு எல்லா வகையான சாப்பாடு பத்தியும் விளக்கமா சொல்றார். ரெண்டு வருசத்துக்கு முன்  முதன் முதலா மக்கள் டிவில இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்போது நம்ம கோவை நேரம் ஜீவாதான் நிகழ்ச்சி வழங்குறாரோன்னு நினைச்சுப்பேன். ஜீவாக்கிட்ட முதன்முதலா பேசும்போதும் நீதானா ஜீவான்னும் கேட்டு தெளிவுப் படுத்திக்கிட்டேன். மிஸ் பண்ணக்கூடாதுன்னு நினைக்கும் நிகழ்ச்சி. ஆனா, சனி, ஞாயிறுங்குறதால கண்டிப்பா மிஸ் பண்ணிடுவேன். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குறவர் பேர் தெரியாது. ஆனா, குரல் வளம், நிகழ்ச்சி பங்களிப்புலாம் பிரமாதமா இருக்கும்.


சன் டிவில தெய்வ மகள்ன்னு ஒரு சீரியல். மத்த சீரியல்கள் விட இது கொஞ்சம் பெட்டர். அழுகாச்சி, பெண்கள் வெடிகுண்டு, விஷம்லாம் அசால்ட்டா யூஸ் பண்ணுறதுன்னு இல்லாம பெண்களுக்கே உண்டான பொறாமை, கோள் மூட்டுற குணங்களோடு கதை நகருது. ஹீரோயின் தன் கணவருக்கு தெரியாம தன் நகைகளை தங்கச்சிக்கிட்ட கொடுத்துட்டு வந்துட்டதால அவ வீட்டுக்காரரோட சண்டைப் போட்டு அம்மா வீட்டுக்கு வந்துடுறா. அங்க, அவ அம்மா பொண்ணுக்கு கொம்பு சீவி விடாம, கல்யாணம்ன்னா என்ன!? கணவன், மனைவின்னா என்ன!? ஏன் விட்டுக் கொடுத்து போகனும்? எதனால குடும்ப உறவு வந்துசு!? நீ மாப்ளை சொல் பேச்சு கேட்டு நடன்னு அழகா சொல்லி தன் பொண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்புறாங்க. இந்த காலத்துல எந்த அம்மா தன் பொண்ணு செஞ்சது தப்புன்னு சொல்வாங்க!?

கேபிள் கலாட்டா தொடரும்.....,

24 comments:

  1. இதுக எல்லாம் எங்கே உருப்பட போகுது...

    +1 தமிழ்மணம் இணைத்து விட்டேன்... உங்களின் தகவலுக்கு சகோ...

    ReplyDelete
    Replies
    1. யாரை திட்டுறீங்கண்ணா!? நிகழ்ச்சில கலந்துக் கொண்ட பசங்களையா!? இல்ல நிகழ்ச்சி பார்த்த என்னையா!?
      தமிழ்மணம் இணைப்பிற்கு நன்றிண்ணா!

      Delete
    2. நிகழ்ச்சி பார்த்த உங்களை திட்ட முடியுமா?

      Delete
  2. இளைய தலைமுறைக்கு புரியுற மாதிரி சொல்லுங்க ..மேடம் ...சொல்லுங்க !
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. சொல்றேனுங்க சகோ!

      Delete
  3. // ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கனும், ////
    இப்படி சொல்லுவது எளிது....சந்தர்ப்பங்களும் சூழ்நிலையும் மனிதரின் மனத்தை மாற்றிக் கொண்டே இருப்பதால் ஒருத்தரை ஒருத்தர் எளிதில் புரிஞ்சுக்கிடவே முடியாது

    //விட்டு கொடுத்து போற நல்லவரா இருக்கனும்ன்னு யாருமே சொல்லல.///
    ஏமாளியா இருக்கணும் என்று சொல்லுறீங்க

    ReplyDelete
    Replies
    1. நல்லதுக்கு விட்டுக் கொடுத்து போகலாம். எல்லாத்துக்கும் விட்டுக் கொடுத்துப் போய் சுயம் தொலைக்க வேண்டாமே!

      Delete
  4. ///இவங்கலாம் படிச்சு என்ன சாதிக்க போறாங்க!?//
    இந்த தலைமுறை படிப்பது நல்லவேலை பெறவே அதுதான் அவர்கள் சாதிப்பது கல்வி கூடங்களில் இதைதானே சொல்லித் தருகின்றனர் அது மட்டுமல்லாமல் எத்தனை பெற்றோரகள் ஒழுக்கத்தை கற்றுத் தருகின்றனர் & ஒழுக்கத்தோட இருக்கின்றனர். அவர்களை பார்த்து வளரும் குழந்தைகள் வேறு எப்படி வளரும்

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் வேலைத் தேடும் செம்மறி ஆடுகளைதான் நம் கல்வி முறை வளர்க்கிறது!!

      Delete
  5. நிகழ்ச்சிகளில் பிளஸ் மைனஸ் சொன்ன விதம் நல்லா இருக்கு. பொதுவா டிவி நிகழ்ச்சிகள் நம் நேரத்தை விழுங்கி வீணடிப்பவையாய்த்தான் இருக்கின்றன.. சில நிகழ்ச்சிகளைத் தவிர.

    ReplyDelete
    Replies
    1. சீரியல்கள் மட்டுமில்ல. நிறைய நிகழ்ச்சிகள் இப்படி மொக்கையாதான் வருது.

      Delete
  6. ”சொல்லுங்கண்ணே சொல்லுங்க” நிகழ்ச்சியை சில சமயம் கையில் ரிமோட் கிடைக்கும் போது பார்த்திருக்கிறேன்...

    நல்லா படிச்சவங்களா இருப்பாங்க... கேட்கிற கேள்விக்கு சம்பந்தமேயில்லாம பதில் சொல்வாங்க... இப்படிப்பட்ட முட்டாள்களா? இல்லை நிகழ்ச்சியின் சுவாரசியத்துக்காக இப்படி சொல்கிறார்களா? என யோசிப்பேன்...:))

    கேபிள் கலாட்டா சுவாரசியம்...

    ReplyDelete
    Replies
    1. அதனாலயே அதன் சுவாரசியத்தை இழக்குதான்னும் தெரியல!!

      Delete
  7. நல்ல ப்ரொகிராமா தேடி பார்த்திருக்கீங்க! நல்ல விமர்சனம்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்கருத்துக்கும் நன்றிங்க ச்கோ!

      Delete
  8. படிக்கிற காலத்தில அழகை எதிபார்க்கும் இளம்ஜோடிகள் அழகு மாத்திரம் வாழ்க்கை இல்லைன்னு தெரிய வரும் போது இகோ அது வெங்காயம் வெள்ளபூண்டுன்னு சிக்கி பிரிஞ்சுராங்க காரணம் விட்டுகொடுக்கும் மன நிலை இல்லாததுனால நல்ல சொன்னிர்கள் ...

    ReplyDelete
  9. எப்படிங்க உங்களால இந்த அழுகாச்சி சீரியல் எல்லாம் பார்க்க முடியுது.

    ReplyDelete
    Replies
    1. பதிவு தேத்ததான். அந்த நேரத்துலதான் நான் எம்ப்ராய்டரி, கிராஃப்ட்லாம் செய்வேன் அதான்

      Delete
  10. நல்ல அலசல்.... தொடரட்டும் கேபிள் கலாட்டா.

    ReplyDelete
  11. கேபிள் கலாட்டா நல்லதொரு அலசல்! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete