Friday, October 15, 2010

கவிதைனா என்ன?

என் சின்ன பொண்ணு கவிதைனா என்ன? னு கேட்டாள்.

நிலா, ஐந்து நட்சத்திரம், சூரியன், பூமி, ஆகாயம்,கொஞ்சம் மழை, மேகம், வானம், பத்து பூ , ஒரு கட்டு புல்லு, அம்மா, காதலி, ஆசை, உயிர், உடல், கல்லறை, முத்தம், மரணம், பிறப்பு, மூச்சு, கடல், அலை, கரை, ஆறு, குளம், பனித்துளி...., (ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் அப்பா இப்பவே கண்ணை கட்டுதே) இந்த வார்த்தைல்லாம் மிக்சில போட்டு அடிச்சு ஒரு கிளாஸ்ல வடிகட்டி, அடைப்புக்குறி, நிறுத்தற்குறி, கமா, கால் புள்ளி, ஆச்சர்யக் குறி, கேள்விக்குறிலாம் போட்டு அலங்கரித்து பேப்பர்ல வாந்தி எடுத்தா அதுதான் கவிதை னு சொன்னேன்.

கவிதை னா எப்படி இருக்கணும்? ( இதெல்லாம் ரூம் போட்டு யோசிக்குமோ?)
இது ஒரு நல்ல கேள்வி,

1.தலைப்பு கண்டிப்பா புரியக் கூடாது,

2.தலைப்புக்கும், உள்ள இருக்குற கருத்துக்கும் சம்பந்தமே இருக்க கூடாது.

3.ஒரு வாக்கியமும் மூன்று வார்த்தைகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

4.ஒவ்வொரு வாக்கியமும் ஒன்றின் கீழ் ஒன்று இருக்க வேண்டும்,

5.ஒவ்வொரு வரியும் இடம் விட்டு இடம் விட்டு இருத்தல் வேண்டும்,

6.கண்டிப்பாக வரி முடியும்போது கமா, கேள்வி, ஆச்சர்யக்குறி போன்றவை இருத்தல் வேண்டும்,

7.அம்மா சமைப்பது அடுப்பில்,

படகு செல்வது துடுப்பில்,

குழந்தை இருப்பது இடுப்பில்

நான் இருப்பதோ கடுப்பில்,


8.னு சம்பந்தமே இல்லைனாலும் எதுகை மோனை வேண்டும்.

9.கவிதா, கவி தா னு கறிக்கடைக்காரன் மாதிரி வார்த்தைகளை துண்டு போடத் தெரிஞ்சு இருக்கணும்.

10.கண்டிப்பாக புளிமா, தேமா, மாத்திரை போன்றவை இருத்தல் கூடாது.

இப்படியெல்லாம் இருந்தாதான் அது கவிதைன்னு சொன்னேன். o.k ஆகா மொத்தம் இலக்கணத்துக்குள் அடங்காததெல்லாம் கவிதை னு இப்போ எனக்கு புரிஞ்சு போச்சு. என்ன நான் சொன்னது சரியா? இது எனக்கு தோணியது இன்னும் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்...,



2 comments:

  1. Kadaisiyil kavithai na ennanu sollave illaye

    ReplyDelete
  2. Variety is the spice of life.

    -----------------------------------

    ReplyDelete