Saturday, July 06, 2013

நட்பிற்கு ஏது எல்லைக்கோடு??!! - பாட்டி சொன்ன கதை


பாத்த்த்த்த்தீ!

வாடி தங்கம். ஹோம் வொர்க்லாம் முடிச்சுட்டியா?

ம்ம்ம் முதித்தேன் பாத்தி. 

சீனு எங்கே?!

அம்மா! கிச்சன்ல வச்சிருந்த ஹனியை சாப்பித்து, தலையில் ததவிக்கித்தானாம். அவன் முதிலாம் வெள்ளையாக போகுதுன்னு அழுறான் பாத்தி.

அச்சச்சோ! அப்படிலாம் ஒண்ணும் கிடையாது. அது யாரோ சும்மா லுல்லாயிக்கு சொன்னது. அதை உண்மைன்னு நம்பிட்டானா?! சீனு! சீனு! இங்க வா! அழாத. நீ நினைக்குற மாதிரிலாம் எதும் நடக்காது. ஹனி  உடம்புக்கு நல்லதுடா.

அப்படியா! எனக்கு முடி நரைக்காதே!?

ம்ஹ்ஹூம், ஹனிக்கு தமிழ்ல ”தேன்”ன்னு பேரு. அது, எவ்வளாவு சாப்பிட்டாலும், எப்போ சாப்பிட்டாலும் ஈசியா டைஜஸ்ட் ஆகிடும். அதனாலதான் அந்த காலத்துல மருந்தை தேன்ல கலந்து குடுத்தாங்க.

"Honey Bee"க்கு தமிழ்ல ”தேனீ”ன்னு பேரு. இந்த தேனீதான், பறந்து போய் ப்வுல இருந்து தேனை எடுத்து வரும். எந்த செடியோட பூவில இருந்து தேன் எடுக்குதோ?! அந்த செடியில இருக்குற சத்துலாம் அந்த தேன் ல இருக்கும்ன்னு சொல்றங்க.

கொம்பு தேன்,  மலைத்தேன்,  மரப்பொந்து தேன்,. மலைத்தேன், . புற்றுத்தேன்,  புதிய தேன்,  பழைய தேன்”ன்னு பல வகைல கிடைக்குது. தேன் எவ்வளவு வருசமானாலும் கெடாது. அதனாலதான் அதை, பூஜைக்கும், மருந்தைக் கரைக்கவும் யூஸ் பண்றாங்க.நீங்க பொறந்ததும், பேரு வைக்குர ஃபங்க்‌ஷன் போது உங்க நாக்குல தேன் தடவுனாங்க. அதனால, நாக்குல இருக்குற ஒரு நரம்பு தூண்டி சீக்கிரமே உங்களுக்கு பேச்சு வந்துடுச்சு.

ஓ! இவ்வளவு நல்ல விஷயம் இருக்கா பாட்டி. இது தெரியாம அழுதிட்டேனே! சரி நீ கதை சொல்லு பாட்டி...  

                               

ம்ம்ம்ம்ம்..., ஒரு ஊருல ஒரு ராஜாவாம். அந்த ராஜாவோட பேலஸ்ல ஒரு பட்டத்து யானை இருந்துச்சாம். 

”பட்டத்து யானை”ன்னா என்ன பாட்டி?!

அதாவது,  ராஜாவும், ராணியும் ஏறி சுத்தி பார்க்க போறதுக்குன்னு தனியா ஒரு யானையை பேலஸ்ல வளார்ப்பாங்க. ராஜாவுக்கு தர்ற அதே மரியாதையை அந்த யானைக்கும் குடுப்பாங்க. அரண்மனைல இருந்ததால நல்ல கவனிச்சுப்பாங்க அந்த யானையை, சத்தான சாப்பாடு, உடம்புக்கு முடியலைன்னா டாக்டர்ன்னு இருக்கு. அப்படி இருந்ததால, அந்த பட்டத்து யானை நல்லா பெரிய தந்தத்தோட, நல்லா கொழுத்து அழகா, கம்பீரமா இருந்துச்சு. அதுமேல போறதை பெருமையா நினைச்சுப்பான் அந்த ராஜா. 

அந்த யானையை கட்டிப்போடுற லாயத்துல ஒரு நாய் ஒண்ணு வந்திட்டுது. சரியா சாப்பாடு கிடைக்காம அது எலும்பும் தோலுமா இருந்துச்சு. யானை சாப்பிடும்போது, சிந்துனது சிதறுனதுலாம் சாப்பிட்டு பசியாறுச்சு.அதை பார்த்து இரக்கப்பட்ட யானை, நிறைய சாப்பாட்டை கீழ சிந்த ஆரம்பிச்சுது. அந்த நாயும் அதைலாம் சாப்பிட்டு நல்லா கொழுகொழுன்னு வர ஆரம்பிச்சுட்டுது.  

ரெண்டும் திக் ஃப்ரெண்ட்ஸ் ஆனாங்க. அரண்மனை சாப்பாடு சாப்பிட்டதால நல்லா கொழுக் மொழுக்ன்னு அழகா மாறிடுச்சு அந்த நாய். அரண்மனைக்கு ஏதோ வேலையா வந்த பெரிய பணக்காரன் ஒருத்தன் இந்த நாயை பார்த்து ஆசைப்பட்டு பாகன்கிட்ட, என் பசங்க வளர்க்க நாய் வேணும்ன்னு ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருக்காங்க. இந்த  நாய் நல்லா இருக்கு. அதனால, அதை எனக்கு குடு. உனக்கு பணம் தரேன். ப்ளீஸ்ன்னு கேட்டான். பணத்துக்கு ஆசைப்பட்ட பாகன் அந்த நாயை குடுத்துட்டான். 

தன் ஃப்ரெண்டை மிஸ் பண்ணிட்ட யானை, அன்னில இருந்து சாப்பிடல, சரியா தூங்கலை. எப்பவும் அழுதுக்கிட்டே இருந்துச்சு. இப்படியே நாட்கள் போச்சு. மெல்ல மெல்ல யானை இளைச்சு, படுத்த படுக்கையா போச்சு.

ஐயோ பாவம் அந்த யானை பாத்தி.

ஆமாண்டி செல்லம். இதை கேள்விப்பட்ட ராஜா அரண்மனைல இருக்குற டாக்டர்களை வரச்சொல்லி யானைக்கு ட்ரீட்மெண்ட் பார்த்தார். ராஜா! யானைக்கு எந்த நோயும் இல்ல. ஏன் இப்படி இருக்குன்னு தெரியலை. எப்பவும், கூடவே இருக்குற பாகன்கிட்ட கேளுங்க. அவனுக்குதான் என்னன்னு தெரியும்ன்னு சொல்லிட்டாங்க..

ராஜா யானைப்பாகனை வரவச்சு, என்ன நடந்ததுன்னு உண்மையை சொல்லுன்னு மிரட்டுனாரு. வேற வழியில்லாம அவன், ராஜா1 இங்க ஒரு நாய் சுத்திக்கிட்டு இருந்துச்சு. அதோடதான் நம்ம பட்டத்து யானை வெளையாடும், சாப்பிடும் . தூங்கௌம். அந்த நாயை பணத்துக்கு ஆசைப்பட்டு வித்துட்டேன். என்னை மன்னிச்சிடுங்கன்னு சொல்லி அழுதான்/

அந்த நாயை வாங்கி வரச் சொல்லி ஆட்களை அனுப்பினான் ராஜா.  நாயை கொண்டு வந்ததும் யானைக்கிட்ட கொண்டு போனான் ராஜா. யானைக்கிட்ட மெல்ல அசைவு வந்திச்சு.

ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய், யானை நல்லாகிடுமா பாட்டி?!

தன் தும்பிக்கையால நாயை தடவுச்சு யானை. ரெண்டுத்து கண்ணுலயும் தண்ணி கொட்டுச்சு. வாயில்லா ஜீவன்களாச்சே! தன்னோட ஃபீலிங்க்ஸை எப்படி சொல்லும்?! 

இதை பார்த்த எல்லாரும் வாயடைச்சு போய் நின்னுட்டாங்க. விலங்குகளுக்குள் இப்படி ஒரு நட்பா?! இனி நாயை, எக்காரணம் கொண்டும் யானைக்கிட்ட பிரிக்க கூடாதுன்னு சொல்லிட்டு , இனி பட்டத்து யானை பழைய மாதிரி அழகா, கம்பீரமா மாறிடும்ன்னு நம்பிக்கையோட அரண்மனைக்குள் போனார்.

இதிலிருந்து நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது. தூய நட்புக்கு இனம், மொழி, உருவம், அந்தஸ்துன்னு எதும் தேவை இல்லை. நட்புக்கு எந்த எல்லைக்கோடும் இல்லை. மனசுல அன்பிருந்தா ஒரு கிளிக்கிட்டயோ இல்ல ஒரு ஆட்டுக்குட்டி கூட நீங்க ஃப்ரெண்டா இருக்கலாம். 

புரிஞ்சுது பாட்டி, நாங்க போ டிவி பார்க்க போறோம். பை பாட்டி!

ரொம்ப நேரம் டிவி பார்க்காம சமர்த்தா சாப்பிட்டு, கொஞ்சம் வாக் போய்ட்டு படுங்க. 

ஓக்கே பாத்தி. பை! பை!

17 comments:

  1. //ஒரு ஊருல ஒரு ராஜாவாம்//

    அது நாந்தானே???????/

    ReplyDelete
  2. //ஒரு ஊருல ஒரு ராஜாவாம்//


    ”//பட்டத்து யானை”ன்னா என்ன பாட்டி?!///

    பட்டத்து யானைன்னா சென்னை பல்கலைகழகத்தில் பட்டம் வாங்கிய யானை என்று அர்த்தம் இது கூட பாட்டிக்கு தெரியலை...

    அட யாரவது யானை போய் அங்க படிச்சுச்சா என்று கேட்க கூடாது அரசியல் தலைவர்கள் நடிகர்கள் என்ன பல்கலைகழகம் போய்யா டாக்டர் பட்டம் வாங்கினாங்க...அவங்க் பெரிய ஆளா இருந்ததுனாலதானனே பட்டம் தந்தாங்க அது போல யானையும் மிகப் பெரிசுதானே அதனாலதான் யானையும் அங்கே பட்டம் வாங்கியது

    இதை படித்துவிட்டு இந்த மதுர ரொம்ப அறிவாளி என்று புகழ்ந்து பாராட்டுக் கூட்டத்திற்கு ஏற்பாடு எல்லாம் பண்ணிடாதீங்க மக்களே

    ReplyDelete
  3. //யானை. ரெண்டுத்து கண்ணுலயும் தண்ணி கொட்டுச்சு.//

    ஜெயா அம்மா ஊருக்கு இப்படி ஒரு யானையையும் நாயையும் வளர்த்து இப்படி அடிக்கடி பிரிச்சு சேர்த்து வைத்தாங்கன்னா தமிழ்நாட்டுல தண்ணிர் பஞ்சம் தீர்ந்துடுமே

    ReplyDelete
  4. அழகான கதை.... எனக்கு என் தாத்தா சொன்ன கதை நினைவிற்கு வருகிறது...

    சில எழுத்துப் பிழைகள் உள்ளது போல் தெரிகிறது.... த.ம: 2

    ReplyDelete
  5. ///இதிலிருந்து நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது.////

    ராஜி பாட்டிக்கு பொழுது போகலைன்னா குழந்தைக்கு கதை சொல்லுவது போல நமக்கு கதை சொல்லுவாங்க...

    ராஜி பாட்டி எங்க்கு ஒரு சந்தேகம் மாதிரி கதைகலையெல்லாம் குழந்தைகளுக்குதான் சொல்லுறீங்களா அல்லது எங்களை குழந்தையாய் நினைச்சு சொல்லுறீங்களா?

    ReplyDelete
  6. மீதி கலாய்ப்பை உங்கள் பதில் பார்த்து போடுறேன்

    ReplyDelete
  7. ரெண்டுத்து கண்ணுலயும் தண்ணி கொட்டுச்சு.//என்னது மெட்ரோ வாட்டரா!!!! பாசக்காரப் பயபுள்ளங்களா இருக்கும் போல.... தூய நட்புக்கு இனம், மொழி, உருவம், அந்தஸ்துன்னு எதும் தேவை இல்லை// உண்மைதான்...

    ReplyDelete
  8. ஆமாமா புதுமனைப் புகுவிழா போன்ற நல்ல விஷயங்களுக்கு நண்பர்களை அழைத்தால் செலவாயிடும்.அதுக்கெல்லாம் யாரையுமே அழைக்காத நடப்பு எப்படி?

    ReplyDelete
  9. செம்ம கலாய் கலாய்ச்சிருக்கீங்க...

    ReplyDelete
  10. கதை மிக நன்றாக இருக்கிறது.
    குழந்தைகளுக்கு நட்புக்கு இலக்கணம் சொன்ன பாட்டி வாழ்க!
    தேன் பற்றிய தகவல் அருமை.

    ReplyDelete
  11. அருமை. நட்பிற்கு எல்லைதான் ஏது?

    ReplyDelete
  12. நட்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்"ன்னும் சொல்லலாம் இல்லையா....அருமை...!

    ReplyDelete
  13. தேன் வகை சொல்லும்போது பாட்டி கொஞ்சம் தூங்கிட்டாங்க போல! மலைத்தேன் இரண்டு தடவை வந்திருக்கே! :)

    நல்லா இருக்கு நட்பின் ஆழம் சொல்லும் கதை. தொடருங்க!

    ReplyDelete
  14. கதை நன்றாக இருந்தது பாட்டி... ஓ மன்னிச்.. ராஜி மேடம்.

    ReplyDelete
  15. நட்பிற்கு இனம் மட்டுமில்லை,எல்லையும் கிடையாது,நீள்கிற உணர்வுகளின் ஈரம் சுமந்த மனித மனது.

    ReplyDelete