Thursday, June 01, 2017

ஜீன்ஸ் பேண்டை இப்படியா செய்வாங்க?! - கைவண்ணம்

பழைய  துணிகள் நல்லா இருக்கும்பட்சத்தில்  யாருக்காவது கொடுத்துடுறதும்  அப்படி இல்லன்னா பாத்திரக்காரருக்கு கொடுத்துடுறது வழக்கம்.  என் பையனோட ஜீன்ச் ஃபேண்டை கிரிக்கெட் விளையாடி கிழிச்சுட்டு வந்ததால யாருக்கும் கொடுக்காம வச்சிருந்தேன். வெளில வீசவும் மனசு வரல. 

யூட்யூப்ல சுத்திக்கிட்டிருக்கும்போது ஜீன்ஸ் பேண்ட்ல மிதியடி செஞ்சதை பார்த்தேன். உடனே செஞ்சும் பார்த்துட்டேன். இப்ப்பலாம் பழைய பேண்டை யாருக்கும் கொடுக்குறதும் இல்ல. மிதியடி வாங்குற செலவும் மிச்சம்.  செய்முறை இதோ....

தேவையான பொருட்கள்;
பழைய ஜீன்ஸ் 2 நிறங்களில்...
பழைய புடவை... 
கத்திரிக்கோல்,   
ஒரு நியூஸ்  பேப்பர்ல உங்களுக்கு தேவையான அளவுக்கு வட்ட வடிவில்  வெட்டிக்கனும்.
அந்த பேப்பரை நாலு முறை மடிச்சுக்கனும். நாலு முறை மடிக்கும்போது பேப்பர் எட்டு பகுதியா பிரியும்.  அப்படி மடிக்கும்போது கிட்டத்தட்ட முக்கோண வடிவத்தில் வரும். 
அந்த பேப்பர் முக்கோணத்தை ஜீன்ஸ் பேண்ட் துணில வச்சு ஒவ்வொரு வண்ணத்துலயும் நாலு முக்கோணம் வெட்டிக்கனும்.  முக்கோணத்தை விட அளவு கொஞ்சம் அதிகமா வெச்சு வெட்டிக்கோங்க.  தையலுக்கு துணி வேணும்ல்ல..
ஒவ்வொரு கலர்லிருந்து ஒவ்வொரு துணியை எடுத்து மெஷின்ல வச்சு தச்சுக்கனும். மெஷின் இல்லாதவங்க கையிலயும் தச்சுக்கலாம். 
இப்படியே கலர் மாத்தி மாத்தி வச்சு தச்சுக்கிட்டு வரனும்...
எட்டு பகுதிகள் கொண்ட ஒரு வட்ட வடிவ துணி தயார். 
பழைய புடவை ஒன்னை எட்டா மடிச்சு போட்டு அது மேல ஜீன்ஸ் பேண்டாலான வட்டவடிவத்தை போட்டு அதே அளவுக்கு புடவையை  வெட்டிக்கோங்க. 
வட்ட வடிவுல புடவை வெட்டிக்கிட்டாச்சு...  
புடவை துண்டுகளை ஜீன்ஸ் பேண்ட் துணியோடு சேர்த்து தைக்கவும்...
 புடவை பார்டரை மூணு இஞ்ச் அளவுக்கு வெட்டி  ஜீன்ஸ் பேண்ட் மேல வச்சு சுருக்கம் சுருக்கமா வர்ற மாதிரி தச்சுகோங்க. 
திருப்பி படிமாண தையல் போட்டுக்கோங்க. உள்ளிருக்கும் ஜீன்ஸ் பேண்ட் தையல்லயும் படிமாண தையல் போட்டுக்கோங்க.  
அழகான மிதியடி தயார்.   இப்பலாம் பேண்ட், புடவை, சட்டை, பொண்ணுங்க லெக்கின்ஸ்ன்னு எதையும்  கண்டை இடத்துல போட்டு அசிங்க படுத்தாம, குப்பையில போட்டு எரிச்சு காத்தை மாசுப்படுத்துறதில்ல. 


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை தெரியாதவங்களுக்காக..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461888
angharadmclaren.co.uk:
நன்றியுடன்,
ராஜி.

23 comments:

  1. தொடக்கத்தில் மிதியடி என்று இருக்கவும் செருப்பு என்று நினைத்து விட்டேன்.
    இதுவும் அழகாகத்தான் இருக்கிறது பகிர்வுக்கு நன்றி
    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. மிதியடின்னா செருப்புன்னு அர்த்தம் வருமாண்ணே?! எனக்கு தெரிஞ்சு பாதணின்னுதான் சொல்வாங்க.

      Delete
  2. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  3. நல்லாயிருக்கு. செய்யத்தான் அலுப்பு!!!!!!

    தம +1

    ReplyDelete
    Replies
    1. சோம்பேறியான நானே செய்யுறேன். ஜஸ்ட் ஒரு மணி நேரத்துல செஞ்சுடலாம்...

      Delete
  4. அடடா!அநியாயமா ஒரு கிழிஞ்ச ஜீன்ஸை வீணாக்கிட்டீங்களே!
    இப்பல்லாம்கிழிஞ்ச ஜீன்ஸ்தான் ஃபேசனே!

    இருந்தாலும் நல்லாருக்கு

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டு பையன் அந்த மாதிரி ஜீன்ஸை போடுறதில்லப்பா

      Delete
  5. மிகவும் நன்கு

    ReplyDelete
  6. இப்பதான் நம்ம பழைய ராஜியின் கைவண்ணம் வெளியே வர ஆரம்பிக்கிறது குட் பேசாமல் ராஜியை அமெரிக்காவிர்கு வர வழைத்து இங்கு எல்லார்விட்டிலும் தூக்கி எறியும் ஜீன்ஸை எல்லாம் கலக்ட் செய்து இப்படி மேட் செய்து சொந்த பிஸினஸ் ஆரம்பித்துவிடலாம்... தம 5

    ReplyDelete
    Replies
    1. தங்கச்சியை உக்கார வெச்சு காப்பாத்தனும்ன்னு இல்ல. அதைவிட்டு என்னை வெச்சு பிசினெஸ் ஆரம்பிச்சு என்னை கஸ்டப்படுத்துறதே பொழப்பா போச்சு

      Delete
  7. உங்களின் திறமையே தனி...

    பாராட்டுக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றிண்ணே.

      Delete
  8. பொதுவாக ஜீன்சை யாரும் துவைப்பதில்லை என்கிறார்கள். எனவே அதை வைத்து செய்யபப்டும் பொருட்களுக்கு இயற்கை மணம் வந்துவிடுமோ?

    ReplyDelete
    Replies
    1. ஜீன்சை துவைக்குறதில்லைன்னு ஜோக்குலதான் சொல்வாங்க. ஆனா, நிஜத்துல ஒருமுறை கட்டிட்டு துவைக்குற பழக்கம்தான்ப்பா

      Delete
  9. இவ்வளவு டைம் வேஸ்ட் பண்ணவே வேண்டாம் ,ஜீன்ஸ் பேண்டை விலைக்கு போட்டு வர்ற காசில் மிதியடி வாங்கிவிடலாம் :)

    ReplyDelete
    Replies
    1. நல்ல கொள்கை. இப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்க. அண்ணியை நினைச்சா பாவமா இருக்கு.

      Delete
  10. நல்லாருக்கு ராஜி! இதே போல பைகளும் செய்யலாம். ஜீன்ஸ், பழைய பேன்ட், என்று துணிப்பைகளும் செய்யலாம். எங்கள் வீட்டில் பைகளும், நீங்கள் செய்திருப்பது போல் ஷேப் அல்ல என்றாலும் நீள் சதுரமாக மிதியடிகள் செய்வதுண்டு. நான் சொல்லுவது 30 வருடங்களுக்கு முன்பே நான் படித்துக் கொண்டிருந்த சமயத்தில். அப்போது பேன்ட்ஸ். அதன் பின் ஜீன்ஸ் வந்த பிறகு அதிலும். அச்சமயம் அம்மாவின் சாரிகள் தாவணிகளாகும். கிழிந்த டவல்கள், நல்ல திக் காட்டன் புடவைகள் எல்லாம் எல்லாம் 4, 5 அடுக்குகளாகத் தைக்கப்பட்டு மிதியடிகளாகும். அப்படிச் செய்யும் போது குறுக்கு நெடுக்காகவும் தையல்கள் போடப்படும். நானு இப்போதும் செய்துவருவதுண்டு. என் வீட்டுச் செல்லங்களுக்கு டவல்கள், துப்பட்டாகள், கிழிந்த போர்வைகள், பையனின் ஜீன்ஸ் எல்லாம் மெத்தைகளாகிவிடுவதுண்டு. மிதியடிகளாகிவிடுவதுண்டு...பைகளாகவும், சூடான உணவுப்பொருட்கள் பாத்திரங்களை வைக்கும் மேட்ககளாகவும்...கை துடைக்கும் துணிகள், மிக்ஸி, க்ரைண்டர் போன்றவற்றை மூடி வைகக்க என்று...உருமாற்றம் ஆவதுண்டு...

    உங்கள் கைவண்ணம் அசத்துகிறது. பாராட்டுகள் ராஜி...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உங்கம்மாவுக்கு போட்டியா நானும் இதெல்லாம் செஞ்சு பதிவு போடுறேனுங்க கீதா. நீங்களும் உங்க கைவண்ணத்தை போடலாமில்ல

      Delete
    2. போடுங்க ராஜி!! என் அம்மா இப்போது இல்லை. ரொம்ப விரும்பி பாராட்டியிருப்பாங்க நீங்க செய்யறதைப் பார்த்திருந்தா.

      கீதா

      Delete
  11. மன்னிக்கவும்.முதலில் நானும் செருப்பு என்றுதான் நினைத்துவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. செருப்புன்னு மிதியடிக்கு அர்த்தம் வருமா

      Delete