பிடிக்காத கிளாசை பங்க் அடிக்க, பாத்ரூம் போறேன், தண்ணி குடிக்க போறேன், டஸ்டர்/அட்டெண்டன்ஸ்/.உபகரணங்கள் எடுக்க போறேன்னு சொல்லிட்டு தலையை சுத்தி மூக்கை தொடுறமாதிரி இப்படிதான் ஸ்கூலை சுத்திக்கிட்டு கிடந்தேனாக்கும்...
இஸ்கூலுக்கு போகும் வழியெல்லாம் இந்த பூச்செடி இருக்கும். இந்த பூவை பறித்து அதில் தேன் குடிப்போம். இந்த செடியில் காயும், மணத்தக்காளி மாதிரி கருமையான நிறத்தில் பழமும் இருக்கும். பழத்தினை சாப்பிட்டிருக்கேன். இப்ப வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கு, காம்பவுண்ட் சுவர்தாண்டி சிலசமயம் தலைக்காட்டும். பிள்ளைங்க இல்லாதபோது பறிச்சு தேன் இருக்கான்னு சிலசமயம் சாப்பிட்டு பார்ப்பேன்.
ட்ரங்க் பெட்டி... 1985களில் சின்ன வயசில் என்னை தூக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்த அண்ணா ஒருத்தர், அண்ணா யூனிவர்சிட்டியில் இஞ்சினியர் படிக்க வந்தார்., கிட்டத்தட்ட பார்த்து 7 வருசம் ஆனதால் வீட்டுக்கு அண்ணாவை எனக்கு அடையாளம் தெரியாம ஒதுங்கி நின்னேன். ஆனா, அண்ணா கையிலிருந்த பெட்டி என்னை ஈர்த்தது. சின்னதா ஒரு பூட்டு தொங்க ப்ளூ கலர்ல செமயா இருந்துச்சு. அப்பதான் அதுக்கு பேரு ட்ரங்க் பெட்டின்னு தெரிஞ்சுக்கிட்டேன். அண்ணா அதை திறந்து உள்ளிருக்கும் தன்னோட சோப், டவல்ன்னு எடுத்து, மீண்டும் அடுக்கி வச்ச அழகே பிடிச்சு போச்சுது. கொஞ்ச நாளில் அண்ணா அதை ஹாஸ்டலுக்கு கொண்டுட்டு போய்ட்டார். பின்னர் என் அக்கா கல்யாணத்தின்போது மீண்டும் பார்த்தேன். அக்காவுக்கு கொடுத்தது சிவப்பு கலர். இன்னொரு அக்கா கல்யாணத்துக்கு கொடுத்தது பச்சைகலர் பெட்டி. அப்பவே என் பிரண்ட்ஸ்கிட்ட எனக்கு கல்யாணத்தின்போது ஒவ்வொரு கலர்ல ஒவ்வொன்னு வாங்கிப்பேன்ன்னு.. ஆனா, அந்த காலக்கட்டம் வரும்போது அந்த பெட்டி ஓல்டாகி சூட்கேசும், பீரோவும் வந்துட்டுது. ஆனாலும் அந்த பெட்டி மீதான ஈர்ப்பு இன்னமும் இருக்கு.
கலர் அப்பளம்.. ஸ்கூலுக்கு போகும்போது கைச்செலவுக்கு பணம் கொடுக்கும் பழக்கம் அப்பாக்கிட்ட கிடையாது. எப்பவாவது கைக்கு கிடைக்கும் அஞ்சு, பத்து பைசாவுக்கு இதை வாங்கி சாப்பிட்டிருக்கேன். இனிப்பா இருக்கும். வாயில் வைத்ததும் நாக்கு மேலண்ணத்தில் இது ஒட்டிக்கும். பச்சை, ரோஸ், மஞ்சள், சிகப்பு , வெள்ளை கலர்ல கிடைக்கும்.
பிறந்த நாள் முதல் இன்றுவரை கிராமத்தை சார்ந்து வாழும் பாக்கியம் பெற்றதாலோ என்னமோ சின்ன வயசுல கிடைச்ச அத்தனையும் இன்னிய வரைக்கும் கிடைக்குது. ஸ்கூலுக்கு போகும்போதும், லீவுல ஆத்தங்கரை, ஏரிக்கரைன்னு ஆடுமாடுகளுக்கு இணையா மேயும்போது பறிச்சுக்கிட்டு வருவோம். வீட்டில் அம்மாக்கிட்ட கொடுத்தால் உப்பும் மிளகாய் தூளும் போட்டு தருவாங்க. அப்பதான் சளி பிடிக்காதாம். சிலது புளிக்கும். பலது இனிக்கும். இன்னிக்கும் வீட்டுக்கு எதிரில் ஒரு செடி இருக்கு. இப்பதான் பூ வச்சிருக்கு. பழம் இனிக்குதா?! இல்ல புளிக்குதான்னு பார்க்கனும்.
நெல் அறுவடைக்காலத்தில் நெல் அடிச்சு முடிச்சு வைக்கோலை கொண்டுவந்து தெருக்களில் போட்டு வைப்பாங்க., அந்த பக்கம் போகும், வரும் வண்டிகள் அந்த வைக்கோலில் ஏறி இறங்கி மிச்சம் மீதி வைக்கோலில் ஒட்டி இருக்கும் நெல்மணிகளும் பிரிஞ்சு வந்திரும். வைக்கோலை போராய் குமிச்சு வைப்பாங்க. அப்படியே வச்சா காத்துல பறந்துடும். அதனால் வைக்கோலை கட்டி வைக்க, வைக்கோலாலாயே கயிறு திரிப்பாங்க. நான் பார்த்திருக்கேன். நீங்க பார்த்திருக்கீங்களா?! பார்க்காதவங்க பார்த்துக்கோங்கப்பா!
மீண்டும் சில நினைவு மீட்டலோடு வரேன்...
நன்றியுடன்,
ராஜி
வைக்கோலில் கயிறு - பார்த்ததுண்டு. இப்போது இதற்கென சில மெஷின்களும் வந்து விட்டது.
ReplyDeleteஇலந்தைப் பழம் - ஆஹா.... நெய்வேலியில் அடுத்த வீட்டு வேலியில் இலந்தை மரம் உண்டு. அங்கே பறித்துச் சாப்பிடுவது வழக்கம். இங்கே மலை இலந்தை - பெரிது பெரிதாக இருப்பது கிடைக்கிறது.
கலர் அப்பளம் - எனக்குப் பிடிக்காது.
மலை இலந்தையும் சாப்பிடுவேன். ஆனா, இந்த நாட்டு இலந்தை டேஸ்ட் அதுல கிடையாது.
Deleteகலர் அப்பளம் மை ஃபேவரிட்
ட்ரங்க் பெட்டி, கலர் அப்பளம் என பல இனிய நினைவுகள் ஞாபகம் வந்தன...
ReplyDeleteநீங்களும் கொசுவர்த்தி ஏத்தியாச்சா?!
Delete//பிள்ளைங்க இல்லாதபோது பறிச்சு தேன் இருக்கான்னு சிலசமயம் சாப்பிட்டு பார்ப்பேன். //
ReplyDeleteஏன், பிள்ளைகள் இருக்கும்போதே செய்தால் திட்டுவார்களோ!
திட்டாதுங்க. ஆனா, கிண்டல் செய்வாங்க.
Deleteட்ரங்க் பெட்டிகள் பளபளவென்று அழகாக இருக்கின்றன.
ReplyDeleteஇலந்தைப்பழம் - நாங்க பறிச்சு அப்படியே சாப்பிடுவோம். ஸ்கூலில் இலந்தை வடை என்று தட்டி உப்பு காரமாய் விற்பார்கள். அதையும் வாங்கிச் சாப்பிடுவோம்.
டிரங்கு பெட்டி எஃப்.பில சுட்டது.
Deleteஇலந்தை வடை நான் சாப்பிட்டதில்லை சகோ
முதல் படம் ஹா ஆ ஹாஹா ஹா அது எங்க ஸ்கூல்ல செய்ய முடியாது!!
ReplyDeleteரெண்டாவது படம் அந்தப் பூ உன்னிப்பூ! ஆங்கிலத்தில் லேண்டனா..இதில் நிறைய வகைகள் இருக்கு. நானும் அந்தப் பழங்களை சாப்பிட்டிருக்கேன்..
இதோட இலைகள் பைரவ செல்லங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் மாடுகளுக்கும் ஆனால் அவை ஸ்லோ பாய்சனிங்க். செல்லங்களுக்கு நல்லதல்ல...
கீதா
உன்னிப்பூவா?! இதுவரை பெயர் தெரியாது. மாடுகளோ, இல்ல உங்க செல்லங்களோ இதை சாப்பிட்டு நான் பார்த்ததில்லையே!
Deleteட்ரங்குப் பெட்டி அழகா இருக்கு. இலந்தைப் பழம் நிறைய சாப்பிட்டுருக்கேன் இப்பவும் சென்னைல கிடைக்குது. இங்கு பங்களூரில் இன்னும் பார்க்க்லை...இலந்தைவடையும் சாப்பிட்டிருக்கேன்..
ReplyDeleteகயிறு திரித்தல் நான் செஞ்சதும் உண்டு....எங்க ஊர்ல அறுவடை ஆனப்புறம்...(கயிறு திரித்தல் நா எங்களுக்குள்ல வேறு அர்த்தம்....யாராவடு கதை வுட்டா நாங்க சொல்லுவோம் நல்லா கயிறு திரிக்கறா பாருன்னு!!)
கீதா
ப்ரூடா வுடுறவங்களை எங்க ஊரிலயும் இப்படிதான் சொல்வாங்க கீதாக்கா, இலந்தை வடை நான் சாப்பிட்டதில்லை. இங்க இணையம் வந்துதான் இந்த பதார்த்தையே கேள்விப்படுறேன். வாய்ப்பு கிடைச்சா சாப்பிட்டு பார்க்கனும்
Delete