Tuesday, March 26, 2019

பச்சைய்பயறு குழிபணியாரம் - கிச்சன் கார்னர்

லீவில் சின்னது வீட்டில் இருக்கு. முன்னலாம் ஸ்வீட்ன்னா விடாது. எல்லாத்தையும் சாப்பிடும். குண்டா இருக்கேடின்னு பிள்ளைக கிண்டல் செஞ்சதால உடம்பை குறைக்கிறேன்னு எந்த திண்பண்டத்தையும் தொடுவதில்லை.  அதுக்கு ஏற்கனவே ஹீமோகுளோபின் அளவு குறைச்சல். இந்த லீவில் அதை சமப்படுத்தனும்ன்னு முடிவு பண்ணி இருக்குறதால இனி அடிக்கடி பாரம்பரிய உணவினை கொடுக்கனும்ன்னு முடிவு பண்ணி நேத்து பச்சை பயறுவில் குழிப்பணியாரம் செய்து கொடுத்தேன். 

இதுமாதிரியான பண்டத்தையெல்லாம் சாப்பிட அத்தனை யோசிக்கும். சும்மா நானும் சாப்பிட்டேன்னு சொல்லிட்டு ஏமாத்திடும். அதிலும்இது  கொஞ்சம் கருப்பா இருந்துச்சா மருந்தை முழுங்குற மாதிரி முழுங்கினா.

தேவையான பொருட்கள்...
பச்சை பயறு - 100கிராம்
வெல்லம் - ருசிக்கேற்ப
ஏலக்காய் - 2
உப்பு - கொஞ்சம்
எண்ணெய்
ஆப்ப சோடா - கொஞ்சம்

பச்சை பயறினை குறைஞ்சது 5 மணிநேரம் ஊற வைக்கனும்..

வெல்லத்தினை பொடி செஞ்சுக்கனும்.. கருப்பட்டியா இருந்தா நல்லது.  வெல்லம் வெள்ளை வெளேர்ன்னு வாங்குறதை தவிர்க்கலாம். வெல்லம் வெள்ளையாக அதிகமா சுண்ணாம்பு சேர்ப்பாங்க. 
ஊரின பச்சைப்பயிறினை கழுவி அதில் வெல்லம், ஏலக்காய், ரெண்டு கல் உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பா அரைச்சுக்கனும்.  மாவு ரொம்ப தண்ணியா இருக்கக்கூடாது. கொஞ்சூண்டு ஆப்பசோடா சேர்த்துக்கனும். 
பணியார கல்லை சூடாக்கி லேசா எண்ணெய் தடவி மாவை ஊத்தி, மூடி போட்டு வேக வைக்கனும்.
 ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப்போட்டு, மூடி இன்னும் சில நிமிடங்கள் வேக வைக்கனும்... 
ரெண்டு பக்கமும் வேக விட்டு எடுத்து பரிமாறலாம். சூடா சாப்பிட்டா நல்லா இருக்கும். தேவைப்பட்டால் கொஞ்சம் பச்சரிசி மாவும் சேர்த்துக்கலாம், அரிசி மாவு  சேர்த்துக்கிட்டால் பணியாரம் மொறுமொறுன்னு இருக்கும். 

பச்சை பயறு உடலுக்கு குளிர்ச்சியும், வலுவும் கொடுக்கும். வெல்லத்துல இரும்பு சத்து இருக்கு. 

நன்றியுடன்,
ராஜி

8 comments:

  1. நல்லா இருக்கும் தானே...? செய்து பார்ப்போம்...

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருக்கும்ண்ணே. சின்னது சாப்பிட்டுச்சு. அப்ப நல்லா இருக்குன்னுதான் அர்த்தம்

      Delete
  2. சுவையான குறிப்பு. பார்க்கவும் நல்லாதான் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஆரோக்கியமானதும்கூட..

      Delete
  3. படத்தைப் பார்க்கும்போது சாப்பிடும் ஆசை வருகிறது. நேற்று என் பாஸ் பயறு சேர்த்து பெசெரட் செய்தார். சுமாராக இருந்தது!!

    ReplyDelete
    Replies
    1. செய்முறையை கேட்டு வந்திருந்தால் நாம நல்லா செய்யலாமில்ல!

      Delete
  4. பார்க்க நல்லா இருக்கு... ஆனா சாப்பிட???
    எங்களுக்கு பார்சல் பண்ணி அனுப்புங்க சாப்பிட்டு பார்த்துட்டு கமெண்ட் கொடுக்கிறோம்

    ReplyDelete
  5. அந்த பச்சை பயிறு ல ..வெல்ல பாகு போட்டு சுண்டல் கொடுத்தாலே இங்க பசங்க சாப்பிடுவாங்க ...

    இந்த மாதரியும் செஞ்சு பார்க்குறேன் ..

    ReplyDelete