Sunday, March 10, 2019

விருப்பமில்லா பெண்ணை எண்ணி..... - பாட்டு புத்தகம்

அம்மா! எனக்கொரு டவுட்டு!! - ன்னு சின்னது ராகம் இழுக்கும்போதே நான் உஷாராகி இருக்கனும்.. உனக்கு ஏன் காந்திமதின்னு பேர் வச்சாங்க?!ன்னு கேட்டது... நமக்குதான் நாக்குல சனியாச்சே! நான் பிறந்த நட்சத்திரப்படி  கா(ga)ன்ற எழுத்துல பேர் வைக்கனும்ன்னு முடிவாக காயத்ரின்னு பேர் வைக்க என் அப்பா ஆசைப்பட்டாரு. ஆனா,  என் அப்பாவோட அப்பா, காந்திமதின்னு பேர் வைக்கனும்ன்னு அப்பாக்கிட்ட சொன்னாராம்.. அதுக்கு அவர் சொன்ன காரணம்  தெருவுல நான் இருக்கும்போது என் தாத்தா அந்தப்பக்கம் வரும்போது, தெருவில்  இருக்கவுங்கலாம் காந்தியோட தாத்தா வர்றாங்கன்ற அர்த்தத்துல காந்தி தாத்தா வர்றார், காந்தி தாத்தா போறார்ன்னு சொல்வாங்க. எனக்கு அந்த மகாத்மா பேரு சில நொடிகள் கிடைக்கும்ல!ன்னு என் தாத்தா ஆசைப்பட்டதால இந்த பேரு எனக்கு வச்சாங்க. 

உன் பேருக்கு இப்படி ஒரு ப்ளாஷ்பேக் இருக்கா?! . காந்திஜி  மாதிரி உண்மைய மட்டுமே சொல்லும் ஆள் இல்ல நீ, மதின்ற பேருக்கேத்த மாதிரி அறிவோ, அழகோ கிடையாது. அப்புறம் ஏன் இந்த பேரை உனக்கு வச்சாங்கன்னு ரொம்ப நாளா எனக்கு டவுட்டு. அதான் கேட்டேன்.. இது காலையில் எங்க வீட்டில் நடந்த உரையாடல்...

இது கிண்டலுக்காக நடந்த வாதமா இருந்தாலும், நிறைய முரண்கள் நம்ம வாழ்க்கையில் இருக்குல்ல! சத்தம் போடாதீங்கன்னு கத்தி சொல்றோம். வலிக்கலைன்னு அழுதுக்கிட்டே சொல்றோம். கோவமில்லைன்னு கோவமா வாதாடுறோம்.. இப்படி நிறைய முரண் நம் அன்றாட வாழ்க்கையில்.. அதுமாதிரி ஒரு பாட்டு முழுக்க முரண்கள் மட்டுமே!

ரெண்டு மனசு சேர்ந்தால் காதல். மனசு முரண்பட்டால் ஒருதலை காதல். இந்த தலைப்பு கொண்ட படத்துக்கு முரண்பட்ட காதலை சொல்லும்விதமா முரண்பட்டவைகளை சேர்த்து பாடலாக்கி இருப்பார். டி.ஆர். பாடலோட இசையும் அவரே! படத்தோட பிண்ணனி இசை வேற ஒருத்தங்க.  குடும்பம், புராணக்கதைகள், காமெடி  படங்களா வந்திட்டிருந்த தமிழ் சினிமாவை காதல் பக்கம் திருப்பியது டி. ராஜேந்தராய்தான் இருக்கும்..

குழந்தைக்காகதான் தாலாட்டு பாடுவாங்க! குழந்தை தாலாட்டு பாடுமா?!
பூபாளம் காலையில் பாடுற ராகம்.  அதை ராத்திரியில் பாடினால்?!
மேற்கில் சூரியன் மறையும்.. உதிக்குமா?!
அதுமாதிரிதான் நடக்கவே நடக்காத காரியம் நாயகி மனசை மாத்துறதுன்னு புரிஞ்சுக்குட்டி பாடும் பாடல் இது.. ஒருதலையாய் காதல் கொண்டு எத்தனை நாள் வாழ்வதுன்னு தன்னோட நிலைப்பாட்டையும்  கடைசியா சொல்லுறமாதிரி  பாட்டு இருக்கும். முரண்பட்டவைகளை பாடலாக்க டி.ஆர் எத்தனை மெனக்கெட்டிருக்கனும்?! எத்தனை திறமை வாய்ந்தவர்?! ஆனா கர்வமும், தெனாவட்டும் அவர் இன்னிக்கு நெட்டிசன்களுக்கு கேலி பொருளாய் இருக்கார்.  பிற்காலத்தில் இந்த பாட்டின் வரிகளில் சில சினிமா தலைப்பாவும் ஆனது.. நல்ல பாட்டுதா நடிப்புன்னா கிலோ எத்தனை ரூபாய்ன்னு கேக்கும் சங்கர்தான் இதுல சொதப்பல்.  பாடல் முழுக்க வரும் வீணை இசை பாட்டுக்கு இன்னும் மெருகு சேர்த்திருக்கும்.
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம் இது மேற்கில் தோன்றும் உதயம் இது நதியில்லாத ஓடம் (இது குழந்தை..) நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன் வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கிறேன் சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன் சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன் உறவுறாத பெண்ணை எண்ணி நாளெளல்லாம் வாழ்கிறேன் (இது குழந்தை..) வெறும் நாரில் கரங்கொண்டு பூமாலை தொடுக்கிறேன்!! வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்!! விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப் பார்க்கிறேன்!! விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப் பார்க்கிறேன்!! விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்... (இது குழந்தை..) உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது!! உறவுறுவாள் எனதானோ மனதை நான் கொடுத்தது!! உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது... உயிரிழந்த கருவைக்கொண்டு கவிதை நான் வடிப்பது ஒருதலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது?!  (இது குழந்தை..)
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
படம்: ஒரு தலை ராகம்
இசை: T ராஜேந்தர்
எழுதியவர்: டி.ராஜேந்தர்
நடிகர்கள் : சங்கர், ரூபா..
நன்றியுடன்,
ராஜி

10 comments:

 1. கல்லூரி காலங்களில் மட்டுமல்ல... இப்போதும் எப்போதும் ரசிக்கும் பாடல்...

  சுகமான சோகங்கள் என்று ஒரு பாடல் தொகுப்பு என்னிடம் உள்ளது... அதில் இந்த பாடலும் ஒன்று... (அடி பலமோ என்று நினைப்பது எனக்கிங்கே கேட்கிறது)

  டி.ஆர் அவர்கள்... ம்... என்னத்த சொல்ல...

  ReplyDelete
  Replies
  1. அடிபடாதவங்கன்னு யாரும் இருப்பதில்லைண்ணே. அடியின் சதவிகிதம் மட்டுமே மாறுபடும்.

   Delete
 2. மிகவும் ரசிக்கும் பாடல். என் மாமா ஒருவருக்கு இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். அடிக்கடி பாடிக்கொண்டிருப்பார்.

  ReplyDelete
  Replies
  1. மெல்லிசை பாட்டு பிடிக்குற எல்லாருக்குமே இந்த பாட்டு பிடிக்கும் சகோ

   Delete
 3. நல்ல பாடல்.

  அவரது பல பாடல்கள் நன்றாக இருக்கும். பொதுவாக காணொளியுடன் பார்க்காமல் கேட்க மட்டுமே செய்தால் நல்லது! :)) சில பாடல்களில் செட்டிங்க்ஸ் சிறப்பாக இருக்கும் என்றாலும் வேறு காரணங்களால் பார்க்க முடியாது!

  ReplyDelete
  Replies
  1. அவர் ஹீரோயினை தொட்டு நடிக்க மாட்டாரு. ஆனா, தங்கச்சி கேரக்டர்ல வர்ற பொண்ணுங்க, வில்லி கேரக்டர்லாம் காண சகியாத மாதிரிதான் துணி உடுத்த வைப்பார்.

   Delete
 4. ஒருதலைராகம்பார்த்திருக்கிறேன் ரயிலில் கல்லூரிக்குப் போகும்காட்சிகள் இருக்கும்தானே என் நினைவைசோதித்துபார்க்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. அதேப்படம்தான்.

   Delete