Monday, March 18, 2019

பெண்களின் ஏடாகூட வீடியோ ஆபாச தளத்தில் வந்துட்டா என்ன செய்யனும்?! - ஐஞ்சுவை அவியல்

விளக்கேத்தும் நேரமாகிட்டுது. போய் விளக்கேத்தாம போன் நோண்டிக்கிட்டு இருக்கியா?! 
Krishna
இல்ல என் பிரண்ட் எனக்கொரு படம் அனுப்பி இருக்கா. அதை பார்த்துக்கிட்டு இருந்தேன்.  எத்தனை ஆழமான வாசகங்கள்?! எனக்கு எப்பவுமே பிடிக்கும். 

என்ன படம் அது?!

 குருஷேத்திரத்திர போரின்போது அர்ஜுனன், அன்புக்குரிய உறவினர்கள்மீது அம்பு எய்த கலங்கி தவித்து, வில்லினை எரிந்துவிட்டு போர் வேண்டாமென  நின்றபோது,  கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் ஒருசில வாசகத்தை எனக்கு அனுப்பி இருக்கா. அதைதான் படிச்சிட்டு இருக்கேன்.
Scene from the Mahabharat: Krishna and Arjun at the battle of Kurukshetra
இதென்ன அதிசயமா இருக்கு?!  உனக்குதான் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லையே!! திருந்தலாம்ன்னு முடிவு  பண்ணிட்டியோ?!

சாமி, பூதம்லாம்தான் நம்பிக்கை இல்லை. இதுலாம் அனுபவத்தால் வந்த உபதேசம். முன்னோர்கள் சொல்லி வச்சுதுல எதுமே தப்பில்ல. எல்லாமே கடைப்பிடிக்க வேண்டியதுதான். ஆனா, அதுக்கு ஆன்மீகம்ன்னு முலாம் பூசுறதைதான் எனக்கு பிடிக்கல. 

ம்ம்ம் . சரி சண்டை வேணாம். பகவத் கீதை, குருஷேத்திர போர்ன்னாலே நமக்குலாம் நினைவுக்கு வர்றது இருபுறமும் படைகள் அணிவகுத்திருக்க,  கிருஷ்ணர் தேர் சாரதியாய் வீற்றிருக்க, அர்ஜுனன்   இருக்கையில் அமர்ந்தபடி இருக்கும் படக்காட்சிதான் நினைவுக்கு வரும்.  இது வெறும் படம் மட்டுமில்ல. நம் வாழ்வியல் தத்துவத்தை எடுத்துச்சொல்வதே இப்படம். இதில் இருக்கும் ஒவ்வொரு குறியீடும் நம்மில் இருக்கும் அம்சத்தின் குறியீடாகும்.  முதல்ல நம்மிடம் இருக்கும் எவைலாம் குறியீடுன்னு சொல்றேன்..
Radheyan Quotes No.121

நாம் வாழும் இந்த பூமிதான் போர்க்களம், நம்மோட வாழ்க்கைதான் அதில் நடக்கும் போர். கிருஷ்ணனும் அர்ஜுனனும் அமர்ந்திருக்கும் தேர் நமது உடல். அர்ஜுனர்தான் நம்ம ஆன்மா, உயிர், ஜீவன் எனப்படும் தனிமனிதன். தேர்க்குதிரைகள் நம்ம மனசு,  கிருஷ்ணர்தான் நம்ம மனசாட்சி, உள்ளுணர்வு வடிவில் இருக்கும் பரமாத்மா, பரம்பொருள் எனப்படும் கடவுள்.  கிருஷ்ணர் கையிலிருக்கும் குதிரையின் கடிவாளம் நம்ம  விதி. கிருஷ்ணர் கையிலிருக்கும்  சாட்டை- நம்ம அறிவு புத்திசாலித்தனத்தை குறிக்குது. அர்ஜுனனின் தேர்க்கொடியிலிருக்கும் ஆஞ்சனேயர்- நம்முடைய நல்ல நடத்தை, நல்லொழுக்கம்.   எதிர் அணியில் அணிவகுத்து நிற்கும் கௌரவப்படைகள்தான் நம்மோட தப்புகள் எனப்படும் கர்மா, வினை தீவினைகள்.  கௌரவர்கள் எப்படி வியூகம் மாத்தி, மாத்தி அமைச்சு போரிட்டாங்களோ! அதுமாதிரி நமது தீவினைகள்/ கர்மாக்கள் ஒரு பிரச்சனை மாற்றி ஒரு பிரச்சனையாக கொடுத்துக்கொண்டே இருக்கும். 

Bagavath geetha..

அர்ஜுனன் பக்கமிருக்கும் பாண்டவர் படை நாம் செய்த புண்ணியங்கள். அவை நமக்கு சாதகமாக நம்மை காப்பாற்ற முயற்சிக்கின்றன. நாம் செய்த தீ வினைகள் கொடுக்கும் தொல்லைகளை சமாளிக்க நாம் செய்த புண்ணியங்கள் போராடும். குதிரைகள் இழுத்துச் செல்லும் திசையில் எப்படி தேர் செல்கிறதோ அப்படிதான் நம் உடலும் மனம் இழுத்துச் செல்லும் திசையில்போகுது. உடலின் தேவைக்கேற்பதான் மனசு செயல்படும். பசியெடுத்தால் உணவினை தேடி கால்கள் செல்லும்.  அதனால்தான் தேர் நம்ம உடம்பை குறிக்குது. அர்ஜுனர்தான் தனிமனிதன்னு சொன்னேன்ல. அர்ஜுனர் தேரில் நிற்பதை போன்று ஜீவாத்மா நம் உடலில் உரைகிறது.   அர்ஜுனர்  அம்புகள் எய்வது மாதிரிதான் நமது செயல்கள் கடமையை செய்வது மட்டுமே!  .மனம் குதிரை போன்றது. அது ஒரே சமயத்தில் நான்கு விஷயங்களை சிந்திக்கும் ஆற்றல் கொண்டது. ஒரேசமயத்தில் நான்கு விஷயத்தை சிந்திக்கக் கூடியதா இருந்தாலும், ஒரு முகப்பட்டு செயல்பட வேண்டும். மனதை அடக்கி நம் விருப்பப்படி நடக்க வைப்பதும் குதிரையை அடக்குவது போலதான். மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டால் குதிரை முரண்டு பிடிக்கும். அதனால் மெல்லமெல்ல தட்டி கொடுத்து வழிக்கு கொண்டு வர வேண்டும். கொள்ளு வைக்கவேண்டிய நேரத்தில் கொள்ளு வைத்தும், நீர் வைக்கவேண்டிய நேரத்தில் நீரினை காட்டியும் அதை தாஜா பண்ணனும். அதேமாதிரிதான் நம்ம  மனசும் அப்படித் தான். ஓரேயடியாக அடக்கி வைத்தால் மன அழுத்தம், சோர்வு வரும். அதனால, மனசு சொல்றதை முழுக்க ஒதுக்காம, அது ஆசைப்படியும் அப்பப்ப நடக்கனும். அப்பதான் அது கிருஷ்ணர் ஓட்டிச்செல்லும் குதிரை போல கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். கிருஷ்ணர் கையிலிருக்கும் கடிவாளம்தான் விதி. மனம் விதியின் பிடியில் இருக்குது. விதி எந்த திசையில் திரும்புகிறதோ மனமும் அந்த திசையில்தான் பயணிக்கும். 

Dandavats | Major Upgrade in Vanipedia

கடிவாளத்தை பிடித்துக்கொண்டிருக்கும் கிருஷ்ணர் கடவுள். விதியை கடவுள் இயக்குகிறார்.  கடவுள் நம் விதியை இயக்கனும்ன்னா  நாம இறைவனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கனும்.  கிருஷ்ணர் கையிலிருக்கும் சாட்டைதான் நம் புத்தி/அறிவு. புத்தி மனசாட்சியின் பிடியில் இருக்குது. புத்தி மனசாட்சியின் பிடியில் இருந்தால் மனம் சரியான திசையில் போகும்போது அதை வேகப்படுத்தும். தவறான திசையில் போகும்போது இயங்காமல் இருந்து, வேகத்தை குறைச்சுடும். கிருஷ்ணர் எனப்படும் கடவுள் மனசாட்சி, ஆழ்மனம், பேருணர்வு, பரமாத்மா.. இந்த மனசாட்சியானது இந்த வாழ்க்கையால் துளிகூட பாதிக்கப்படுவது  இல்லை.  இது ஜீவாத்மாவிற்கு துணையாக இந்த வாழ்க்கையில் பங்கெடுக்குது.  நல்லொழுக்கமெனும் தேர்க்கொடியிலிருக்கும் ஆஞ்சநேயர்- . ஆஞ்சநேயர் நல்லொழுக்கத்தை குறிக்கிறார். நல்லொழுக்கம் நம்மக்கிட்ட இருக்கும்வரை நமக்கு எந்த பாதிப்பும் வராது.. இந்த வாழ்வியல் உணர்த்துவதே இந்த அர்ஜுனர்-கிருஷ்ணர் இருக்கும் பகவத் கீதை படத்தின் தத்துவம்...



இதைதான் மாமா நானும் சொல்றேன். நீ சொல்ற மாதிரி பரந்து விரிந்திருக்கும் கோவில்களிலும், நெடிதுயர்ந்த சிலைகளிலும் கடவுள் இல்லை. நம்ம மனசுக்குள்தான் கடவுள் இருக்கார்ன்னு சொன்னா நீதான் நம்ப மாட்டேங்குற.  மனசாட்சி இல்லாம நடந்துக்குறதாலதான் இப்ப நடக்கும் எல்லா கெட்ட சமாச்சாரமும். பொள்ளாச்சியில் 20க்கும் மேற்பட்ட ஆட்கள், கிட்டத்தட்ட 250 பெண்களை திட்டமிட்டு காதல், ஃபேஸ்புக் வழியா பிடிச்சு தனியா கூப்பிட்டு போய் மிரட்டி  பயன்படுத்திக்கிட்டதுமில்லாம, வீடியோ எடுத்தும் அடுத்தவங்களுக்கு பங்கு போட்டும் பேயாட்டம் ஆடி இருக்காங்க. நம்ம படம் வெளில வந்திருமோன்னு எல்லா பெண்களும் பயந்திருந்ததால் யாரும் புகார் கொடுக்கல. அதனால் இவனுங்க கிட்டத்தட்ட 7 வருசமா இந்த வேலையை செஞ்சிக்கிட்டிருக்கானுங்க.

முதல்ல பொண்ணுங்க வீட்டுக்கு தெரியாம இப்படி தனியா போறது தப்புன்னு உணரனும்.  ஆனா, காதல்ன்னு வந்திட்டா அறிவு வேலை செய்யாது. ஏதோ ஒரு ஆர்வக்கோளாறுல பேஸ்புக், ட்விட்டர்ன்னு படத்தை பதிவிட்டு அதை மார்பிங்க் பண்ணி போடுற  படம் நெட்டுல வந்துட்டாலும் அதை ஈசியா அழிச்சுடலாம். இதுக்காகலாம் பயப்பட தேவை இல்ல.

அதெப்படி மாமா டெலிட் செய்யமுடியும்?!
No photo description available.

முடியும்IMAGE REMOVAL PREOCESSING மூலமா இந்த மாதிரி போட்டிருக்கும் படத்தை எடுத்திடலாம். கூகுள்ல REVERSE IMAGE PROCESSER ன்னு ஒரு ஆப்சன் இருக்கு. எதெதுல நம்ம படம் போட்டோம். எதுல நம்ம படத்தை ஆபாசமா வெளியிட்டிருக்காங்கன்னு இதன்மூலமா தெரிஞ்சுக்கிட்டு அந்த படத்தை எடுத்திடலாம். ஒருவேளை நம்ம வீடியோக்கள், படங்கள் எதாவது XXX வீடியோ பக்கத்துல வந்திருந்தாலும், கொஞ்சம்கூட பதட்டப்படாம ABUSE REPORTING FORM ன்னு அதுல ஒரு ஆப்ஷன் இருக்கு. அந்தப் ஆப்ஷனில் இது என்னுடைய அனுமதி இல்லாமல் என்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி எடுத்த படம், எனக்கு தெரியாம இது போடப்பட்டதுன்னு சொன்னால். அந்த வீடியோவை அவங்க எடுத்திடுவாங்க. எடுத்தே ஆகனும். அதான் விதி. இதை தனியா செய்ய தெரியலைன்னா அந்த சைட் லிங்க் கொடுத்தால் சைபர் கிரைம் பிரிவு அல்லது இதை செய்து கொடுக்க இருக்கும் தனியார் ஏஜன்சிகள்கிட்ட கொடுத்தால் இதை நீக்கிடுவாங்க. அதுக்கப்புறம் அந்த சைட்ல அந்த வீடியோ/படம் இருக்காது. ஆனா அந்த படத்தை/வீடியோவை டவுன்லோட் பண்ணி இருந்தால் ஒன்னும் பண்ணமுடியாது. அப்படியே படம் வெளிவந்து ஊரே பார்த்தாலும் அது வெறும் சதைதான். எல்லா பெண்ணுக்கும் இருக்கும் உறுப்புகளே எனக்கும் இருக்கு. அதை பார்த்தால் பார்த்துட்டு போகட்டும்ன்னு மனசை தேத்திக்கிட்டு வெளிவர பார்க்கனும். பசி, தூக்கம், தாகம் மாதிரி செக்ஸும் உணர்வு, அதை நான் தணிச்சுக்கிட்டேன். அதை அந்த நாயி வீடியோ/படம் எடுத்து வெளியிட்டது நம்பிக்கை துரோகம். அதுக்கு அவந்தான் வெக்கப்படனுமே தவிர நான் இல்லன்னு சொல்லிட்டு, இனி இப்படி நிகழாம இருக்க மனசை ஒருநிலைப்படுத்திக்கிட்டு கவனமா செயல்படனு, ஒரு அதைவிட்டு தற்கொலை மாதிரியான செயல்ல ஈடுபடக்கூடாது.

இப்படி ஒரு சிக்கலை ஏற்படுத்திக்கொண்டு அதிலிருந்து மீண்டு வருவதற்குப் போராடுவதை விட, இப்படி ஒரு சிக்கலே வராதவாறு பெண்களது பாதையும் பயணமும் இருக்குமளவுக்கு திடசித்தம் இருக்கனும். இதுவே அவங்களை நம்பி இருக்கும் குடும்பத்துக்கு அவங்க காட்டும் நன்றிக்கடன். பெண்ணுக்கு அட்வைஸ் பண்ணும் அதேநேரத்துல, பெண் வெறும் போகப்பொருள் அல்ல. அவளும் ரத்தமும் சதையுமான மனுசி, அவளுக்கும் வலிக்கும்., அவளுக்கு இருக்குற மாதிரிதான் மானம், அவமானம் உனக்கும் உண்டு. சந்தர்ப்ப சூழ்நிலையால் உன்னைய நம்பி ஒரு பொண்ணு மனசையும், உடலையும் கொடுத்திட்டால் அவளுக்கு துரோகம் பண்ணாத. உன்னைய நம்பி வந்த பொண்ணை உயிரை கொடுத்தாவது நீ காப்பாத்து. அது அக்கா, தங்கச்சி, காதலி மட்டுமில்ல வழியில் எதிர்படும் எந்த பெண்ணானாலும் அவளுக்கு இடையூறு செய்யாதன்னு ஆண்பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கனும். ஆண்/பெண் பேதமில்லாம வளர்க்கனும். இது ஆண்/பெண் என பிரிச்சு பார்க்காம ஒட்டுமொத்த சமுதாயமே மாறனும்.
எது பாதுகாப்பு, எது சுமைன்னு பெண்கள் உணரனும்... அதை நச்சுன்னு சொல்லுது இந்த படம்.
மகளை பெற்ற அப்பாக்களுக்குதான் தெரியும். நாம எப்படிலாம் சிக்கி இருக்கோம்ன்னு.... அதுக்கு உதாரணம் இந்த வீடியோ மாமா..

வாழைப்பழ சோம்பேறியை தெரியும், இவன் என்னடான்னா திராட்சை பழ சோம்பேறியா இருக்கான்?!

உன்னை மாதிரின்னு சொல்லு புள்ள!!
!@#$%^&*_)(*&^%$#@$%^&**()(*&^%$#@!@$%^&*(*&^%$#@


நன்றியுடன்,
ராஜி

23 comments:

  1. இரு விளக்கமும் அருமை சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  2. இமேஜ் அழிக்கும் தகவல் உபயோகமான ஒன்று. அவியலை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ட்விட்டர்ல படிச்சேன். இங்க பகிர்ந்தேன் சகோ

      Delete
  3. நல்ல விளக்கம்.

    வாழைப்பழ சோம்பேறி - இந்த மாதிரி இன்னும் ஒரு காணொளி நேற்று காணக் கிடைத்தது.

    சுவையான அவியல்.

    ReplyDelete
    Replies
    1. விரைவில் உங்க தளத்தில் காணொளியை எதிர்ப்பார்க்கலாமா சகோ

      Delete
  4. அருமையான பதிவு.
    காலத்துக்கு ஏற்ற பதிவு.

    ReplyDelete
    Replies
    1. மொபைலில் வெகு துல்லியமா படமெடுக்கும் கேமரா வந்தாலும் வந்துச்சு. எல்லாத்தையும் படமெடுக்கும் கலாச்சாரம் பெருகிட்டுது. அதன் விளைவே இது. டிக்டாக், மியூசிக்லி தானாய் அரைகுறையாய் வரும் பெண்களை ஒன்னும் சொல்வதற்கில்லை. ஆனா பெண்ணை வற்புறுத்தி அவளுக்கே தெரியாம படமெடுத்து , மார்பிங் பண்ணி போடும்போது சிக்கலில் இருந்து வெளிய வர பார்க்கனுமே தவிர மிரட்டலுக்கு பயந்து பணம், நகை, உயிர் இழப்புக்குலாம் துணியக்கூடாது.

      அதுக்கே இந்த பதிவு.

      Delete
  5. அருமையான தகவல்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  6. நல்ல செய்திகள். ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோ

      Delete
  7. திராட்சைப்பழ சோம்பேறி ஆஹா அட போட வைத்தார்!!!

    இமேஜ் அழிக்கும் தகவல் சூப்பர். நல்ல தகவலும் கூட

    எல்லாமே நல்லாருக்குது ராஜி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இமேஜ் அழிக்கும் தகவலை கூகுளில் படிச்சேன். உடனே பகிர்ந்துக்கனும்ன்னு தோணுச்சு கீதாக்கா. திராட்சை சோம்பேறியும் ட்விட்டரில் சுட்டவைதான்.

      Delete
  8. கீதாசாரம் என்று குறிப்பிட்டு இருக்கும் வரிகள் கீதையில் இல்லை பகவத்கீதையை டையை தமிழில் எழுதும்பதிவீவிட்டு இருந்தபோதும் போதும்குறிப்பிட்டு இருந்தேன்

    ReplyDelete
    Replies
    1. அப்படியா புதுதகவல்ப்பா

      Delete
  9. கீதையில் இல்லாதது பல இடங்களிலும் கோட் செய்யப்ப்டுகிறது

    ReplyDelete
    Replies
    1. இடைச்செருகல்கள் எல்லாவற்றிலும் உண்டு போல!

      Delete
  10. பதிவி இரண்டாம்பாதி நன்றுகீதைக்கு ஒர் முன்னுரைஎன்று எழுத ஆரம்பித்து பகவத் கீதையின் 18 அத்தியாயங்களையும் தமிழ்படுத்தி எழுதி இருக்கிறேன் முடிவில் என் எண்ணங்களையும் எழுதி இருந்தேன் கீதைக்கு ஒரு முன்னுரையின் சுட்டி கீழே /https://gmbat1649.blogspot.com/2014/08/blog-post_25.html

    ReplyDelete
    Replies
    1. படிச்சு பார்க்கிறேன்ப்பா

      Delete
  11. ஐஞ்சுவை அவியல் நன்றாக இருந்தது சகோதரி. அதுவும் அந்த இம்மேஜ் அழித்தல் நல்ல தகவல்.

    துளசிதரன்

    ReplyDelete
  12. //அந்தப் ஆப்ஷனில் இது என்னுடைய அனுமதி இல்லாமல் என்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி எடுத்த படம், எனக்கு தெரியாம இது போடப்பட்டதுன்னு சொன்னால். அந்த வீடியோவை அவங்க எடுத்திடுவாங்க//

    இதுக்கெல்லாம் இங்கிலீஸ் தெரியணுமே.

    ReplyDelete
    Replies
    1. எல்லாரையுமே என்னைய மாதிரியே நினைச்சுட்டா எப்படி சகோ?!

      Delete