Saturday, March 02, 2019

பேட்ட மரண மாஸ்! - பாட்டு புத்தகம்

வருவாரா வரமாட்டரா?அதுக்கு நமக்கு ஞாபகத்துக்கு வருவது, வடிவேல் காமெடி தான்.வரும் ஆனா வராது.இதை கேட்க ஆரம்பித்தது 1995 ஆம் ஆண்டு பாட்ஷா திரைப்பட வெளியீட்டு விழாவின் போது ரஜினி பேசிய அரசியல் பேச்சு அப்போது 
ஆரம்பித்தது .அதன் பிறகு 1995ம் ஆண்டு வெளிவந்த முத்து படத்தில் “கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அதில் இருக்கு….” சொன்னவுடனே காலம் எப்பவரும்ன்னு அவரது ரசிகர்கள் பார்த்து கிட்டு இருந்தாங்க,வருஷங்கள் தான் உருண்டோடின அதன் பிறகு எல்லோரும் அத மறந்தே போய்ட்டாங்க எல்லோரும் மறந்தே போய்ட்டாங்க.அப்பத்தான் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த பாபா திரைப்படத்தில் சக்திகொடு பாடல் வெளிவந்தது 

முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன்
முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன்
என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன்
ஏணியாய் நான் இருந்து ஏமாற மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்
கட்சிகளை பதவிகளை நான் விரும்பமாட்டேன்
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்
இதோ வந்துவிட்டார் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர் .அப்பொழுதும் அவர் அரசியலுக்கு வரப்போகிறார், அவர் வரமாட்டார் என்று கேட்டு கேட்டு ரஜினிகாந்தின் அரசியல் பயணம் குறித்த செய்தி புஸ்ன்னு காத்து போன பலூன் ஆட்டம் ஆகிப்போச்சு ஆனா அவரது ஆட்டம் மட்டும் இன்னும் இளசுகளுக்கு சவால் விடும் அளவுக்கே இருக்கிறது.
இப்பவும் அதே ட்ரெண்ட் பார்க்கத்தான போர காளியோட ஆட்டத்த...அதே பழைய கதையை தற்போது தூசிதட்டி எடுத்தாலும்,பேட்ட மரண மாஸ் பாடல் எல்லாவற்றையும் தாண்டி நம்மை தாளம்போடவைக்கிறது என்று சொன்னால் அதுமிகையாகாது .கருப்பு வெள்ளை காலத்தில் இருந்து ,இந்த டிஜிட்டல் காலம்வரை தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்து இருக்கிறார் என்றால் அதுவே ஒரு மாஸ் தான் 
தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க...
உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க...
திமிராம வாங்க பல்பாய்டுவீங்க...
மொரப்போட நிப்பான்டா முட்டாம போங்க...

கெத்தா நடந்து வர்ரான் கேட்டயெல்லாம் கடந்து வர்ரான்...
கெத்தா வெடிய ஒன்னு போடு தில்லால
ஸ்லீவ சுருட்டி வர்ரான்
காலர தான் பெரட்டி வர்ரான்
முடிய சிலுப்பிவிட்டா ஏறும் உள்ளார
மரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...
அதுக்கு அவன் தான் பொறந்து வரனும்...
மரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...
ஸ்டெப்பு மொறையா வந்து விழனும்...

தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க...
உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க...
எவன்டா மேல... எவன்டா கீழ...
எல்லா உயிரையும் ஒன்னாவே பாரு...
முடிஞ்ச வரைக்கும் அன்ப சேரு...
தலையில் ஏத்தி வெச்சு கொண்டாடும் ஊரு...
நியாயம் இருந்து எதுத்து வரியா...
உன்ன மதிப்பேன் அது என் பழக்கம்...
கால இழுத்து உயர நெனைச்சா...
கெட்டப்பய சார் இடியா இடிக்கும்...
கெத்தா நடந்து வர்ரான் கேட்டயெல்லாம் கடந்து வர்ரான்...
கெத்தா வெடிய ஒன்னு போடு
தில்லால ஸ்லீவ சுருட்டி வர்ரான்
காலர தான் பெரட்டி வர்ரான்
முடிய சிலுப்பிவிட்டா ஏறும் உள்ளார
மரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...
அதுக்கு அவன் தான் பொறந்து வரனும்...
மரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...
ஸ்டெப்பு மொறையா வந்து விழனும்...

 இந்த பாட்டை கேட்கும் போதே செம மாஸாக இருக்கிறது.

படம்: பேட்ட 
இசை:  அனிருத் ரவிச்சந்திரன்
பாடல்வரிகள்:விவேக் 
பாடியவர்: எஸ்.பி.பி,அனிருத் 
நடிகர்கள்:  ரனிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, சசிக்குமார்.
ரசனையுடன் 
ராஜி 

22 comments:

 1. ஹலோ... கில்லர்ஜி... இங்க நம்ம சகோதரிக்கு செம மாஸ் பிடிச்சிருக்காம்... உடனே விரட்ட வாங்க... என்னால முடியல ஜி...

  ReplyDelete
  Replies
  1. இது எந்த கோவிலுக்கு போனாலும் விரட்டமுடியாத மாஸ்...

   Delete
  2. ஹா ஹா ஹா ஹா டிடி!!! அப்படிப் போடுங்க...துரத்தி துரத்திப் பார்த்தாலும் சிக்க மாட்டேங்கறாங்க...ஹா ஹா ஹா ஹா

   கீதா

   Delete
 2. ய்யேயேயேன்....?
  நல்லாத்தானே போயிக்கிட்டு இருந்துச்சு திடீர் அல்ட்ரா பல்டி அடிக்கிறீங்களே...

  சமீபத்துல எனது பதிவுக்கு வந்து சொன்னீங்களே...

  "இந்த ஆளு சுத்த வேஸ்ட் சமயத்துக்கு தகுந்த மாதிரி பேசி தமிழ்நாட்டு மக்களை ஏமாத்துறார்'னு"

  ReplyDelete
  Replies
  1. ஆமா, இப்பயும்தான் சொல்றேன். இந்தாளுலாம் வேஸ்ட். சுயநலம். வருவேன்.. வருவேன்னு சொல்லி தன் காரியத்தை சாதிச்சுக்கிட்டு இருக்கார். தன் படம் ஓடனும்.. அதுக்கு ஒவ்வொரு முறையும் என்னை வாழவைத்த தமிழகத்துக்கு எதாவது செய்யனும்ன்னு சொல்வாரே தவிர இதுவரைக்கும் எதும் செஞ்சதா தெரில.

   அவர் தன்னோட உடலை வருத்திக்கிட்டு சம்பாதிக்குறதை கொடுக்கனும்ன்னு சொல்லல. ஆனா, பொதுவில் சொல்லிட்டா செஞ்சே தீரனும்ன்னுதான் சொல்றேன். ஒரு பாட்டை பகிர்ந்ததால் ரஜினியை எனக்கு பிடிக்கும்ன்னு அர்த்தமில்லை. அண்ணாமலைக்கு முந்தைய அதாவது அரசியல் கலக்காத ரஜினியை இப்பவும் பிடிக்கும்.

   Delete
 3. ஏங்க! காணாமல்ப் போன கனவு கண்ட ராஜி!

  என்னங்க ஆச்சி உங்களூக்கு. என்னைமாதிரி ரஜினி விசிறீகளே சும்மா இருக்கோம், நீங்க என்ன திடீர்னு கில்லர்ஜி, தனபாலன் எல்லோரையும் குழப்பிவிட்டு, ரஜினி பாட்டுக்கு விசிலெல்லாம் அடிக்கிறீங்க?

  கொஞ்சம் புரிகிறாப்பிலே சொல்லுங்க, என்னதான் சொல்ல வர்ரீங்க?

  ReplyDelete
  Replies
  1. இன்னிக்குதான் சகோ இந்த பாட்டை கேட்குறேன். கேட்டதும் பிடிச்சுட்டுது. அதான் பகிர்ந்தேன். மத்தபடி இந்த பதிவை நான் போடலை, என் அட்மின்தான் போட்டாருன்னு சொல்லி தப்பிக்க நான் என்ன அரசியல்வாதியா?!

   Delete
 4. "மரண மாஸ் பாடல் எல்லாவற்றையும் தாண்டி நம்மை தாளம்போடவைக்கிறது என்று சொன்னால் அதுமிகையாகாது"

  பாட்டு ரொம்ப நல்லாத்தான் இருக்குங்க. சரி உண்மையச் சொல்லுங்க, தாளம் மட்டும்தான் போட்டீங்களா? இல்லைனா சின்னக் குழந்தை, ராஜிக் குட்டியா மாறீ டான்ஸூம் ஆடினீங்களா? ;)

  ReplyDelete
  Replies
  1. உண்மைய சொல்லனும்ன்னா எனக்கு அப்படி குத்தாட்டம் போடனும்ன்னு ஆசை இருக்கு. இந்த டிவிகளில் காட்டுவாங்க.. மகளிர் மட்டும், லேடீஸ் புரோகிராம்ல வயசை மறந்து ஆடுவாங்க. என் பிள்ளைகளை கேட்டிருக்கேன்., என்னைய அந்த மாதிரி புரோகிராமுக்கு கூட்டிப்போங்கன்னு... வாய்ப்பு கிடைக்கல.

   வீட்டில் சின்ன வயசிலிருந்தே ரொம்ப ஸ்ட்ரிக்ட், லேசா உடலை நெளிச்சாலோ பாட்டை ஹம் பண்ணாலோ, இல்ல விசிலடிச்சாலோ ஒரு பார்வை பறக்கும் அப்படியே சப்தநாடியும் அடங்கிடும். அதே பழக்கம் இப்பவரைக்கும் தொடருது. அப்படியே எங்கிட்டாவது போகும்போது பாட்டுக்கச்சேரியில் குத்துப்பாட்டுக்கு கை தட்டினாலே நான் பெத்ததுங்க முறைக்குது..

   வாய்ப்பு கிடைக்கும் குத்தாட்டம் போடாமயா போய்டுவேன்!?

   Delete
 5. இப்ப நீங்க என்ன சொல்ல வரீங்க? அவர் அரசியலுக்கு வரணும்னு சொல்றீங்களா இல்ல அவர் சினிமாவிலேயே நடிக்கட்டும்னு சொல்றீங்களா ?

  //இது எந்த கோவிலுக்கு போனாலும் விரட்டமுடியாத மாஸ்... // - அட கடவுளே....

  ReplyDelete
  Replies
  1. வருவதும் போவதும் அவர் விருப்பம். ஆனா, இது உப்பிட்ட மண், இதுக்கு எதாவது செய்யனும்ன்னு அளந்து விடுவாரே! அதைதான் நிறுத்த சொல்றேன்.

   Delete
  2. ஒரு மேனேஜர் பதவிக்கே படிப்பும் அந்த துறையில் முன் அனுபவமும் தேவை. ஆனால் ஒரு கட்சியை கூட நடத்தி அனுபவம் இல்லாத ரஜனி தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர் என்று அமெரிக்காவில் உத்தியோகம் செய்யும் தமிழர்களே நம்பும் போது சாதாரண பொதுமக்கள் எம்மாத்திரம்? நீங்கள் சொல்வது 100% சரி, ரஜனி ஒரு காரியவாதி.
   தமிழர்களே அவரை நம்பவும் ஏமாறவும் தயாராய் இருக்கும் போது ரஜனி எதற்கு கவலைப்பட வேண்டும்?

   Delete
 6. இரண்டு நாட்களுக்கு முன்னால்தான்படம் பார்த்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நான் இன்னும் பார்க்கலியே!

   Delete
 7. ஆனா ஒண்ணூங்க, ராஜி, பொதுவாக, நம் நாட்டில், நம் கலாச்சாரத்தில்

  முதலில் நம்மைப் பெற்றவர்கள் சந்தோசம், விருப்புக்காகவும்,

  பின்னால் நாம் பெற்றவர்கள் சந்தோசம் விருப்பத்திற்காகவுமே வாழ்ந்து முடிச்சிடுவோம்.

  நமக்காக நாம் கொஞ்சம் வாழனும்னா அடுத்த ஜென்மத்தில்தான் - அதுவும் மேலை நாட்டில் பொறந்தாத்தான். :)

  ReplyDelete
  Replies
  1. அதேதான் சகோ. ஆண்களுக்கு கொஞ்சூண்டு சுதந்திரம் இருக்கு. ஆனா பெண் பிள்ளைகளுக்கு?! நோ சான்ஸ்

   Delete
 8. நான் படமே பார்த்துட்டேன்....

  துளசிதரன்

  ராஜி இப்பத்தான் இந்தப் பாடல் கேட்டேன். படம் பார்க்கலை. பாடல் நல்லாருக்கு...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நான் படமே பார்க்கலை... பாட்டு நல்லாதான் இருக்கு, ஆனால் ரஜினி?! இனி வயசுக்கு தகுந்தமாதிரி ந்டிக்கனும்

   Delete
  2. இதையும் சேர்த்துக்குங்க வயசுக்கு தகுந்த நாயகிகளோட தான் நடிக்கணும்னு.

   அவர் நடிக்கும் அடுத்த படத்தில் மகள்களை விட மிகவும் இளைய வயதுடைய நாயகி தான் அவருக்கு ஜோடியாம்.

   Delete
  3. ம்க்கும்

   Delete