நாலு வெங்காயத்தை ஒரே தினுசுல கட் பண்ணவே துப்பில்ல. இதுல, நான் எங்க இதுலாம் செய்ய?! பார்த்து ரசிக்குறதோடு நிறுத்திக்கனும். அதான் கிட்னிக்கு நல்லது...
பூ பூத்தபின்தான் காய் காய்த்து, கனியாகும். இங்க கனி பூவாகி இருக்கு...
இன்னொரு பூ..
தர்பூசணி எங்காவது பறக்குமா?! இங்க பறக்குதே!!
அடுப்புல தர்பூசணிய பார்த்திருக்கோம். தர்பூசணியே அடுப்பாய் இப்பதான் பார்க்குறோம்.
வெள்ளரி பழத்துல பூ..
புருசன் பொண்டாட்டின்னாலே சண்டைதான். அதுக்கு பூண்டு கப்பிள்சும் விதிவிலக்கல்ல போல!
எவனா இருந்தாலும் வெட்டுவேன்.. மொமண்ட்..
இலையாடை...
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அதுக்கேத்த மாதிரி உணவினை அலங்கரிக்குறது இப்ப பேஷன். நம்மூரில் தொட்டில்ல போடுறது, பேர் சூட்டுறது மாதிரி வெளிநாடுகளில் பேபி ஷவர்ன்னு புதுசா பொறந்த குழந்தைக்கான நிகழ்ச்சி நடத்துவாங்க. அதுல முட்டையை இப்படி அலங்கரிச்சு வச்சிருக்காங்க.
திராட்சை ஜாடி..
பக்கம் பக்கமா படிக்குற இம்சையை கொடுக்கலியே!
நன்றியுடன்,
ராஜி
ஆஹா கண்ணுக்கு குளிச்சியா இருக்கு ..
ReplyDeleteஇதுவும் ஒரு அழகிய கலை ...ரசித்தேன் ராஜிக்கா
நானும் ரசித்துதான் பதிவு போட்டேன்ப்பா
Deleteஅனைத்தும் அருமை
ReplyDeleteஇலையாடை ஸூப்பர் சகோ
இதேமாதிரி இலையாடை இன்னும் நிறைய இருக்குண்ணே.
Deleteஅனைத்தும் அசத்தல்...!
ReplyDeleteநன்றிண்ணே
Deleteஅனைத்துப் படங்களும் செம...
ReplyDeleteநானும் கல்லூரிக்காலத்துல இப்படி எல்லாம் செஞ்சதில்லை எங்களுக்கு வெஜிட்டபிள் ஃப்ரூட் அரேஞ்ச்மென்ட் அப்படினு ஒரு போட்டி வைப்பாங்க. அப்ப பாகற்காய் முதலையா மாறும், வெள்ளரிக்காய் போட்வெங்காயம் பூங்கொத்து, ஆரஞ்சு ஆப்பிள் எல்லாம் பூவிரியறா மாதிரி நடுல மாதுளை வித்துபோட்டு அப்புறம் பப்பாளி ஃப்ளவர் வேஸ் இப்படிச் சின்ன சின்ன அலங்காரங்கள்தான்..அப்ப.
அப்புறம் நாங்க எக்கனாமிக்ஸ் ஆச்சே (முதல் வருஷம் கலந்துகிட்டாலும்) ஸோ இப்படி வேஸ்ட் பண்ணக் கூடாதுனு குரல் எழுப்பி ஆப்புறம் வெல்த் ஃப்ரம் வேஸ்ட்னு கொண்டு வந்தோம்.!!!
//பேபி ஷவர்ன்னு// பேபி ஷவர்னா நம்ம ஊர் சீமந்தம் சில கல்சர்ல அங்கௌ. சிலர் கல்சர்ல குழந்தை பிறந்ததும். சமீபத்துல கூட என் பையனோட ஃப்ரென்ட் அங்க பேபி ஷவர் கொண்டாடினாங்க...சீமந்தம்.
அங்கயும் பழங்கால முறைல நம்மூர் மாதிரி முத்ல குழந்தைக்கு மட்டும் தான் இந்தக் கொண்டாட்டம். பெண்கள் மட்டும் தான் வருவாங்க அப்படினு இருந்துச்சு. பாருங்க உலகத்துல எங்க போனாலும் எல்லாம் அதெ முறை தான்..செய்யற முறையும் பெயரும் தான் அந்தந்த ஊர் ல மாறுபடுது..
கீதா
விவரம் அறிந்தேன் கீதாக்கா
Deleteஅழகான பிரதிமைகள்....... நன்றி,தங்கச்சி!...// நல்ல வேள இதெல்லாம் நான் பண்ணினதுன்னு சொல்லல.....
ReplyDeleteசொல்லி இருந்தால் மட்டும் நம்பிடுவீகளா?!
Deleteசில விசேஷங்களுக்குச் செல்லும்போது சமையல் கான்டராக்ட் எடுத்தவர்கள் இப்படி தங்கள் கலை(கை)த்திறனை வெளிப்படுத்தி இருப்பதை நானும் பார்த்து ரசித்திருக்கிறேன்.
ReplyDeleteஇங்கு எல்லாமே அருமை.
நானும் பார்த்திருக்கேன். சகோ. ஆனால் இம்புட்டு துல்லியமா, நேர்த்தியா, அழகா பார்த்ததில்லை
Deleteஅனைத்தும் அருமை
ReplyDeleteஅருமை
நன்றிண்ணே
Deleteஇதற்கெனவே இப்போது படிப்பெல்லாம் வந்து விட்டது! சில திறமைசாலிகள் இருக்கிறார்கள். காண்ட்ராக்டில் விடும்போது இந்த மாதிரி திறமைசாலிகளை அழைத்து அவர்களிடம் பொறுப்பைத் தந்துவிட்டால் வெஜிட்டபிள் கார்விங் செய்து தருகிறார்கள். தில்லியில் எல்லா திருமணம்/நிகழ்வுகளிலும் இந்த வெஜிட்டபிள் கார்விங் பார்க்க முடிகிறது.
ReplyDeleteபெரியவளின் திருமணத்தின்போது இப்படி பண்ணிடலாமா?!
Deleteசில மண விழாக்களில் இவ்வித அலங்காரம்செய்யக்கண்டு இருக்கிறேன்
ReplyDeleteஇன்னும் நான் பார்க்கலைப்பா
Deleteஅருமையான படங்கள்
ReplyDeleteநீண்ட இடைவெளிக்கு பின் வருகை தந்தமைக்கு நன்றிப்பா
Delete