Monday, March 11, 2019

புஷ்பா புருசனை தெரியும்!! வாஸ்து புருசனை தெரியுமா?! - ஐஞ்சுவை அவியல்.

காலங்காத்தால மேடம் எங்க போயிட்டு வர்றீங்க?!

எதிர்க்க புதுசா வீடு கட்ட ஆரம்பிக்குறாங்க. அவங்க பூஜை போடுறதால என்னைய கூப்பிட்டாங்க. அங்கதான் போய் வர்றேன். 

பூமி பூஜை எதுக்கு போடுறாங்கன்னு தெரியுமா?! 

ம் தெரியுமே! எந்த செயலை செய்யும்போதும் கடவுளை கும்பிட்டு தொடங்குறது நம்ம பழக்கம்,. நல்லபடியா வீடு எழும்பி வரனும்ன்னு வேண்டிக்கிட்டு செய்யும் பூஜைதான் பூமி பூஜை.


அதும் சரிதான்! ஆனா, அதுமட்டுமில்ல. பூமியை நாம வெறும் கல்லா, மண்ணா மட்டும் பார்ப்பதில்லை. அதை உயிருள்ள ஜீவனாய் பார்க்கிறோம்.  பூமாதேவின்னு கடவுளாய் வணங்குறோம். பூமாதேவியை வீடுகட்டும்போது மம்பட்டி, கடப்பாரை மாதிரியான ஆயுதங்களால் காயப்படுத்துவோம். செங்கல், கருங்கற்களை போட்டு மிதிப்போம், மணல், ஜல்லி மாதிரியான பொருட்களால் சுமையேத்துவோம். அதையெல்லாம் எங்களுக்காக பொருத்துக்க வேணும், சபிச்சுடாதன்னு வேண்டிக்கவும்,  அங்கிருந்த புழு, பூச்சி, எலி, பாம்பு மாதிரியான உயிர்களோட வசிப்பிடத்தை அழிப்பதாலும், முற்காலத்தில் அவ்விடத்தில் நடந்த துர்மரணம் நடந்திருந்தால் அதுக்கான பரிகாரமாவும்தான் இந்த பூஜை நடத்தப்படுது.  செடிகொடிகள், புல்பூண்டு, மரம் மாதியான தாவரங்களையும் வெட்டி வீழ்த்துறோம். அதுக்குலாம் மன்னிப்பு கேட்கும்விதமாவும் இந்த பூஜை செய்யப்படுது. 


பூமியின்மீது கட்டப்படும் கட்டுமானங்கள் அனைத்தும் அந்த உயிர்த்தன்மையை கிரகித்து அதற்குரிய பலன்களை தருவதாக வாஸ்து சாஸ்திரம் சொல்லுது. பூமியில் சில குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் விஷேசமாக இருக்கும் புவி ஆகர்ஷண சக்தியையே வாஸ்து புருசனாய் நாம உருவகப்படுத்தி வெச்சிருக்காங்க நம்ம பெரியவங்க. வாஸ்து புருசன் எப்பயுமே தூங்கிட்டு இருப்பாராம். அவர் தூங்கி எழுதல், குளித்தல், உணவு உண்ணுதல், தாம்பூலம் தரித்தல் , தூக்கம்ன்னு அவர் செயல்களின் அடிப்படையில் வாஸ்து காலம் கணிக்கப்பட்டிருக்கு. வருசம் முழுக்க, எட்டு நாட்கள்தான் வாஸ்து புருசன் விழித்தெழுவார். அந்த 8 நாட்களில்கூட வாஸ்து புருஷன் 90 நிமிடங்கள் மட்டுமே விழித்திருப்பார். அந்த 90நிமிடத்தில் ஒவ்வொரு 18 நிமிடங்களிலும் பல் துலக்குதல், ஸ்நானம் செய்தல், பூஜை செய்தல், உணவு உண்ணுதல், வெற்றிலை போடுதல்ன்னு அவருடைய வேலையை வகைப்படுத்தி இருக்காங்க. வெற்றிலை போட்டு மீண்டும் தூங்க போய்டுவார் என்பது ஐதீகம். வாஸ்து புருஷன் உணவு உண்ணும் நேரத்திலும், வெற்றிலை போடும் (தாம்பூல தாரணம்) நேரத்திலும் அவருக்கு பூஜை செய்து வீடு கட்ட ஆரம்பித்தால் தடைகள் எதுவுமில்லாமல் வீடு கட்டி முடியும் என்பது நம்பிக்கை. 


வாஸ்து என்பது வாஸ்தி என்னும் லத்தீன் மொழியிலிருந்து வந்த வார்த்தையாகும். வாஸ்திக்கு வளமான, மங்களமான இடம்ன்னும், தேவர்கள் வசிக்கும் இடம்ன்னும் அர்த்தம்.  ஒருமுறை, அந்தகன்ன்ற அசுரனுக்கும் சிவபெருமானுக்கும் இடையில் போர் ஏற்பட்டது. அப்போது சிவபெருமானுடைய வியர்வையிலிருந்து மிகப்பெரிய சக்தி ஒன்று வெளிபட்டது. அது ஒரு அசுரனாக மாறி, சிவபெருமான் உத்தரவுப்படி அந்தகனை விழுங்கியது.  சிவனிடம் பல அற்புதமான வரங்களைப் பெற்று உலகையே ஆட்டிப் படைத்தது. அதனைக் கண்டு வருந்திய சிவபெருமான், வீரபத்திரனை ஏவி அசுரனை  அடக்கி,  கிழக்காகத் தலையை வைத்து விழும்படி கீழே சாய்க்கச் எய்தார்.  குப்புற விழுந்த அசுரன் மீண்டும் எழுந்துடாம இருக்க, தேவர்களை அவன்மேல் வசிக்கச் செய்தார். பூமி வடிவான பூசணிக்காயை  அசுரனுக்கு உணவாகக் கொடுத்தார். தேவர்களது பாதம் பட்டதால், அசுரன் புனிதத்தன்மை அடைந்தான். மேலும் மனிதர்களால் பூஜை செய்யப்படும் தகுதியையும் பெற்றான். அதுமட்டுமின்றி பூமி  தொடர்பான எந்த நிகழ்ச்சியானாலும் வாஸ்து புருஷனாகிய உன்னை சாந்தி செய்தபிறகுதான் வேலைகளைத் தொடங்குவார்கள் என ஈசன் வரம் தந்தார். அதானாலேதான் கட்டுமாணம் ஆரம்பிக்கும்முன் பூமி பூஜை போடுறாங்க. 
இந்த வாஸ்து புருசன் விழித்தெழும் நாள் எந்த வருடத்திலும் மாறாது. வருடத்தின்  எட்டு தமிழ் மாதங்களில் குறிப்பிட்ட தேதியில் நேரத்தில் விழித்தெழுவதாய் நம்பிக்கை. அன்றைய தினம், அமாவாசை, கிருத்திகை என எந்த பாகுபாடும் கிடையாது. குறிப்பிட்ட நேரத்தில் ராகுகாலம், எமகண்டம் என நாள், நேரம்ன்னு எந்த தோஷமும் கிடையாது. குறிப்பிட்ட அந்த எட்டு நாளில் பூமி பூஜை போட்டு வீடு கட்ட தொடங்கினால் எந்த சிக்கலும் இல்லாம வீடு எழும்பும். எந்த தோசமும் அண்டாது என்பது நம்பிக்கை. 


ஓ! இதுக்குலாம் தென்னாடுடைய சிவன்தான் காரணமா?! யாருக்கு என்ன வரம் கொடுக்கனும்ன்னு தெரியாம கொடுத்துட்டு திண்டாடுறதே இவருக்கு பொழப்பா போச்சு! அப்புறம் பகைவனுக்கும் அருளிய பரம்பொருள்ன்னு உன்னைய மாதிரியான ஆட்கள் சிலாகிப்பீங்க! 

காரணக்காரியமில்லாம எதுவும் நடப்பதில்லை. எல்லாமே ஒரு கணக்குப்படிதான் நடக்குது. அதுலாம் சொன்னா உனக்கு புரியாது. 

சரி, எனக்கு புரியாமயே இருக்கட்டும். அதென்ன தென்னாடுடைய சிவன், அப்ப வடநாட்டுலலாம் சிவன் கடவுள் இல்லியா?! 

நீ எகத்தாளமா கேட்டாலும் அதான் உண்மை. இங்கிருக்கும் சிவன் தான் அசல் சிவன், நமக்கு சிவன்தான் பரம்பொருள். ஆனா, வடநாட்டில் சிவனை ருத்திரனாதான் வழிபடுறாங்க. அங்க ருத்திரன் தான் பரம்பொருள். ருத்திரனின் அம்சமாய்தான் சிவனை பார்ப்பாங்க. நம்ம ஊரில் சிவன் ஆதி அந்தம் இல்லாதவர்ன்னு சொல்வோம்.  இங்க இருக்கும் கோவில்கள்லாம் ஆகம விதிப்படி கட்டப்பட்டிருக்கும். ஆனா, வடநாட்டில் ஆகமவிதிலாம் கிடையாது.  நம்ம ஊரில் லிங்கத்திருமேனி உட்பட எந்த மூலவரையும் தொட்டு வணங்கமுடியாது. ஆனா, வடநாட்டில் தொடலாம், நாமே அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்யலாம்.  உடனே, இங்க குறிப்பிட்ட குலத்தவரை சொல்லி எல்லாம் அவங்க வந்தபின்தான்னும், தீண்டாமைன்னும் சொல்வாங்க.  ஆனா, அங்க அப்படியில்லை அங்க சிவனே தீண்டத்தகாதவர்தான். காரணம் சிவன் செய்யும் தொழில் அப்பிடி. பிரம்மன் உயிரினை படைக்க, விஷ்ணு காக்க, சிவன் அழித்தல் தொழிலை செய்வதால் இந்த நிலை. நம்ம ஊரில் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐவகை தொழிலை செய்கிறார். அந்த ஐவகை தொழிலைதான்  நடராஜர் உருவம் நமக்கு உணர்த்துது.  அதுமட்டுமில்லாம சிவனை நடனத்தின் அரசனாய் பார்ப்பதும் நம்ம ஊரில்தான். வடநாட்டில் சிவன் லிங்கத்திருமேனியாய் மட்டுமே அறியப்படுவார். அங்கு நடராஜராய் அறியப்படுவதில்லை. நடராஜரை மூலவராய் கொண்ட பழைய கோவில்கள் வடநாட்டில் இருப்பதாய் எனக்கு தெரில. புதுசா  எதாவது வந்திருந்தால் உண்டு. இப்படி நாம சிவனை தலையில் வைத்துக்கொண்டாடுவதால்தான் அவருக்கு தென்னாடுடைய சிவன்னு பேரு.   கிண்டலாய் சொன்னாலும் அதான். சிவன் தென்னாட்டு கடவுள்தான். அதில் மாற்று கருத்தே இல்லை.
புராணக்கதைலாம் போதும். முதல்ல வாழும் வழியை தேடுவோம். இந்த படம் இப்ப ட்விட்டர்ல வைரலா வருது. அதனால் தினமும் காலைல மொட்டைமாடில, வீட்டு காம்பவுண்ட் சுவர்ல  கொஞ்சம் தானியமும், அங்கங்க கிண்ணத்துல தண்ணியும் வைக்க சொல்லி சுத்திக்கிட்டிருக்கு. 

கடந்த சில வருசமாவே செஞ்சுக்கிட்டிருந்தாலும், இந்த வருசம் கூடுதலாய் அம்மா வீட்டில் குருவிகளுக்குன்னு கூண்டு கட்டி,  வச்சிருக்காங்க சின்ன பொண்ணும் என் அம்மாவும். 
இதை நெட்ல சுட்டு வச்சிருக்கேன். லீவுக்கு வரும் பையன்கிட்ட சொல்லி இதேமாதிரி செய்ய சொல்லனும்.. பறவைக்கு தண்ணி வச்சா மரியாதையான, அன்பான, அழகான நல்ல பொண்டாட்டி அமையும்ன்னு வடநாட்டுல நம்பிக்கையாம்! 

ப்ச்ச்ச் எனக்குதான் இதுலாம் யாரும் சொல்லல :-(

உனக்குலாம் சொல்லித்தான் தெரியனுமாக்கும். நீ என்ன உசார் பேர்வழின்னு எனக்கு தெரியாதாக்கும். நீ சின்ன வயசுல எப்படி இருந்திருப்பேன்னு  யோசிக்கும்போதெல்லாம் இந்த வீடியோதான் நினைவுக்கு வரும்
அவ்வ்வ்வ் பயபுள்ள சூதனமாதான் இருக்குது. இந்த வயசுலயே இத்தனை உசாரு?!


அப்படியே உன்னைய மாதிரிதானே மாமா!!??

நன்றியுடன்
 ராஜி..


18 comments:

 1. வாஸ்து - உங்கள் நம்பிக்கை தொடரட்டும்... வளமுடன் வாழ்க...

  சிவன் தென்னாட்டு கடவுள்ன்னு சொல்லிட்டு, வடநாட்டுல நம்பிக்கை வேற...!

  தமிழ்நாட்டை துண்டு துண்டா விக்கிற வேலை ஆரம்பித்து எவ்வளவோ நாள் ஆச்சி...! ம்... என்னத்த சொல்ல...

  ReplyDelete
  Replies
  1. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லைண்ணே.

   இந்த சிவராத்திரிக்கு ஜக்கி படுத்துன பாட்டுக்கு சிவனை கண்டாலே பத்திக்கிட்டு வரும்.

   Delete
 2. எதைக் கேட்டாலும் நம்பிக்கை என்று சொல்லி விடுகிறார்கள் என்வீட்டி ந் மேல்டளத்தை வாடகைக்குவிட்டிருக்கிறேன் மாடிகட்டி 27 வருடங்கள் ஆகின்றன பலரும் வாடகைக்கு வந்து சொந்த வீடு கட்டிப்பிறகு போனவர்களுமுண்டு வாடகை கேட்டு வருபவர்கள் வாஸ்துஎன்றுஏதாவது சொல்ல ஆரம்பித்தால் நான் அவர்களை மேற்கொண்டு பேச விடுவதில்லை எந்த வாஸ்துபடியும் நான் கட்டியதில்லை அந்த பெயரைச் சொல்லி வாழ்பவர்கள் வாழட்டும் எனக்கு ஒப்புதல் இல்லை

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் நம்பிக்கை இல்லைப்பா. ஆளுக்காள் ஒவ்வொரு விதமாய் வாஸ்து பரிகாரங்கள் சொல்லப்படுது. எல்லாமே வியாபாரம்

   Delete
 3. பூமி பூசை போடாத இங்கிலீஷ்க்காரனும், அரபிக்காரனும்தான் இருநூறு மாடி பில்டிங் கட்டுகிறான்.

  காணொளியில் வரும் பையன் பயங்கர முன்னெச்சரிக்கையானவன் போலயே...

  ReplyDelete
  Replies
  1. அரபிக்காரன், இங்கிலீஷ்காரன் கதையை சொன்னா யு ஆர் ஆண்டி இண்டியன்னு சொல்லிடுவாங்கண்ணே!

   Delete
 4. யானை பாவம் எப்படித் தவிச்சுருக்கு...அதுக்கு எப்படித் தெரியுது பாருங்க டாங்கருக்குள்ள தண்ணி இருக்குன்னு....

  குழந்தை வீடியோ ரசித்தோம்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இப்ப கொஞ்ச நாளுக்கு முந்தி சின்ன தம்பி தனது வாழ்விடத்துக்காக போராடினதை பார்த்தும் நாம திருந்தல :-( பூமி எல்லாருக்குமே வாழத் தகுந்ததுன்னு நமக்கு ஏன் புரில!!

   Delete
 5. சுவையான அவியல்....

  தண்ணீருக்குத் தவிக்கும் யானை - பரிதாபம்.

  ReplyDelete
  Replies
  1. விழிப்புணர்வு வந்து பறவைகளுக்கு வீட்டு மாடில தண்ணி வைக்கனும்ன்னு இப்ப வைக்குறமாதிரி மற்ற விலங்குகளுக்கு வைக்க பழகனும்.

   Delete
 6. ஐஞ்சுவை அவியல் ரசித்தேன்.

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துளசி சார்

   Delete
 7. வாஸ்து பகவான் தகவல்கள் மற்றும் சிவபெருமான் தகவல்கள் சுவாரஸ்யம்

  யானைகளும் விலங்கு, பறவைகளையம் தண்ணீருக்குத் தவிக்கும் அவலம்... அது சுயநல மனிதனால் விளைந்தது.

  கடைசி வீடியோ மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. மனித இனத்தை மாதிரியான சுயநலமான ஜீவன் எந்த லோகத்திலும் கிடையாது சகோ

   Delete
 8. வணக்கம் சகோ !

  அடடா எத்தனை நல்ல விடயங்கள் அறிந்தும் அறியாமலும் இருந்தவைகளை மீட்டியமைக்கு நன்றிகள்

  ஆமா வாஸ்து புருஷனை அறிந்தேன் அந்தப் புஸ்பா புருஷன் யாரு அதே பரோட்டா சூரி தானே ?


  பழமைக்கும் சிறப்புண்டு படித்திட்டால் எல்லாம்
  பருவத்தைச் சிறப்பிக்கும் நன்றே !- தினம்
  அழகாக இவ்வாழ்க்கை அறிவோமே! நல்ல
  அறிவார்ந்த கதையெல்லாம் இன்றே !

  வாழ்க நலம் !

  ReplyDelete
  Replies
  1. புஷ்பா புருசன் யாருன்னே தெரியாது சகோ. எல்லாருமே எல்லா விசயத்தையுமே தெரிஞ்சு வச்சுக்க முடியாது சகோ.

   Delete