Thursday, March 21, 2019

இதுலாம்கூட கைவண்ணத்துல சேரும்தானே?! - கைவண்ணம்

இந்த வாரம் ரொம்ப பிசி. அதனால், ஒரே ஒரு டேபிள்மேட் மட்டும்தான் முடிக்க முடிஞ்சுது. டேபிள் மேட்ங்குறதால குஞ்சலம்லாம் வைக்கல...  நாலு நாளில் ஒரு மேட் போட்டு முடிச்சு கொடுத்தாச்சு. விலை 175ரூபா சொன்னேன். வாங்கிக்கிட்டாங்க. பேசாம, உங்களைலாம் நம்பி!!! பேஸ்புக்ல ஒரு பேஜ் ஓப்பன் பண்ணிடலாமான்னு இருக்கேன்!!

 வுல்லன்ல ஒரு ரோஸ்....

 டேபிள் மேட் நடுவால வச்சு தச்சாச்சு.....
நல்லா வந்திருக்குறதா எனக்கு தோணுச்சு! உங்களுக்கு?!

கைவண்ணம்ங்குறது வெரும் பின்னுறது, ஒட்டுறது, வெட்டுறது, தைக்குறது மட்டும்தானா?!

 பொங்கல் குழம்பு வைக்க துவரை, அவரை, கொண்டைக்கடலை, மொச்சைலாம்  வாங்கி வந்ததில் எல்லாத்துலயும் சில விதைகளை நட்டு வச்சேன். அதுல துவரையும், அவரையும் பிழைச்சுட்டுது. அவரை ரெண்டு கிலோவுக்கு காய்ச்சிருக்கும். துவரை ஒரு கிலோவுக்கு காய்ச்சுது. துவரை மட்டும் காம்பவுண்டுக்கு வெளிய இருக்குறதால ஆடு, மாடு மேய்ஞ்சு அதில் தப்பி, வீதியில் போவோர், வருவார் பார்வைக்கும், கைக்கும் தப்பியது இது...

 காய்கறி தோலை செடிகளில் கொட்டுவது வழக்கம். அதுப்படி கெட்டுப்போன தக்காளியை போட்டதுல விளைஞ்சது....  பதிவுக்காக ஒரு வாரம் சேமிச்சு வச்சது... 
என் அத்தை வீட்டில் கிட்டத்தட்ட கமலா பழம் அளவுக்கு எலுமிச்சை காய்க்கும். அதில் சிலதை எனக்கு கொடுத்தனுப்ப, அதன் விதைகளை வீட்டை சுத்தி போட்டதுல 3 செடி முளைச்சு காய்ச்சிருக்கு. முதல்முறை கொஞ்சமாதான் காய்க்குமாம். அம்மா சொன்னாங்க. 
வீடு கட்டும்போது காம்பவுண்ட் உட்பட்ட பகுதிகளில்கூட எல்லா இடத்துலயும் சிமெண்ட் பூசி மெழுக ஒன்றரை ஜல்லி கலந்து போட்டாச்சு.  ரெண்டு நாள் கழிச்சு போனபோதுதான் இந்தமாதிரி ஏற்பாடு தெரிஞ்சுது. இங்கெல்லாம் மண்ணா இருந்தால் வீடு முழுக்க மண் ஆகும்ன்னு எல்லாரும் எனக்கு புத்திமதி சொல்ல, சரி கொஞ்சமாச்சும் செடி வைக்க இடம் கொடுங்கன்னு காம்பவுண்ட் ஓரம் ஓரடி அகலத்துல கொஞ்சம் இடம் விட்டாங்க.  அதுல, துளசி, பொன்னாங்கன்னி, மல்லி, ரோஜா, வாழை, முருங்கை, அவரை, கத்தாழை, தக்காளி, மாதுளைன்னு வைக்க, கீழ ஜல்லி இருக்குறதால் வேர் ஆழமா போகாம செடிலாம் சவலை குழந்தைமாதிரி வளர்ச்சி குறைவாதான் இருக்கும்.

 முருங்கை செடி வச்சு கிட்டத்தட்ட மூணு வருசம் ஆச்சு. ஒவ்வொரு மழைக்கும் ஒடிஞ்சு விழுந்துடும்,. கீரைக்காச்சுன்னு மனசு தேத்திக்குவேன். இந்த வருச மழைக்குதான் தப்பி முருங்கைக்காய் வச்சிருக்கு. நீளமான காய் காய்க்கும் மரத்து கிளைதான் வச்சேன். ஆனா, சத்து இல்லாததால் குட்டையா காய்ச்சிருக்கு. 
மல்லிகை செடியில் இந்த வருசத்துக்கான முதல் பூ, கூடவே சாமந்தியும்...  என் அம்மாவும், என் பையனும் காய்ந்த செடி வச்சாலும் துளிர்க்கும். ஆனா, என் கைராசி அப்படி இல்ல. என் அம்மா, பையனுக்கு செடி வளர்ப்பதில் ஆர்வம் அதிகம். ரெண்டு பேரும் எதாவது வெட்ட, நட,விதைக்கன்னு இருப்பாங்க. என் பங்குக்கு அவங்க நட்ட செடிகளுக்கு  தண்ணி சுத்தம் செய்து வெளியாகும் உப்பு தண்ணிய சிரமம் பார்க்காம குடத்துல பிடிச்சு வந்து செடிக்கு ஊத்துவேன். இலை, தழை சேராம பார்த்துப்பேன். இதுலாம்கூட கைவண்ணத்துல சேரும்தானே?!

நன்றியுடன்,
ராஜி.

16 comments:

  1. உங்களுக்கு பல திறமை இருக்கு சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. ஆமா. இல்லன்னா இத்தனை திட்டு வாங்கி கமுக்கமா இருப்பேனா?!

      Delete
  2. ராஜி கை வேலை டேபிள் மேட் சூப்பர்!! ரொம்ப அழகா பின்னியிருக்கீங்க. எனக்கு என் பல வருடங்களுக்கு முன்னான நினைவுகள்...க்ரோஷியோ பேக் எல்லாம்போட்டுருக்கேன்...இப்ப? ஹிஹிஹி...

    தோட்டம் அருமை. வீட்டுலையே இப்படிக் காய்ச்சா நல்லாருக்கும். எனக்கும் தோட்டம் வைப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. இப்ப இங்க வீட்டைச் சுத்தி மண் இல்லை சிமென்டுதான் ஸோ வைக்க முடியலை...

    மல்டி டேலண்டட் ராஜி நீங்க...பாராட்டுகள்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. குரோஷா பேக் இதுவரை போட்டதில்லை கீதாக்கா..

      Delete
  3. உங்கள் கைத்திறமைக்கு வாழ்த்துகள் சகோதரி. தோட்டத்தில் விளைந்தவை நன்றாகவே இருக்கின்றன.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. ம்ம் எந்த மருந்தும் போடாததால் ஆரோக்கியமானதுதான் துளசி சார்.

      Delete
  4. மேஜை விரிப்பு அழகு. தோட்ட வேலைகள் மனதுக்கு புத்துணர்வு தரும். நாமே அறுவடை செய்து, சமைத்து சாப்பிடும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிண்ணே

      Delete
  5. கைவண்ணம் அருமை.

    எங்கள் வீட்டில் கூட நீளமாய் காய்க்கும் முருங்கை போத்து வைத்தோம். தண்ணீர் குறைவாய் ஊற்றினோமோ என்னவோ சாதாரண காய்தான் காய்க்கிறது. இரண்டு முறை வெட்டியும் விட்டோம். ஊ..ஹூம்... பத்து காய் காயத்தால் பெரிது!

    ReplyDelete
    Replies
    1. போன ஜூலைல மூணு காய் காய்த்தது. இந்தமுறை 20 காய் விட்டிருக்கு.

      Delete
  6. பன்முகத்திறமை கொண்ட சகோவிற்கு வாழ்த்துக்கள்.
    தங்களின் மற்ற பதிவுகளை எல்லாம் பொறுமையா படிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பொறுமையா படிங்க. எங்கும் போய்டாது.

      Delete
  7. அருமை
    வாழ்த்துகள் சகோதரியாரே

    ReplyDelete
  8. பின்னுறதை அழகாக்குறது கைவண்ணம். சமைப்பதைச் சாப்பிட வைப்பது கைப்பக்குவம்.
    உங்களுக்கு ரெண்டுமே வாய்ச்சிருக்கு!

    ReplyDelete
    Replies
    1. அப்படியே ஒரு எட்டு வீட்டுக்கு வந்து எட்டி பார்த்தால் தெரியும் சேதி.

      Delete