Sunday, March 03, 2019

காதல்! காதலின்றி வேறில்லை!!- சுட்ட படம்


இதுக்கு போனஸ் மார்க்தான் கொடுக்கனும். பயபுள்ள எம்புட்டு அறிவாளி?!

எதுக்கு காது சுத்தி மூக்கை தொடனும்?! ஒரு லிஃப்டோ இல்ல எஸ்கலேட்டரோ வச்சிருக்கலாமில்ல!!
இது அதுக்கும்மேல...ன்ற ஐ பட வசனம் நினைவுக்கு வந்தால் என் பொறுப்பல்ல!

உலகமே என் விரல் அசைவில்ன்னு சொல்வாங்களே! அது இதுதானா?!
நிஜமாவே இந்த பாப்பா இதை செஞ்சிருந்தால் வாழ்த்துகள். இல்லன்னாலும் கிரியேட்ட்வா சிந்திச்ச அந்த மனிதருக்கு பாராட்டுகள்.
Image may contain: 1 person, text
உக்காரச்சொன்னது ஒரு குத்தமாய்யா??!!
Image may contain: 2 people, people smiling, meme and text
கொஞ்சம் காத்திருந்து 2000ல பொறந்திருக்கலாமோ!!
காதல்.. காதல்.. காதலின்றி வேறில்லை :-)

நாடி நரம்புலாம் சாப்பாட்டு வெறி ஏறிப்போன ஒருத்தங்களாலதான் இப்புடி சிந்திக்க முடியும்?!
இனி எப்படி திருஷ்டி படும்ன்னு பார்க்குறேன்?!
கழுதைகூட ரூல்சை மதிக்குது!!
நம்பிக்கைதானே எல்லாத்துக்கும் அடிப்படை...
இதையெல்லாம் பெத்துக்கிட்டு... ஸ்ஸ்ஸ்ஸ் அபா! 
காதலி ஏமாத்துறான்னு  தெரிஞ்சும் தொடர்ந்து அன்பு செலுத்தும் அப்பாவி. இதுல ஏமாளி யாரு?!

பெத்ததுங்க படுத்தும் பாட்டுக்கு நியாயமா குழந்தை ஆசையே வரக்கூடாதுதான். ஆனா பிஞ்சுக்குழந்தைகளை பார்க்கும்போது மனசு ரசிக்குது.

இன்னிக்கு பக்கம் பக்கமா படிக்கும் இம்சைல இருந்து விடுதலை. எஞ்சாய் சகோ’ஸ்
நன்றியுடன்,
ராஜி

14 comments:

 1. இரசிக்க வைத்தது சகோ வசனங்களும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின்
   வருகையையும், கருத்தினையும் நானும் ரசித்தேன்ண்ணே

   Delete
 2. // நம்பிக்கைதானே எல்லாத்துக்கும் அடிப்படை... // சிறப்பு...

  ReplyDelete
  Replies
  1. நம்பிக்கை இல்லன்னா ஒன்னும் பண்ணமுடியாதே!

   Delete
 3. // எதுக்கு காது சுத்தி மூக்கை தொடனும்?! ஒரு லிஃப்டோ இல்ல எஸ்கலேட்டரோ வச்சிருக்கலாமில்ல!! //

  எஸ்கலேட்டர்ல ஏற எல்லோருக்கும் தைரியம் வருவதில்லை! நல்லது செய்தாலும் குறை சொன்னால் எப்படி!

  மிளகாயில் ஓவியம் அற்புதம்.

  தாத்தாவும் பாட்டியும் இன்னொரு அற்புதம்.

  "fan ல உட்காருங்க" - சிரித்துவிட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. எஸ்கலேட்டரில் ஏற எனக்கு பயம். ஏறும்போதாவது அப்பிடி இப்படி ஏறிடுவேன். இறங்கும்போது ரொம்ப கஷ்டப்படுவேன். பிள்ளைங்க சிரிப்பாங்க. மாமா எப்பயும்போல கண்டுக்காம போய்டுவார். படிகளில் இல்லன்னா லிப்ட்ல இறங்கிவந்துடுவேன்.

   Delete
 4. மிளகாயில் ஓவியம் சூப்பர்...

  எல்லாமே அட்டகாசம் ராஜி க்கா

  ReplyDelete
  Replies
  1. எல்லாமே சுட்டதுப்பா. பாராட்டுகள் படைத்தவரையே சேரும்...

   Delete
 5. ஃபேன்ல உக்காருங்க...ஹா ஹா ஹா ஹா ஹா ஹா செம ஜோக்..

  அது சரி அந்த பொண்ணுகுத் தாலி அந்த மிளகா கத்தி குத்திப்படாது?!!

  அந்த போலீஸ் ஆஃபீஸ் செய்தி நல்லாத்தானே இருக்கு நல்ல விஷயமாச்சே.....

  கழுதைங்க லூலுங்க ரோட் ரூல்ஸ் தெரியாம வந்துட்டானுங்க ஓட்ட நு அவங்க பெயரைக் கெட்டதாக்கிட்டுருக்கோம்...பாவம் அதுங்க...

  எல்லாமே நல்லாருந்துச்சு ராஜி ரசித்தோம்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. மிளகா, எலுமிச்சை தாலி குத்தாது. தங்கம் கிடைக்குதுன்னா எத்தனை இம்சைன்னாலும் பொம்பளைங்க தாங்கிப்பாங்க.

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதாக்கா

   Delete
 6. நல்லது செய்தாலும் அதிலும் குறை கண்டுபிடிப்பது.... என்ன சொல்ல! இங்கே எதைச் செய்தாலும் குற்றம் சொல்ல நிறைய பேர் இருக்கிறார்கள்!

  மிளகாய்! :)

  ஃபேன்ல உட்காருங்க! ஹாஹா...

  ReplyDelete
  Replies
  1. அப்படிதான் குறை சொல்வோம்...

   Delete
 7. படங்கள் நல்லாவே ரசித்தேன். வடிவேலுவை வச்சி மீம்ஸ் நல்லாவே போடறாங்க

  ReplyDelete
 8. சுட்ட படங்களை பார்த்தாலும், உங்களுடைய வசனங்கள் தான் ரசிக்க வைக்கின்றன

  ReplyDelete