Friday, July 05, 2013

திருக்கழுகுன்றம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

நாலாவதோ! அஞ்சாவதோ படிக்கும்போது ஸ்கூல்ல டூர் புரோகிராம் போட்டாங்க.  மகாபலிபுரம், திருக்கழுகுன்றம், மதுராந்தகம், மேல்மருவத்தூர்ன்னு. நானும் போய்  வரேன்னு அப்பாக்கிட்ட கேட்டதுக்கு போய் வான்னு சொல்லிட்டார். ஆனா, என் பாட்டி,  அழகோடும், அறிவோடும் ஒத்தை புள்ளையை வெச்சிருக்கோம்(யார் அந்த அழகான,  அறிவான ஒத்தைப்பிள்ளைன்னு கேக்கப்படாது..,) எதாவது ஆகிட்டா என்ன பன்றது?!  அதனால, டூரும் வேணாம், கீரும்  வேணாம்ன்னு சொல்லிடுச்சு. என்னை போல நல்லவிதமா வளரலை என் அப்பா. உடனே அம்மா பேச்சை கேட்டு டூர் போக வேணாம், எப்பவாவது கூட்டி போறேன்”ன்னு சொல்லிட்டார். அன்னிக்கு குடுத்த வாக்கை போன மாசம் வரை காப்பாத்தலை. என்ன தோணுச்சோ?! திடீர்ன்னு இந்த விடுமுறைக்கு கூட்டி போய் வந்துட்டார். நான் 5 வது படிக்கும்போது போக ஆசைப்பட்ட ஊரை என் பிள்ளை 9வது படிக்கும்போது போய் பார்க்குறேன். What a pity?! What a pity!?அப்படி ரொம்ப நாளா போக  ஆசைப்பட்ட ஊரான,  செங்கல்பட்டு பக்கத்தில இருக்கிற ”திருக்கழுகுன்றம்” ஊருக்குதான் நாம புண்ணியம் தேடி போகப் போறோம்... ஓகே போலாமா?! 

நாம "திருகழுகுன்றம்" போறதுக்கு முன்னே ,செங்கல்பட்டு புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து கொஞ்ச தூரத்தில ,மிகவும் பழமை வாய்ந்த ஒரு இராமர் கோவில் இருக்கு அதிகாலையே கோவிலுக்கு போய்ட்டதாலே அங்கே விஷயம் தெரிஞ்சவங்க யாரையும் பார்க்க முடியல அதனால அதன் வரலாறு தெரியலை அடுத்த முறை போகும் போது கேட்டு வரணும் 
ராமர் கோவிலின் உள்பக்க தோற்றம்


அப்புறம்  அங்கிருந்து புதிய பஸ் ஸ்டேண்டிலிருந்து நிறைய பஸ் திருக்கழுகுன்றம் போகுது.  அங்கிருந்து  திருக்கழுகுன்றம் வந்து சேர்ந்தோம் .காலையிலயே  போய்டுறது நல்லது ஏன்னா!  அங்க 2 கோவில்கள் இருக்கு. ஒண்ணு  மலைமேல், இன்னொண்ணு,  ஊருக்குள் . மலைமேல இருக்குற கோவில் ” திருமலை” ஊருக்குள்ளே இருக்கும் கோவில் “ தாழக்கோயில்”ன்னு சொல்றாங்க..
இந்த இரண்டுமே பெரிய கோவில்கள் அதனால கோவிலை சுத்தி பார்க்க நிறைய நேரம் ஆகும் முதல்ல மலைமேல் இருக்கும் கோவிலை பற்றி பாப்போம் .. 
இறைவர் திருப்பெயர்:வேதகிரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்:சொக்கநாயகி
இந்த தலம் வேதமே, மலையாய் மாறினதால,  'வேதகிரி' ன்னு பேரு வந்துச்சாம்.  ”வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம்” என்றா பேருலயும் இத்தலம் சொல்லப்படுதாம்.  500 அடி உயரமுள்ள இம்மலையில தினமும் ”உச்சிப்பொழுதில், ரெண்டு  கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு 'பட்சிதீர்த்தம்' ன்னும்; திருக்கழுக்குன்றம் ன்னும் பேராச்சு.
புராண கதைகளின் படி, தேவர்களின் தலைவனான இந்திரன்,  இடி மின்னல் வடிவில் வந்து இங்குள்ள இறைவனை வழிபாடு செய்வதாக சொல்லப்படுது. இதுக்கு ஆதாரமா, 1930ம் ஆண்டு நவம்பர் 10ம் நாள் மிகப்பெரிய இடி ஒன்று திருமலைக் கோயில் கலசத்தை தாக்கி,  அந்த துளை வழியா கருவறையில் நுழைந்து சிவனை அடைந்ததாகவும், அதனால் உருவான தாங்கமுடியாத வெப்பம் மற்றும் அதிர்வுகளை மறுநாள் கோயில் கதவை திறந்ததும் உணர்ந்ததாகவும் கூறுகின்றனர். இப்பவும் இந்த வழிபாடு நடைபெற்றுக்கொண்டு இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

மலைக கோவிலினுள் செல்வதற்கு நுழைவு கட்டணம் உண்டு கோவிலின்  கீழே எல்லா பூஜை பொருட்களும் கிடைகின்றன 
படிகள் கொஞ்சம் அதிகமாகவும் சாய்வுதளம் கொஞ்சம் கடினமானதாகவும் இருகிறதுனால வயசானவங்களும் கொஞ்சம் பருமனான உடல் இருகிறவங்களும் ,ஏறி செல்ல பக்கவாட்டில் கம்பிகள் பதிக்க பட்டு இருக்கு 
வழி நெடுக என் ப்ரெண்ட்ஸ் பட்டாளம் .பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு நலம் விசாரிச்சிட்டே  போனேன் 

வழியில சின்ன சின்ன கல்மண்டபங்கள் இருக்கு. நாம கொண்டு போற நொறுக்ஸ் நொறுக்கி ரிலாக்ஸ் பண்ண கல்லால செஞ்ச இருக்கைகள் இருக்கு 
சாமி படி ஏறிகிட்டே கோவிலின் ஸ்தல வரலாறை கொஞ்சம் பார்க்கலாம் 

இந்த பகுதிக்கு இரண்டு வெள்ளை கழுகுகள் மதிய வேளையில் வருது. சிறு குழந்தைக்கு உணவு ஊட்டுவது போல அந்த இரண்டு கழுகுகளுக்கு பண்டாரங்கள் உணவு ஊட்டுவாங்க. ஒரு கிண்ணத்துல நல்ல தண்ணி, ஒரு கிண்ணத்துல நல்ல எண்ணெய், ஒரு கிண்ணத்துல சீயக்கா பொடியும் வச்சிருப்பாங்க பண்டாரங்கள். கழுகுகள் வந்ததும் முதலில் நல்ல தண்ணியில் முங்கி, அடுத்து நல்ல எண்ணெயில் முங்கி, சீயக்காஇயில் முஞ்கி கட்ட கடைசியா மீண்டும் நல்ல தண்ணில முங்கி சுத்தாமான பின் ...,

பண்டாரங்கள் வைத்திருக்கும், சர்க்கரை பொங்கலையும், வென்பொங்கலையும் சாப்பிட்டு கோவிலை வலம் வந்துட்டு  பறந்து போய்டுமாம். யார் இந்த கழுகுகள்? பிரம்ம புத்திரர்கள் எட்டு பேர், சாரூப பதவி வேண்டி கடும் தவம் இருந்தாங்க. சிவப்பெருமானும் இவர்களின் தவத்தை மெச்சி காட்சி கொடுத்தாராம். தங்கள் தவத்தை ஏற்று சிவன் வந்ததை கண்டு பேரானந்தம் அடைந்து, பதட்டத்தில் ”சாரூப பதவி” வேணும் ன்னு கேட்பதற்கு பதிலாக ”சாயுச்சிய பதவி” ன்னு  கேட்டுட்டங்களாம். “நீங்கள் 8 பேர். இரண்டு இரண்டு பேர்களாக பிறந்து இறைவனுக்கு பணி செய்வீர்கள்.”ன்னு சிவன் இவர்களுக்கு வரம் தந்தார். இவர்கள்தான் முந்தய யுகங்களில் ”சண்டன், பிரசண்டன்” எனவும், ”சம்பாதி, சடாயு” எனவும், ”சம்புகுந்தன், மாகுத்தன்” எனவும் இரண்டு இரண்டு பேராக கழுகுகளாக பிறந்து இறைவனை தொழுது வந்தாங்க. எட்டில் மீதி இரண்டு பேர் இந்த கலியுகத்தில பூஷா, விதாதா என்ற இரண்டு கழுகுகளாக பிறந்து இன்றுவரை பக்தர்களுக்கு தரிசனம் தர்றாங்கன்னு ஸ்தல வரலாறு சொல்லுது. 

சரியா பகல் பன்னிரெண்டு மணிக்கு இரண்டு கழுகுகள் திருக்கழுகுன்றம் வந்து பண்டாரங்கள் கொடுக்கும் சர்க்கரை பொங்கலை சாப்பிடுகிறது என்பதை 03.01.1681 வருடம்  இந்த அற்புத சம்பவத்தை ஆலயத்தின் கல்வெட்டில் டச்சுக்காரர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். மலை அடிவாரத்தில் வேதங்கள் நான்கு சிகரங்களாக இருப்பதால் ”வேதகிரி” ன்னு பெயர் பெற்ற இடத்தில் ”வேதகிரி ஈஸ்வரர்” உறையும்  ஆலயத்தை இரண்டு வெள்ளை கழுகுகள் வட்டமிட்ட பிறகுதான் உணவே உட்கொள்கிறது. இந்த இரண்டு கழுகுகளும் காசியில் கங்கையில் ஸ்நானம் செய்கின்றன. மதிய உணவு உண்ண திருக்கழுகுன்றம் வந்து உணவு சாப்பிட்டு, இரவு இராமேஸ்வரம் கோயில் கோபுரத்தில் நித்திரை செய்கிறது என்று ஸ்தல புராணம் சொல்கிறது.
வேதகிரி ஈஸ்வரர் ஆலயத்தின் கர்ப்ப கிரகத்தை பல்லவ மன்னவன் மகேந்திர வர்மானால் மலையை குடைந்து உருவாக்கப்பட்டது
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில் 1400 ஆண்டுகால பழமை வாய்ந்தது. திருக்கழுக்குன்றம் திருமலைக் கோயிலின் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்
7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன
கோவிலை விட்டு வெளியே வரும் போது பல சிறிய விக்ரகங்கள் கொண்ட சிவலிங்கங்கள் காணபடுகின்றன 


அதெல்லாம் தொழுது விட்டு கழுகுகள் உணவு உண்ட மேடைக்கு வந்தோம் பூமியில் இபொழுது அநியாயங்கள் ,ஒழுக்ககேடுகள் நிறைய நடக்குறதால!!??அந்த 2 கழுகுகள் வருவது 16 வருடங்களுக்கு முன்பே நின்னுடுச்சாம் ஆனால் வீடியோ காமரா அவுளவாக வராத காலத்திலேயே இந்த காட்சியினை வீடியோவாக எடுத்து வைத்துள்ளனர் 
வேதகிரிஸ்வரரை வணங்கிய பிறகு மலையை விட்டு இறங்கி வரும் போது பல அற்புத சிற்பங்களை காணலாம்

மலையை விட்டு இறங்கி வரும் போது அடிவாரத்தில் இருக்கும் “சித்தாதிரீ கணபதி”யை வணங்க வேண்டுமாம்
பதிவின் நிளம் கருதி, மலை அடிவாரத்தில் உள்ள ”தாழக்கோயில்” பற்றி அடுத்த பதிவுல பார்க்கலாம். வர்ட்ட்ட்ட்ட்டா?

16 comments:

  1. ஒரு சிறந்த பதிவர்
    ஒரு ஸ்தலம் போனால் நூறு பேர்
    போனமாதிரியெனச் சொல்லலாம் போல உள்ளது
    நாங்களும் உடன் வந்த திருப்தி
    படங்களுடன் பதிவு அருமை
    பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா!

      Delete
  2. // அழகோடும், அறிவோடும் ஒத்தை புள்ளைஅயி வெச்சிருக்கோம் //

    நம்பிட்டோம்... நம்பிட்டோம்...

    ReplyDelete
  3. யக்காவோப்... புண்ணியம் கிடைச்சுதா?? டவுட்டு

    ReplyDelete
  4. கோவிலைப் பற்றிய விளக்கம் அருமை (உங்கள் பாணியில்)

    'வெள்ளி' புண்ணியம் தேடி பயணம் தொடரட்டும்...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  5. திருக்கழுகுன்றம் கழுகை பற்றி என் பாட்டி சொன்ன கதைகள் நினைவிற்கு வந்தது

    ReplyDelete
  6. அறியாத தகவல்கள், அறிய படங்கள், நன்றி சகோ..

    ReplyDelete
  7. நல்ல தொகுப்பு ..அந்த அழகான பிள்ளை கடைசில அழகான மலைக்கு போய் படம் எடுத்து வந்ததே அழகுதானே

    ReplyDelete
  8. Very useful information and wonderful narration..Thanks

    ReplyDelete

  9. வணக்கம்!

    திருக்கழு குன்றத் திகழ்ஒளி சீரை
    அருட்பெறும் வண்ணம் அளித்தீா்! - ஒருமையுடன்
    ஒன்றிப் படித்தேன்!உயா்ந்த பதிவுக்கு
    நன்றி வடித்தேன் நயந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  10. திருக்கழுக்குன்றம் போன உணர்வு. தொடரட்டும் பயணப் பகிர்வுகள்.....

    ReplyDelete
  11. தல புராணம், அழகான படங்கள் மற்றும் உங்களுடைய எழுத்துநடை.... ரசிக்க வைத்தது... நேரில் சென்றது போன்ற உணர்வு.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. திருக்கழுக்குன்றம் மீண்டும் தர்சித்ததில் மகிழ்கின்றேன். விரிவாக பகிர்ந்துள்ளீர்கள்.

    நான் முதன்முதல் இந்தியாவந்தபோது சென்ற தலயாத்திரையில் இக்கோயிலும் ஒன்று. அப்பொழுது கழுகுகள் உணவருந்த வந்தன இக்காட்சியையும் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன்.

    ReplyDelete
  13. வண்ணப்படக்காட்சி கள் அருமை கோயிலின் தலபுராணம் எடுத்து கூறிய விதம் கோயிலில் நேரில் வேதகிரிஸ்வரரை பார்தது போன்ற உணர்வு தோன்றியது வாழ்த்துக்கள் நன்றி

    ReplyDelete
  14. ரொம்ப அற்புதமான தகவல்கள் ஆலய தரிசனம் செய்த திருப்தி.......
    உங்களின் அடுத்த பதிவை ஆவலோடு எதிர் பார்கின்றோம் .......................

    ReplyDelete
  15. திருக்கழுக்குன்றம் பற்றிய தற்போதைய தகவல்கள் வரை இங்கு சென்று காலணம்
    http://thirukalukundram.blogspot.com/
    நன்றி
    வாழ்கவளமுடன் வேலன்.

    ReplyDelete