Thursday, January 02, 2014

ஐஸ் குச்சி ப்ளவர் வாஸ் - கிராஃப்ட்

ஃப்ளவர் வாஸ் எந்த ரூபத்துல இருந்தாலும் பெண்களுக்குப் பிடிக்கும். அப்புக்கு இப்ப அரைப் பரிட்சை லீவு. அவனை சும்மா விட்டா சைக்கிள், வண்டி எடுத்துக்கிட்டு ஊரை சுத்துவான். இல்லாட்டி வீட்டுல இனியாவோடு சண்டைப் போட்டு அவளை அடிப்பான். அதனால, ஐஸ்குச்சி ஒரு பண்டல் வாங்கிக்கொடுத்து எப்படி செய்யனும்ன்னு ஐடியாவும் சொல்லிக் கொடுத்து வழக்கம்போல பதிவு தேத்த கேமராவும் கொடுத்துட்டு, நான் வேலை பார்த்துட்டு இருந்தேன். பத்து நிமிசத்துல அழகான ஒரு ஃப்ளவர் வாஸ் ரெடி பண்ணிட்டான். துணைக்கு ஒரு ஆளை வச்சுக்கிட்டு. அது யார்ன்னு பதிவின் கடைசில சொல்றேன்.

தேவையானப் பொருட்கள்:
ஐஸ்குச்சி - தேவையான அளவு
ஃபெவிக்கால் 
செயற்கை பூங்கொத்து


எல்லாப் பொருட்களையும் எடுத்து வச்சுக்கோங்க. லைட் கலர் டைல்ச் போட்ட வீடா இருந்தா கீழ ஒரு நியூஸ் பேப்பர் விரிச்சுக்கோங்க. தவறி ஃபெவிக்கால் கீழக் கொட்டிட்டா தரையெல்லாம் அழுக்காகும். அது க்ளின் பண்ணும் வேலை வேற இம்சை பண்ணும்.


முதல்ல நெடுக்கு வாக்குல சுமாரா 5செ.மீ இடைவெளில ரெண்டு குச்சி வச்சுக்கோங்க. அதுக்கப்புறம் மேலயும் கீழயும் ஒரே சீரான இடைவெளி விட்டு, கம் தடவி குறுக்கு வாக்குல குச்சி வைங்க. 
அதுக்கப்புறம் முதல்ல நெடுக்கு வாக்குல வச்ச குச்சியோட வெளி முனைக்கு நேரா வரும் மாதிரி கம் தடவி குச்சி வச்சு ஒட்டுங்க. இப்படியே குறுக்கும், நெடுக்கும் மாத்தி ஒரு பத்து அடுக்கு வைங்க. 

அதுக்கப்புறம், குச்சிகளை உள்முனை நுனில இருந்து வச்சு ஒட்டுங்க. இப்படியே பத்து அடுக்கு குச்சிகளை ஒட்டிக்கோங்க. அடுத்து வெளி நுனில இருந்து ஆரம்பிச்சு பத்து அடுக்கு குச்சிகளை ஒட்டிக்கோங்க.



இப்படியே மாத்தி மாத்தி உங்களுக்கு தேவையான உயரம் வரை ஒட்டிக்கிட்டே வாங்க. அழகான ஃப்ளவர் வாஸ் ரெடி. 

அப்புவோடு ஃப்ளவர் வாஸ் ரெடி பண்ணுனவர் இவர்தான். பேரு கௌதம். எதிர்வீட்டு குட்டி.  செம வாலு. இன்னிக்கு, இவருக்கு முதல் பிறந்த நாள். வாழ்த்துங்கள், நல்லவனா வளரட்டும்.


மீண்டும் சந்திப்போம்.

12 comments:

  1. குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

    அப்புவோட ப்ளவர்வாஸ் நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. பளவர் வாஸ் என்றதும் என்னடா பூவை எப்படி க்ளின் பண்றது என்று ஒரு மொக்கை பதிவு போட்டு இருக்காங்களே என்று நினைத்து படிக்க வந்தால் ஒரு நல்ல பதிவு அல்லவா இங்கு வெளி வநு இருக்கிறது. பாராட்டுக்கள் thama 3

    ReplyDelete
    Replies
    1. எப்ப பாரு வாஷ், கூட்டுறது, சமைக்குறதுன்ற நினைப்புலயே இருங்க. நல்ல குடும்பஸ்தனுக்கு அதான் அழகு!

      Delete
  3. அப்புவிற்கும் கௌதம் செல்லத்திற்கும் வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  4. கெளதம் பாப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...
    அப்புவின் ஃப்ளவர் வாஸ் அழகாக இருக்கிறது... பாராட்டுகள்.

    ReplyDelete
  5. pappa rompa alaga irukagaa . wish youhappy birthday my dear chella kutty ,

    ReplyDelete
  6. Avargal Unmaigal1/02/2014 11:20 am
    பளவர் வாஸ் என்றதும் என்னடா பூவை எப்படி க்ளின் பண்றது என்று ஒரு மொக்கை பதிவு போட்டு இருக்காங்களே என்று நினைத்து படிக்க வந்தால் ஒரு நல்ல பதிவு அல்லவா இங்கு வெளி வநு இருக்கிறது. பாராட்டுக்கள் thama 3


    பூவை எப்படி க்ளின் பண்றது என்று ஒரு மொக்கை பதிவு போட்டு இருக்காங்களே ( next pathivuku neegaley avangaluku headline ready pani koduthutengaley ) :)))))))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய பாராட்டில் அதை அவங்க கவனிச்சு இருக்கமாட்டாங்க.. ஆனால் அதை நீங்க அடுத்த பதிவிற்கு தலைப்பு என்று நீங்கள் எடுத்து கொடுத்தால் வரும் மொக்கை பதிவிற்கு காரணம் நீங்கள்தான் நீங்கள்தான் என்று இந்த மதுரை நாட்டாமை தீர்ப்பை வழங்குகிறது

      Delete
    2. பாராட்டுக்கு மயங்கும் ஆள் நானில்லை சகோ! நான் மொக்கைப் பதிவு போட்டால அதை விட படு மொக்கையான பதிவை போட்டு கொல்லதான் நீங்க இருக்கீங்களே!

      Delete
  7. குழந்தைக்கு வாழ்த்துக்கள்...
    ப்ளவர் வாஸ் அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் சகோதரியாரே
    த.ம.7

    ReplyDelete
  9. அப்புவுக்கும் குட்டிப் பாப்பாவுக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete