Monday, January 20, 2014

போலியோ இல்லாத நாடு இந்தியா - ஐஞ்சுவை அவியல்

வாங்க மாமா! டூர் போனீங்களே! இடமெல்லாம் நல்லா சுத்திப் பார்த்தீங்களா!?  

நான் சுத்திப் பார்த்த கதைலாம் இருக்கட்டும். இந்தியா முழுக்க அஞ்சு வயசுக்குட்பட்ட பிள்ளைகளுக்குலாம் நேத்து போலியோ சொட்டு மருந்து விட்டாங்களே! நம்ம சின்ன மண்டையனுக்கு விட்டியா!?

இல்ல மாமா! போன வருசம்தான் விட்டமே! இந்த வருசம் ஏன்!? அதெல்லாம் என் பிள்ளைக்கு வராது. நான் முண்டக்கண்ணி அம்மனுக்கு வேண்டிக்கிட்டு தாயத்து கட்டி இருக்கேன்.

ம்க்கும். கடவுள் பக்தி இருக்க வேண்டியதுதான். அதுக்காக அதை எதுல காட்டுறதுன்னு விவஸ்தை வேணாம். முன்னலாம், வருசத்துக்கு 1 லட்சம் குழந்தைங்க வரை போலியோ நோயால் பாதிக்கப்பட்டு வந்தாங்க. அதனால, 1000கோடி ரூபாய் செலவுல சொட்டு மருந்து முகாம்,  விழிப்புணர்வு கூட்டம்ன்னு நடத்தி அதுல வெற்றியும் பெற்றிருக்கு. கடந்த மூணு வருசமா புதுசா யாருக்கும் போலீயோ தாக்காததால போலீயோவே இல்லாத நாடா இந்தியாவை அறிவிக்கப்போது யூனிசெஃப்ன்ற உலக சுகாதார அமைப்பு.

இப்படி அறிவிச்சாலும், பக்கத்து நாடான பாகிஸ்தான், இந்தோனேசியா மூலமா போலீயோ பரவ வாய்ப்பு இருக்கு. ஜாக்கிரதையா இருங்கன்னு சொல்லி இருக்காங்க. அதனால, நம்மாலான ஒத்துழைப்பை கொடுக்க வேணாமா!? ஊர்க்கதை, உலகக் கதைலாம் பேசுற ராஜி இதை உனக்கு சொல்லலியா!? அவ அப்பா சுகாதார துறைலதானே இருந்து ரிட்டையர்டு ஆனார்!?

அவளை ஏன் இதுக்குள்ள இழுக்குறீங்க!? அவ போன் பண்ணி சொன்னா மாமா. நாந்தான் குழந்தைக்கு சளிப் பிடிச்சிருக்கேன்னு விட்டுட்டேன். அவ அப்பா ரிட்டையர்டு ஆனாலும் இப்பவும் போலீயோ சொட்டு மருந்து முகாம்ல கலந்துக்குறார்.

இந்த சொட்டு மருந்தை எந்த நோய் தாக்கி இருந்தாலும் ஏன் ஆப்ரேஷனே பண்ணி இருந்தாலும் கொடுக்கலாம் புள்ள. சிக்கன், கீரை, பால், ஜூஸ், கூழ்ன்னு எது சாப்பிட்டாலும் கொடுக்கலாம் தப்பில்லே! 

சரிங்க மாமா! தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சிடுங்க மாமா! சரி, சரி அறியாம தப்பு பண்ணிட்டே! இனி இதுப்போல இருக்காத. கவனமா இரு. நம்ம ஊருல காணும் பொங்கலுக்கு எல்லோரும் கோவிலுக்கு போறது வழக்கம். அப்படி போகும்போது அஞ்சு ஆம்பிள்ளை பசங்க ஒரே வண்டில போய் இருக்காங்க. அப்படி போகும் போது வண்டி கட்டுப்பாட்டை இழந்து ரோட்டுல நடந்துக்கிட்டு இருந்த பாட்டி மேல மோதி பாட்டிக்கு இடுப்பெலும்பு உடைஞ்சுப் போச்சு, ரெண்டு பையன் ஸ்பாட்லயே அவுட். மத்த பசங்கலாம் இப்ப ஆஸ்பத்திரில. தேவையா இதெல்லாம்!? கொண்டாட்டம் தேவைதான் அதுக்காக ஒரே வண்டில இத்தனைப் பேரா!? ஓவர் ஸ்பீடுல போலாமா!? கேட்டால் வளர்ற பசங்கன்னு சொல்லுவாங்க.

அதுக்காக இதெல்லாம் ஓவருங்க மாமா. பொங்கல் பண்டிகைக்காக ராஜி தன்னோட மாமியார் வீட்டுக்கு போயிருக்கா. அங்க ராஜியோட பசஞக், அவ மச்சினன் பிள்ளைக்க, மூத்தார் பிள்ளைங்கலாம் உக்காந்து கரும்பு சாப்பிட்டுக்கிட்டு இருந்திருக்கு. ராஜி மாவு கோலம் போட்டுக்கிட்டு இருந்திருக்கா. தூயா தன் சித்தப்பா பையனை வம்புக்கிழுக்க, டேய் ஜெய்! நீ எத்தனையாவது டா படிக்குறே?ன்னு கேட்டிருக்கா. அதுக்கு, அந்த பையன்  ஃபர்ஸ்ட் ஸ்டேண்டர்ட் ”பி”ன்னு சொல்லி இருக்கான்.

அதுக்கு ராஜி, டேய் ஜெய்! ஃபர்ஸ்ட் ஸ்டானட்ர்டு டி அதாவது தூயாவை டீ போட்டு சொல்லுன்னு சொல்லிக் கொடுத்திருக்கா. அதுக்கு அவன்,  இல்ல பெரியம்மா நான் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு “பி”தான்னு சொல்லி ராஜி மூக்கை உடைச்சிருக்கான்.

ஹா! ஹா! ராஜி தன் பசங்கக்கிட்டதான் பல்ப் வாங்குறன்னு பார்த்தா எல்லா இடத்துலயுமா!?ஒரு கடி ஜோக் சொல்லவா மாமா!

நீ பேசுறதே அப்படிதான் இருக்கும். தனியா ஜோக் வேற சொல்லப் போறியா!?
எங்க சொல்லுப் பார்க்கலாம்.

"என்னதான் அதி நவீன பிரஸ் நடத்துபவரா இருந்தாலும், அவரால 'அச்சு' வெல்லம் போட்டுதான் பொங்கல் செய்ய முடியும். 'ஆப்செட்' வெல்லாம் போட்டு செய்ய முடியாது!"


நீ ஜோக் சொல்லிட்டே! நான் விடுகதை கேக்குறேன். பதில் சொல்லு பார்க்கலாம்!!

ஏறு ஏறு சங்கிலி இறங்கு இறங்கு சங்கிலி எட்டாத கொப்பு எல்லாம் தொட்டுவா சங்கிலி அது என்ன?  

நான் யோசிச்சு சொல்றேன். அதுக்கு முன்னாடி நம்ம சின்ன மண்டையனுக்கு  சொட்டு மருந்து விட்டுக்கிட்டு வரலாம் வாங்க மாமா!

13 comments:

 1. தப்பு பண்ணா பக்குவமா சொல்றதுக்கும், அக்கறையா விசாரிக்கிறத்துக்கும், புத்தி சொல்றதுக்கும் கூடி குலாவி கும்மாளம் போடவும் மனிதர்கள் நம்மூரில் தான் இருக்காங்க. என்ன தான் வெளிநாட்டில் ஆயிரம் வசதிகள் இருந்தாலும் நம்மைச் சுற்றி எதோ ஒரு சூனியம் படர்ந்தே இருக்கு. இந்தியாவை முன்னேற்ற அரசும் விஞ்ஞானிகளும் சமூக ஆர்வலர்களும் கடுமையா உழைக்கிறாங்க நாம் தான் இன்னமும் சுயநலமாய் பங்கெடுக்காமல் கிடக்கின்றோம். போலியோ இல்லாத இந்தியா என்ற நிலை எட்டியது எவ்வளவு பெரிய சாதனை. விரைவில் வறுமை, கற்பழிப்பு, ஊழல்,நீர் பற்றாக்குறை, மின்சார தட்டுபாடு, இயற்கை சீரழிவு, மூடநம்பிக்கைகள் இல்லாத இந்தியா என்ற நிலையையும் எட்ட உழைக்க வேண்டும்.

  ReplyDelete
 2. நம்முடைய ஒத்துழைப்பு இருந்தால் தான் போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும்.
  ராஜி அக்கான்னா பல்பு தான்.
  சாலை பாதுகாப்பு பற்றி மற்றவர்கள் கூறுவதை விட பெற்றவர்கள் சொல்வது இன்னும் பலன் அளிக்கும்

  ReplyDelete
  Replies
  1. பெத்தவங்க சொன்னா மட்டும் கேக்குதுங்களா!? என் பையனுக்கு 14வயசுதான் ஆகுது. ஆனா, ஹீரோ ஹோண்டா, ஸ்பெளெண்டர் வண்டிலாம் ஓட்டனும்ன்னு ஆசை. நான் வேணாம்ன்னு சொல்லுவேன். எனக்கு தெரியாம அவன் அப்பாக்கிட்ட சொல்லி வண்டியை கொண்டுப் போவான். அவன் வரும்வரை எனக்கு திக் திக்னு இருக்கும்.

   Delete
 3. பக்கத்து நாடுகள் ஆரம்பித்து விட்டார்களா...? எதையும் சமாளிப்போம்... தடுப்போம்...

  விடுகதை ஏணியா...? அணிலா...? சந்தேகமா இருக்கு சகோதரி...!

  ReplyDelete
  Replies
  1. ஏணிதான் சரியான விடை அண்ணா!

   Delete
 4. //நீ பேசுறதே அப்படிதான் இருக்கும். தனியா ஜோக் வேற சொல்லப் போறியா!?//

  ஹிஹிஹி..

  ReplyDelete
  Replies
  1. என் பொழப்பு உனக்கு சிரிப்பா இருக்குதா!?

   Delete
 5. சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லாமையால்தான், இந்தியாவில் நாள்தோறும் அதிக எண்ணிக்கையில் உயிர்களை இழந்து கொண்டிருக்கின்றோம்
  த.ம.6

  ReplyDelete
  Replies
  1. வருத்தப்பட வேண்டிய விசயம் ஐயா!

   Delete
 6. //போலியோ இல்லாத நாடு இந்தியா //
  சரிதான். இனி போலி இல்லாத நாடா மாத்துவோம்.

  ReplyDelete
 7. பதிவு பயன் தரும் ஒன்று!

  ReplyDelete
 8. சிறப்பான அவியல். பாராட்ட்கள்.

  ReplyDelete