Friday, January 10, 2014

மணம்தவிழ்ந்தபுத்தூர் - புண்ணியம் தேடி ஒரு பயனம்

இந்தவாரம்  புண்ணியம் தேடிப் போறப் பயணத்துல நாமப் பார்க்கப் போறது கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்திலுள்ள மணம்தவிழ்ந்தபுத்தூர் அருள்மிகு மீனாக்ஷி உடனுறை சொக்கநாதீஸ்வரர் திருக்கோவில்.
எல்லா சிவன் கோவில்களிலும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முக்கியமான நால்வராகிய திருஞானசம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,சுந்தரர் ,மாணிக்கவாசகர் இவர்களுடைய திருவுருவச் சிலைகள் கட்டாயம் இருக்கும்இதைக் குறிப்பிடும் வகையில் பாலை, வேலை, ஓலை, காலை என்று குறிப்பிடும் நான்கு புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. 


 திருஞானசம்பந்தர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தன் தந்தையாருடன் கோயிலுக்குச் சென்ற போதுஉமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சிக் கொடுத்து ஞானப்பாலூட்டியதாக சொல்லப்படும் நிகழ்வு ”பாலை என்றும்,  திருநாவுக்கரசர் கையில் வைத்திருந்த வேல் போன்ற கருவியை குறிப்பிடும் ”வேலை என்றும்மாணிக்கவாசகர் வாதவூரார் பொன்னோரு திருப்பெருந்துறையில் (அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவில்) சிவப்பெருமானே குருவடிவு எடுத்து சிவஞானத்தை அவருக்கு போதித்து, திருவடி தீட்சையும் கொடுத்தார்அது  ”காலை” எனவும்,  சுந்தரர் மணமுடிக்கும் போது அவரை தடுத்து அடிமை சாசன ஓலையை கொடுத்து அழைத்துச் செல்லும் ஸ்தலம் ”ஓலை” எனவும் நாட்டு வழக்கில் இருந்ததாக சொல்வர்அதில் நாம இன்னைக்கு பார்க்கபோறது ஓலை சம்பந்தபட்ட (மணம்தவிர்த்த புத்தூர்) மணம்தவிழ்ந்தபுத்தூர்
இது ஆலயத்தின் முகப்பு.  முதலில் இந்த ஊர் ”புத்தூர்” என்று மட்டும்  முன் காலத்தில் அழைக்கப்பட்டது. சுந்தரருடைய திருமணத்தைத் தடுத்து அவரை ஆட்கொண்டதால் மணம் தவிர்த்த புத்தூர் என்றும், பின்னர் அது மருவி மணம் தவிழ்ந்த புத்தூர் என வழங்கபடுகிறது. எல்லா சிவன் கோவில்களும் பெரும்பாலும் கிழக்கு பார்த்த அமைப்பில் தான் ஆவுடையார் வீற்று இருப்பார்.  குறிப்பிட்ட  சில சன்னதிகளில் மட்டும் மேற்கு பார்த்த அமைப்பிலும் ஆவுடையார் காணப்படுகிறார். அதில் சில திருத்துறையூர். சித்தவடம், திருவான்மியூர்,  மணம்தவிழ்ந்தபுத்தூர் போன்றவை அவற்றில் முக்கியமான ஸ்தலங்கள். இக்கோவிலின் மூலவர் சொக்கநாதீஸ்வரர் தாயார் மீனாக்ஷி அம்பாள்.
இது ஆலயத்தின் உள்பக்கம். இங்க ஆவுடையார் சன்னதிக்கு மேலே சுதந்தரரை மணம் தடுத்த கோலம் சிலை வடிவில் அமைக்கப்பட்டிருக்கு.  ஆவுடையாருக்கு முன்புறம் நந்தியும், நந்தியின் பின்புறம் பலிபீடமும் இருக்கு. முக்கியமாக அகஸ்தியர் வழிபட்ட ஸ்தலமாகும் இது. இந்த திருக்கோவிலின் பெருமைகளை இப்பப் பார்க்கலாம்.

சடைய நாயனார், இசைஞானியார் தம்பதிக்கு திருநாவலூரில், கி.பி. 807ஆம் ஆண்டு, ஆவணி உத்திர நன்னாளில் பிறந்தவராவார்  சுந்தரர். இவருக்கு தந்தையிட்டபெயர் நம்பி ஆரூரன் நடுநாட்டு மன்னரான நரசிங்க முனையரையர் சுந்தரரின் சிறுவயது அழகை பார்த்து அவர்களுடைய பெற்றோர்களின் அனுமதியுடன் தத்தெடுத்து, தானே வளர்த்து வந்தார்கள்.

திருக்கோவிலின் உள்ளே நுழைந்த உடன் இருபது ”வரசித்தி விநாயகர் சன்னதி”. இனி சுந்தரருடைய வரலாற்றை பாப்போம்சுந்தரரின்  பதினாறாவது வயதில், அவருக்குத் திருமணம் நடத்திட நினைத்தார் மன்னர். இதற்கு சடையனார்  இசைஞானியார் அனுமதி பெற்று மணப்பெண் தேடினார். இறுதியில் இன்றைய பண்ருட்டியை அடுத்த புத்தூரில் வாழ்ந்திருந்த ”சடங்கவி” என்ற சிவாச்சார்யாரின் மகளான கமலஞானப் பூங்கோதையினைத் தேர்வு செய்து நிச்சயம் செய்தார்.

திருமணத்தேதி குறிக்கப்பட்டது! புத்தூர் விழாக்கோலம் பூண்டது.   திருக்கோவில் இருக்கிற இந்த வீதியில் தான் திருமண வாத்தியங்கள் முழங்க சுந்தரர் தேரில் ஆள், அம்பு, குதிரை, யானை பரிவாரங்களுடன் திருமணக் கோலத்தில் வந்தார்,

இது ஆலயத்தின் இடப்பக்கம் இருக்கும் சுப்பிரமணியர் சன்னதிஇவர் வள்ளி தெய்வயானையுடன் காட்சி தருகிறார். இனி சுந்தருடைய கதைக்கு வருவோம்.

திருமணச்சாலையிலே திருமணச் சடங்குகள் நிறைவேறிக் கொண்டிருந்தது. அந்த  வேளையில் உரத்தக் குரலில் ஒரு முதியவர் சுந்தரா! நிறுத்து உன் திருமணத்தை?!'' என்றுமுழங்கியவாறு மணவறையை நெருங்கினார்! அனைவரும் திகைத்துப் போய்த் திரும்பினர். அந்த முதியவர், கையில் ஏட்டுச் சுவடியொன்றுடன் வந்தார். சுந்தரரை பார்த்து, "அப்பனே! நீ எனது அடிமை! உன் தகப்பன், பாட்டன் எல்லோரும் எனக்கு அடிமை! என் அனுமதியின்றி நீ மணம் முடிக்க முயன்றது குற்றமாகும்!'' என்றார் ஆக்ரோஷமாக...

திருமணக் கோலத்தில் இருந்த  சுந்தரர், நீர் என்ன பித்தனா? நான் அடிமை என்பதற்கு அத்தாட்சி என்ன? என்று கேட்க, இதோ உன் பாட்டன் எனக்கு எழுதிக் கொடுத்த அடிமை ஓலை எனக்கூறி ஓர் ஓலையை நீட்டினார் முதியவர். அதைப் படித்துக்கூடப் பார்க்காமல் கிழித்து, அக்கினியில் இட்டுப் பொசுக்கினார் நம்பியாரூரர்!
வாங்க ஒரே இடத்தில நின்னு கும்பிடாம கோவிலை சுத்தி வலம் வரலாம்.  இங்க இருக்கிற நவக்கிரக சன்னதியில் சனிபகவானுக்கு மட்டும் தனியாக சிலை வைத்து முதன்மைப்படுத்தி இருக்கின்றனர் அதுக்கான காரணம் என்னன்னு தெரியலை.  சரி, இனி திருமணத்தில் என்ன நடந்ததுன்னு பாப்போம்.


முதியவருக்கும்,சுந்தரருக்கும் வழக்கு மூண்டது. ஓலையை சுந்தரர் கிழித்து தீயில் இட்டதினால் கோபமுற்ற முதியவர் இங்கே எனக்கு நீதி கிடைக்காது. எனது ஊரான திருவெண்ணெய் நல்லூருக்கு செல்வோம் வா!  அங்கு வழக்காடு மன்றத்தில் மறையோர்கள் முன்னிலையில் உண்மையை நிரூபிக்கிறேன்'' என்று கூறினார். சுந்தரரோ, ""அப்படியோர் வழக்கு இருக்குமெனில் அதை முடித்தப் பின்னரே மணம் முடிப்பேன்'' எனச் சபதம் இட்டு முதியவருடன் சென்றார். 

இந்த திருவீதியில் ஒரு விநாயகர் சன்னதி இருக்கு வழக்கமா எல்லா கோவில்களிலும் கிழக்கு பார்த்த அமைப்பில் விநாயகர் இருப்பார். ஆனா, இங்க  சிவன் தடுத்தாண்டு சுந்தரரைக் கூட்டிச் செல்வதைப் பார்த்தவாறே இருப்பதுப் போல விநாயகர் தெற்கு பார்த்த அமைப்பில் இருக்கிறார்.
இங்க ஒரு திருக்குளம் இருந்ததாகவும் அதில்தான் மணம் முறிந்த உடன் வெறும் கையுடன் சென்ற சுந்தரர் வந்த தேர், குதிரை எல்லாம் சென்று மறைந்ததாகவும் சொல்லபடுகிறது.  பிறகு இந்த வழக்கு திருவெண்ணெய் நல்லூரில் நடந்ததுஅதை வேறொரு  பதிவில் பாப்போம். இதைதான்  ”தீராத வழக்குக்கு திருவெண்ணெய் நல்லூர் தீர்ப்பு'' என்று சொல்லும் பழஞ்சொல் ஒன்று உண்டானதுப் போல!!
இங்க, காலபைரவரும், சூரியனும் ஒரே நேர்க்கோட்டில் வீற்றிருந்து அருள் பாலிப்பது கூடுதல் சிறப்பு.
அதனை அடுத்து சந்திரனும் ஒரே வரிசையில் தனியாக வீ ற்றிருக்கிறார்.

லிங்கோத்பவர், பிரம்மாதுர்க்கை மூலவர் சன்னதியின் வெளிப்புறத்தில் அருள் பாலிக்கிறார். இனி,தாயார் சன்னதியினை பார்க்கலாம்.
அம்மன் சன்னதியின் முன்பு அவரது வாகனமான சிம்மமும்அதன் பின்னே பலிப்பீடமும் அமைந்திருக்கு. சுந்தரருடன் மணம் முறிந்த நிலையில்  கமலஞானப் பூங்கோதை வழக்கு நடந்த இடத்திற்கு சென்று இறைவனிடம் முறையிடுகிறார். இப்படி என்னுடைய திருமணம் ஆகிவிட்டதே! நான் என்ன செய்வது!? எனக் கேட்கும்போது ஈசன் அவருக்கு காட்சியளித்து கமலஞானப் பூங்கோதையை அவர் பிறந்த ஊரான இங்கு வந்து தவம் இயற்றி என் திருவடியை வந்து சேர் எனக் கூறினார்.


அந்த அம்மையாரும் திரும்பி இந்த ஸ்தலத்திற்கு வந்து இறைவனுடைய திருவடியை அடைந்தார். பின்னர் சிவப்பெருமான் அருளால் கயிலையைச் சேர்ந்த கமலினியும், அநிந்தையும் பூவுலகில் பரவை நாச்சியாராகவும், சங்கிலி நாச்சியாராகவும் அவதரித்திருந்தனர். சிவனருளால் அவர்களை திருமணம் செய்து கொண்டாராம் சுந்தரர்.
இது ஒரு திருமணத்தடை பரிகார ஸ்தலமாகும். திருமணத்தில் ஏற்படும் தடைகள் நீங்கவும், திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவும் இக்கோவிலில் சோமவாரத்தில் பரிகார பூஜைகள் செய்யபடுகிறது. இந்த திருக்கோவில் ஸ்தல விருஷ்ட்சம் சரியா தெரியவில்லை. ஆனா பூவரசு மரம் இக்கோவிலில் காணப்படுது. இத்திருக்கோவிலைப் பற்றிக் கூடுதல் தகவல்கள் வேண்டுமெனில் ஊர் பெரியவரான  குமார்( 97519 88901) என்பவரைத் தொடர்புக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

இந்த  திருக்கோவிலுக்கு பண்ருட்டிலிருந்து  நேரடி பஸ் வசதி இருக்கு . பண்ருட்டிலிருந்து அரசூர் செல்லும் வழியில் மணம்தவிழ்ந்தபுத்தூர் என்னும் பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும்.  இல்ல விழுப்புரத்தில் இருந்து வரும்போது அரசூர் வந்து  பண்ருட்டி வரும் வழியில் மணம்தவிழ்ந்தபுத்தூர் பஸ் ஸ்டாப்ல் இறங்க வேண்டும்.

அடுத்த வாரம் வேற ஒரு கோவிலுக்குச் சென்று புண்ணியம் சேர்த்துக்கலாம்.

20 comments:

  1. உண்மையிலும் என் தங்கச்சி சாமியாரா போயிட்டாளா ....!!!!!
    சேத்து வைத்த புண்ணியத்தில கொஞ்சம் இந்த அக்காவுக்கும் குடும்மா ?....நான் ஒரு பாடலைப் பகிர்ந்துள்ளேன் அதற்கு முறைப்படி மொய் வைத்து வாழ்த்தொன்று சொல்லி விடு தாயே :))))))))))))))))) அருமையான இப் பகிர்வுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ராஜி ...

    ReplyDelete
    Replies
    1. பயப்படாதீங்க. நான் சாமியாராலாம் போகலைக்கா.அப்பப்போ டூர் போன போது எடுத்த ஃபோட்டோக்களைதான் இப்ப பதிவா போட்டிருக்கேன்.

      Delete
  2. Nice Article.... If your are from cuddalore district .... There is a very old and less known sivan temple at perperiyankuppam village near neyveli.From panruti every half hour there is bus service to muthanikuppam. From muthandikuppam the temple is hardly half KM to reach.

    ReplyDelete
    Replies
    1. இல்லீங்க நான் திருவண்ணாமலை மாவட்டம் .

      Delete

  3. வணக்கம்
    தங்களின் பதிவை படித்த போது.. 13ம் தரத்தில் இந்து நாகரீகம் பாடம் படித்தால் போல் உள்ளது...அப்படி சிறப்பாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துகளுக்குன் நன்றி ரூபன்

      Delete
  4. சுந்தரர் 63 நாயன்மார்களில் சிறந்த 4 வரில் ஒருவர் அவர் மணம் முறித்தபோது கடவுளை பார்த்து பித்தா என்று அழைத்ததாக சொல்வார்கள் அதையே பாடலாக இறைவன் பாட சொல்வார் இதெல்லாம் சினிமாவில் பார்த்து இருக்கிறேன் கதைகளில் படித்து இருக்கிறேன் அது சம்பந்தமான ஒரு கோவில் உண்மையில் ஆச்சரியம் நன்றி பகிர்விற்கு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அமிர்தா

      Delete
  5. அருமையான ஆலயத்தை அழகாக அறிமுகம் செய்தமைக்கு நன்றி! நல்லதொரு பகிர்வு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  6. "//பாலை, வேலை, ஓலை, காலை என்று குறிப்பிடும் நான்கு புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன.//" - புதிய தகவல்.
    மிக அழகாக கோவிலை எங்களுக்கு சுற்றிக்காட்டியதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கோவிலை சுத்திப் பார்த்துட்டு நன்றி சொல்லிட்டுப் போனா எப்படி!? கைடுக்குண்டான கூலி எங்க பிரதர்!?

      Delete
  7. மணம்தவிழ்ந்தபுத்தூர் சொக்கநாதீஸ்வரர் கோயிலைப் பற்றி இப்போது அறிகிறேன் சகோதரி... நன்றி... சிறப்பான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா!

      Delete
  8. உங்கள் உழைப்பிற்கு தமிழ்மணம் +1
    வாழ்கையை நான் எளிதாக எடுத்துக் கொள்வதால் எல்லாவற்ரையும் ஜாலியாக அணுகுவேன்! அது மற்றவர்களுக்கு சங்கடம் கொடுப்பதால்...வோட்டுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

    என் கை ஏதாவது எழுதப்போக...வேண்டாம் வோட்டுடன் நிறுத்திக்கொள்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ஏன் இப்படி? சச்சரவில்லாத ஆரோக்கியமான விவாதம் நல்லதுதானே!!

      Delete
  9. மணம் தவிர்த்த புத்தூர் > மணம்தவிழ்ந்த புத்தூர் ஆன விவரத்தினையும், சுந்தரர் கதையினையும் விவரமாகச் சொன்னீர்கள். மணம்தவிர்த்தல் என்பதனை அமங்கலமாக நினைத்து அவ்வூர் மக்கள் மணம்தவிழ்ந்த என்று ஆக்கி இருப்பார்கள். படங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கூற்றுப்படியும் இருக்கலாம் ஐயா!

      Delete
  10. படங்களுடன் பகிர்வு அருமை சகோதரி...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. எங்கள் ஊர் பக்கத்திலேயே இருக்கு ஆனா பார்த்ததில்லை. தகவலுக்கு நன்றி ராஜி.

    ReplyDelete