இப்பப் பரவலா சுவாமி
விவேகானந்தரின் 150 வது ஜெயந்தி
தேசமெங்கும் கொண்டாடப்படுது. அதை சிறப்பிக்கும் விதமா இந்த வாரம் மௌன சாட்சிகள்ல நாம பார்க்கப் போறது சென்னைல இருக்குற சுவாமி விவேகானந்தர் இல்லம்.
இந்த போட்டோ 1842 ல
எடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆல்பம் லைப்ரரில இருந்து எடுக்கப்பட்டது. இது சென்னை
மெரினா பீச் கரையோரம் அமைஞ்சு இருக்கு. இது முதலில் ஐஸ் ஹவுஸ் அல்லது கேமன்
கோட்டைன்னு அழைக்கப்பட்டிருந்திருக்கு. இது எப்படி விவேகானந்தர் இல்லமாக
மாறியதுன்னு தான் இன்னைக்கு நாம மௌன சாட்சிகளில பார்க்கபோறோம்.
ஐஸ்கிங் பிரடரிக் டியூடர் என்பவரால் 1842 ல் கடற்கரையை பார்த்துக்கிட்டு இருக்கிறமாதிரி தன்னுடைய வியாபாரத்துக்கு ஏத்த மாதிரி ஒரு கோட்டையை
கட்டினார். இதில் பிரிட்டிஷ்காரர்கள் வட
அமெரிக்காவின் பெரிய ஏரிகளில் இருந்து கொண்டுவரும் ஐஸ் கட்டிகளை
பராமரிக்கும் பணியை 30 வருடங்களாக பயன்படுத்தி வந்திருக்காங்க. பின்னர் 1880 ல் அந்த வியாபாரத்தில் கடுமையான நஷ்டம் வரவே
அப்ப, உயர்நீதி மன்றத்தில் வக்கீலாக பணியாற்றிய பிளின்கிரி ஐயங்கார் என்பரால்
வாங்கப்பட்டு புதுபிக்கபட்டது. பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியா பணியாற்றி
வந்த அவரது நண்பர் கேமன் என்பவர் தங்கி இருந்தார். அதனாலதான் அதுக்கு கேமன்
கோட்டைன்னு பேர் வந்துச்சு.
இந்த படம் 1897
ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர்(நடுவில் இருப்பவர் ) சென்னையில் தங்கி
இருந்தபோது எடுக்கப்பட்டது. 1897 ம் ஆண்டு விவேகானந்தர் தன்னுடைய வெளிநாட்டு
பயணங்களை முடிச்சுட்டு சென்னை வரும்போது
இந்த ஐஸ் ஹவுஸ் ல் 6 பிப்ரவரி
1897 முதல் 14 பிப்ரவரி 1897 வரை தங்கி இருந்தாராம். அவருடைய முக்கியமான
பக்தர்களில் ஐயங்காரும் ஒருவர். அவரின்
வேண்டுகோளை ஏற்று தங்கிருந்த இந்த 9 நாட்களில் அவர் சென்னையில் பல்வேறு இடங்களில் தன்னுடைய தீவிரமான
பேச்சாற்றலால் தேசிய ஒருமைப்பாட்டை பரப்பினார்.
அவர் இங்கிருந்து புறப்படும் போது
தன்னுடைய சீடர்களின் வேண்டுகோளுக்கினங்க இந்த இடத்தில ஒரு நிரந்தர மையம் ஏற்படுத்துவதை ஒப்புக்கொண்டார். அதன் பின்னர் ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் சுவாமி ராமக்கிருஷ்ணானந்தா
என்பவர் விவேகானந்தரின் சீடர் மற்றும் சகோதரர் என அழைக்கபடுபவரால் 10 ஆண்டுகள் (1897-1906) இங்க இருந்து சேவைகள் செய்தார் பின்னர் இந்த இயக்கம்
இபொழுது இருக்கிற மயிலாப்பூர் இடத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் இந்த இடம் ஒரு
ஜமிந்தாரிடம் அடமானம் வைக்கப்பட்டது.
பின்னர் 1914 ம் ஆண்டு மதராஸ் அரசு ஐஸ் ஹவுஸ்சை கைப்பற்றியது . அதில் சகோதரி சுப்புலக்ஷ்மி என்பவரால் சமுகநல திட்டத்தின்
கீழ் குழந்தை, விதவைகள் மற்றும் இளம் விதவைகளுக்காக அந்த சமயத்தில் தங்குமிடமாகவும், தொழிற்கல்விக் கூடமாகவும் நடத்தினார். பின்னர் 1963 ல் தமிழ்நாடு அரசு விவேகானந்தரின் நூறாவது ஆண்டு
பிறந்தநாளில் இந்த கேமன் கோட்டையை விவேகானந்தர் இல்லம்ன்னு பேர் மாற்றப்பட்டது. 1997
ம் ஆண்டு ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் அவர் இங்க தங்கிருந்த நூற்றாண்டு விழாவும், இந்தியா திரும்பிய நாளும் சிறப்பாக கொண்டாபட்டதாம். பின்னர் தமிழ்நாடு
அரசு இதை 2020 வரை செல்லுபடியாகதக்க
ராமக்கிருஷ்ணமடத்திற்கு குத்தகைக்கு விட்டுள்ளனராம்.
இதன் கட்டிடகலை அமைப்பு கோளவடிவில் மூன்றடுக்கு நிலைகொண்டதாக சுவாமி விவேகானந்தரை போல் கம்பீரமாக அமைந்துள்ளது. மேலும் கலை கலாசார பாரம்பரிய இந்திய தேசிய அறக்கட்டளை யின் முக்கிய பாரம்பரிய கட்டிடங்களில் இதுவும் ஒன்றாக இருக்கு. ஒவ்வொரு காலக்கட்டங்களிலும் இதன் வடிவ அமைப்பு வளர்ச்சியடைந்து பல மாறுதல்கள் அடைந்து இந்த வடிவ நிலைக்கு வந்துள்ளது. இதன் வட்டவடிவ மாடிகள், அரைவட்ட வடிவ பாதைகள், கூம்பு போன்ற அமைப்பு கட்டிடங்கள் இதன் கட்டிடக்கலையை காலத்திற்கு ஏற்ப பிரதிபலிக்குது.
மேலும் இந்த வட்டவடிவ நிலைகளில் வேதக்காலங்களில் இருந்து மனிதனின் பரிணாம வளர்ச்சி ஸ்ரீ ராமக்கிருஷ்ணரின் கண்டுபிடிப்புகள் மற்றும் உபதேசங்கள் பிரதிபலிக்கும் விதமா .மெசபடோமியா, எகிப்து, கிரீஸ், ரோம் போன்ற பெரிய கலாச்சாரங்கள் கொண்ட நாகரீங்களின் ஒப்பீடு கொண்ட ஓவியங்கள், வேற்றுமையில் ஒற்றுமையை கொண்ட இந்தைய கொள்கை, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் புது தில்லி இங்குள்ள பிரபலமான ஓவியர்களின் கை வண்ணத்தில் இந்தியக் கலாச்சார பாரம்பரியத்தின் ஓவியங்கள் இங்கு அழகுடன் இருப்பதை காணலாம்.
இந்த வட்டவடிவ நிலைகளில் சுவாமி விவேகனாந்தரின் வழக்கையின் பல்வேறு நிகழ்வுகள், குறிப்புகள் கொண்ட அறிய புகைப்படங்களின் தொகுப்பு லாமினேட் செய்யபட்டு தமிழ் மற்றும் ஆங்கில குறிப்புகளுடன் அவரது அமெரிக்கப் பயணம் மேற்கத்திய நாடுகளின் பயண புகைபடங்களுமா 100 வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட சுமார் 120 படங்களுக்கு மேலாக இங்க காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கு. இவை செயின்ட் லூயிஸ் ஐக்கிய அமெரிக்கா வேதாந்த சங்கத்தினரால் அன்பளிப்பா வழங்கப்பட்டதாம்.
இங்க சுவாமிகள் பிப்ரவரி 1897 ல் தங்கிய அறை இரண்டாவது மாடியில் இருக்கிறது. புனித நினைவுகள் நிறைந்த இந்த அறை, இப்போது ஒரு தியானம் அறையால பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில நிமிடங்கள் இங்க அமர்ந்து தியானம் பண்ணுகிற எவருக்கும் மனம் அமைதியடைவதை புரிந்து கொள்ள முடிகிறது. மேலும், வசதியாக அமர்ந்து தியானம் செய்ய எதுவாக இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது.
சுவர்களிலெல்லாம்
சுவாமிகளின் பல்வேறு தத்துவங்கள், பல்வேறு நிகழ்வுகளில் சொல்லபட்டவைகளுடன், சில
பிரபலங்களின் கையெழுதுக்களில் அலங்கரிக்கின்றன. நூற்றாண்டுகள் கடந்த அவை யாவும் இன்றைய
கால கட்டங்களிலும் பொருந்துவதுதான் அதன் சிறப்பு இங்கே ஒரு புத்தகநிலையமும் இருக்கு. அதில் சுவாமி விவேகானந்தரின் தத்துவங்கள் அவர் சிக்காகோவில் ஆற்றிய உரைகளின்
தொகுப்புகள் போட்டோக்கள் முதலியன விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இப்ப இங்க புனரமைக்கும் பணிகளும், புதிய கட்டிடமும் கட்டும் பணிகளும் நடப்பதால் எல்லா
அறைகளும் பார்வையாளர்களுக்காக திறந்து விடுவதில்லை. பிப்ரவரி மாதம் எல்லா பணிகளும் நிறைவடைந்து புதிய
வடிவமைப்புடன் காட்சியளிக்கபோகிறது. நாமும் அதைக்காண பிப்ரவரி வரை காத்து இருப்போம்.
மீண்டும் அடுத்த வாரம் வேற ஒரு இடத்திலிருந்து மௌனச்சாட்சிகள் பகுதிக்காக சந்திக்கலாம்.
நன்றி! வணக்கம்!
அருமையான தகவல் பதிவு, நன்றிங்க ராஜி!
ReplyDeleteஉங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! :)
வாவ் நிச்சயம் உங்களுடைய பதிவிற்கு நன்றி சொல்லியாகவேண்டும் நிறைய தகவல்கள் தெரிந்து கொள்கிறோம் வாழ்த்துக்கள்
ReplyDeleteபல தகவல்களுக்கு நன்றி சகோதரி...
ReplyDeleteவிவேகானந்தர் இல்லம் பற்றி அன்றும் இன்றும் என்று பல அரிய தகவல்களையும் படங்களையும் தொகுத்து தந்த சகோதரிக்கு நன்றி!
ReplyDeleteஐஸ் ஹவுஸ் என்ற பெயர ஏன் வந்தது; அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகர வியாபரிகள் ஐஸ் இங்கு கொண்டு வந்து சேமித்து விற்றதையும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்!
ReplyDeleteஎன் தமிழா மனம் +1
மேலும் இப்படி எழுதுங்கள்..!
நன்றி!
அதையும் கூறியிருக்கிறேன் பாருங்கள் //
Deleteஐஸ்கிங் பிரடரிக் டியூடர் என்பவரால் 1842 ல் கடற்கரையை பார்த்துக்கிட்டு இருக்கிறமாதிரி தன்னுடைய வியாபாரத்துக்கு ஏத்த மாதிரி ஒரு கோட்டையை கட்டினார். இதில் பிரிட்டிஷ்காரர்கள் வட அமெரிக்காவின் பெரிய ஏரிகளில் இருந்து கொண்டுவரும் ஐஸ் கட்டிகளை பராமரிக்கும் பணியை 30 வருடங்களாக பயன்படுத்தி வந்திருக்காங்க./
ஓரமா நிக்கிறவங்க அவ்வை பாட்டியா?
ReplyDeleteஅது பாட்டி என்று தெரிகிறது? ஆனால், அவ்வை பாட்டியா என்று தெரியவில்லை!
Deleteஆண்டவா! என்னை ஏன் இந்த மாதிரி ஆளுங்க கூடலாம் சேர்த்து வைக்குறே! விவேகானந்தர் இல்லம்ன்னு தலைப்பு போட்டு பல விவரங்களை தேடி கண்டுப் பிடிச்சு பதிவு போட்டா சம்பந்தமே இல்லாம அவ்வைப் பாட்டியை பத்தி பேசுறாங்க! விவேகானந்தர் நினைவு இல்லத்துல அவ்வைப் பாட்டி சிலை ஏன் வைக்குறாங்கன்னு கொஞ்சமாவது யோசிக்கப்படாதா!?
Deleteஅது விவேகனந்தரின் துறவி கோலம் ..
Deleteஅவர் அழகா தலைப்பாகை கட்டி தான் பார்த்திருக்கிறேன். இது புதுசு..
Deleteஇந்த அம்மையார் யாரேன்ன்று தெரியவில்லை அழகான பதிவுகளை இடுகிறார் கமெண்ட் சொல்கிறவர்கள் அதை தெளிவாக படிப்பதில்லை போலும் எல்லோரும் படம் பார்த்து நுனி புல் மேயபவர்கலாகதான் இருக்கிறார்கள் ஒருவர் அமெரிக்காவில் இருந்து ஐஸ் கட்டிகள் வந்ததை இடவில்லை என்கிறார் இதில் அவர் அந்த அமெரிக்க வியாபாரியின் பெயரை கூட பதிவு இட்டுள்ளார் அதன் பிறகு விவேகானந்தர் இந்த இடத்தில தங்கி இருக்கும் போது இருந்த போடோவில் அவர் மொட்டை அடித்த நிலையில் தான் காட்சியளித்துள்ளார் அந்த படத்தை கூட தேடி பிடித்து இட்டுள்ளார் கவனிக்கவும்
Deleteகண்டுகொண்டோம்.
ReplyDeleteநான் சில ஆராய்ச்சி நூல்களில் படித்து இருக்கிறேன் ஜார்ஜ் கோட்டையின் மதில் சுவரை ஒட்டி கடற்கரை இருந்ததாக சொல்லப்பட்டு இருக்கிறது ஆனால் இபொழுது விவேகனந்தர் இல்லம் பிரிட்டிஷ் லைப்ரரி போட்டோ பார்க்கும் பொது கடற்கரை தெரிகிறது காணமுடிகிறது எனினும் 1842 ல் இருந்து பல்வேறு மாற்றங்கள் புவி அமைப்பில் நடந்து இருக்கலாம் ..என தெரிகிறது
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஅருமையான தகவல்களை தந்த பதிவு! படங்களும் பதிவும் சிறப்பு! நன்றி!
ReplyDeleteதடியுடன் நிற்கும் அந்த pose அவ்வைப் பாட்டியின் அடையாளம்!
ReplyDeleteஇவ்வழியே காலை மாலை எத்தனை வருடங்கள் சென்று இருப்பேன்! விவேகாநந்தர் 40 வயது கூட வாழவில்லை; 39 வயதிலே இறந்து விட்டார்; அவர் கையில் எதற்கு தடி!
துறவி என்றால் தடி வைத்துக் கொள்ளணுமா என்ன? நம்ம ஸ்ரீ ஸ்ரீ, மாதா அமிர்த்மாயி, நித்யானந்தா, இவர்கள் எல்லாம் தடி வைத்துக் கொள்ளவில்லையே!
நீங்கள் என்ன அர்த்தத்தில் சொனீர்களோ தெரியவில்லை சாக்கடையுடன் சந்தனத்தை கூட்டு சேர்த்து இருக்கிறதை பார்க்கும் போது மனது வேதனை படுகிறது நித்யானதா சாமியார் இல்லை அவன் வெறும் ஆசாமி ஆனால் விவேகானந்தர் அப்படி இல்லை உண்மையான துறவறத்திற்கு என்ன இலக்கணமோ அதுபடி வாழ்ந்தார் புரய்சி கவி பாரதி கூட சுவாமி விவேகானநதரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு சந்நியாசம் மேற்கொண்ட சிஸ்டர் நிவேதிதாவை சந்தித்து அவருடைய பேச்சு கொள்கை நடத்தை எல்லாம் பார்த்து என் அன்னை நிவேதிதா என்று சோனாராம் ..ஆனல் இப்ப இருக்கிற இந்த ஆசாமி கூட இருக்கிற சிஷ்யைகளை யாராவது அப்படி சொல்கிறார்களா .உங்கள் ஒப்பீடு கூட கொஞ்சம் தரமாக இருக்கட்டும் நண்பரே ..நல்ல பதிவு பாராட்டுக்கள்
Deleteமண்ணிக்கவும்! மாட்டிகொண்ட சன்யாசியை இந்த லிஸ்டில் இருந்து எடுத்து விடுகிறேன். மறுபடியும் மன்னிக்கவேண்டும்!
Deleteசரி! இப்ப மற்ற சன்யாசிகளைப் உங்கள் கருத்து என்ன?
விவேகானந்தர் துறவறம் பூண்ட பிறகு தேசந்திரியாக இந்தியாவெங்கும் அலைந்து திரிந்தார். மக்களின் வாழ்வு முறை மற்றும் அறிவினை தேடிய பயணம் அது. அப்போது இருந்த கோலம்தான் தடியுடன் நிற்பது.
Deleteகன்னியாகுமரி நீந்தியது முதல் வடக்கில் இமயமலையின் ஏறியும் பயணித்தார். 18 நூற்றாண்டில் பெரும்பாலும் நடைபயணமாக சென்ற பயணம் (சிலசமயம் புகைவண்டியில்), துறவியாக பிச்சை எடுத்தபடியே சென்றார். இப்போது தடியின் அவசியம் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்!
{{{Vijayalekshmy said...நான் சில ஆராய்ச்சி நூல்களில் படித்து இருக்கிறேன் ஜார்ஜ் கோட்டையின் மதில் சுவரை ஒட்டி கடற்கரை இருந்ததாக சொல்லப்பட்டு இருக்கிறது ஆனால் இபொழுது விவேகனந்தர் இல்லம் பிரிட்டிஷ் லைப்ரரி போட்டோ பார்க்கும் பொது கடற்கரை தெரிகிறது காணமுடிகிறது எனினும் 1842 ல் இருந்து பல்வேறு மாற்றங்கள் புவி அமைப்பில் நடந்து இருக்கலாம் ..என தெரிகிறது]]
ReplyDeleteஇந்த விடுகதைக்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்!
மேற்சொன்ன அந்த படத்தில் இருப்பவர்களில் ஒருவன் இந்தியன்? அவன் இந்தியன்"தான்" என்று உருதியாக கூற என்ன காரணம்?
முண்டாசும் வேட்டியும்??
Deleteஎனக்கு வரலாற்றை படிக்க மிகவும் பிடிக்கும். அதனால் நான் தமிழகத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வரலாற்றை முக்கியப் பாடமாக எடுத்து படிக்கலாம்னு நினைக்கிறேன்.
ReplyDeleteநீங்கள் தான் எனக்கு ஆசிரியையாக இருந்து உதவி பண்ணனும்.
அதுக்காக பீஸ் எல்லாம் கேட்டுவிடாதீர்கள். எனக்கு சொல்லிக்கொடுக்கும் சாக்கில், நீங்கள் அதனை பதிவாக போடமுடியும். அதனால் அதையே பீஸாக வைத்துக்கொளுங்கள்.
என்ன டீல் ஓகேவா????
ஓக்கே!
Deleteசிறப்பான தகவல்கள்..... தொடரும் மௌன சாட்சிகள் மிக நன்று. பாராட்டுகள்.
ReplyDelete