Monday, January 06, 2014

கவனம் தேவை - ஐஞ்சுவை அவியல்

வாங்க மாமா! மூஞ்சிலாம் கழுவிட்டு வர்றிங்களா?! சாப்பாடு எடுத்து வைக்குறேன். சாப்பிடலாம்.

இரு புள்ள, குளிச்சுட்டு வந்துடுறேன். என் ஃப்ரெண்ட் மதுவோட பையன் இறந்துட்டான். அங்க போய்ட்டு வந்தேன். 
ஐயோ! 4வயசு குழந்தைதானே! ஏன் என்னாச்சு? உடம்பு சரியில்லையா!?  அப்படியும் இருக்காதே! நேத்துக்கூட கடைத்தெருவுக்கு போகும்போது பார்த்தேனே! நல்லாதானே இருந்துச்சு!? 

ம்ம் அப்பதான் ஆக்சிடெண்ட் நடந்திருக்கு. குழந்தையை வண்டில உக்கார வச்சிட்டு, கெதோ வாங்க கடைக்கு போய் இருக்கான். அப்ப வந்த லாரிக்காரன் ஒருத்தன் வண்டில இடிச்சுதால, குழந்தை கீழ விழுந்து, லாரியோட பின்சக்கரம் ஏறி குழந்தை ஸ்பாட் அவுட். 

அச்சச்சோ! கடைக்கு போகும்ப்போது குழந்தையை இறக்கி கூட்டிப் போயிருந்தா நல்லா இருந்திருக்குமே! இப்போ ஒத்தைப் புள்ளையை பறிக்கொடுத்துட்டு நிக்குறாங்களே! கடவுள்தான் அவங்களுக்கு மனசை தேத்தனும் மாமா.

ம்ம்ம். கண்டிப்பா கடவுள்தான் அருள் புரியனும். சில நிமிட சோம்பேறித்தனமும், அலட்சியமும் எவ்வளவு பெரிய பாதிப்பை கொடுக்குதுன்னு பாரு. இன்னும் சிலர், வண்டியை ஆஃப் பண்ணாம குழந்தையை உக்கார வச்சுட்டு, ஃப்ரெண்ட் கூட பேசுவாங்க.  அப்ப, குழந்தை ஆக்சிலேட்டரைத் திருகி வண்டி ஆக்சிடெண்ட் ஆகவும் சான்ஸ் இருக்கு. 

நம்ம சின்ன மண்டையனுக்கு ஸ்கூல்ல பர்த் சர்டிஃபிகேட் கேட்டாங்கன்னு சொன்னானே! வாங்கி வந்துட்டீங்களா!?

போய் கேட்டேன் புள்ள. இன்னிக்கு வரச்சொன்னாங்க. நானும் போனேன். அங்க இருக்குற க்ளர்க் 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிட்டதா அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டுப் போய்ட்டாங்க. இனி எப்ப சர்டிஃபிகேட் கிடைக்கும்ன்னு தெரியல புள்ள. 

ஐநூறு, ஆயிரம், ரெண்டாயிரம் லஞ்சம் வாங்குறவங்களைலாம் மோப்பம் பிடிச்சு, பொறி வச்சு புடிக்க தெரிஞ்ச நம்ம லஞ்ச ஒழிப்பு துறைக்கு லட்சம், கோடின்னு லஞ்சம் வாங்குற ஆளுங்களை மட்டும் கண்டுப்பிடிச்சு, பொறி வச்சு புடிக்காம இருக்காங்களே! எப்படி மாமா!?

அதெல்லாம் பண பலமும், ஆள் பலமும், அதிகார பலமும் இருக்குறவங்கக்கிட்ட சட்டமும் கைக்கட்டிதான் நிக்கும்.  எல்லாமே கெட்ட விசயமாவே பேசிட்டோம். ஆரணி பஸ் ஸ்டேண்ட்ல பிச்சை எடுத்து வந்த பொன்னுசாமின்ற பெரியவருக்கு உடம்பு சரியில்லாம போகவே ஹாஸ்பிட்டல் போய் செக் பண்ணி பார்த்திருக்கார். அவருக்கு கேன்சர் முத்திய நிலைமைல இருந்தது தெரிய வந்திருக்கு. 

இனி உயிர் பிழைக்க முடியாதுன்னு தெரிந்தப் பின் பிச்சை எடுத்து தான் சேர்த்து வச்சிருந்த ஒரு ரெண்டு லட்ச ரூபாயை ஆரணிக்கு பக்கத்துல இருக்குற தேவிகாபுரத்துல இருக்குற கன் தெரியாதவங்க படிக்கும் ஸ்கூலுக்கு தானமா கொடுத்துட்டாராம். மிச்சம் இருக்குற அவரோட வாழ்நாள் முழுக்க அவரைப் பார்த்துக்கும் பொறுப்பை லயன்ஸ் கிளப் ஏத்துக்கிட்டதாம் புள்ள.

நல்ல மனுசனுங்களுக்குதான் எல்லாப் பொல்லாப்பும் வரும். ராஜி திருப்பதிக்கு போய் வந்தா. நம்ம வீட்டுக்கு லட்டு பிரசாதம் தந்திருக்கா. குளிச்சுட்டு வந்தா தரேன்,
தரிசனம்லாம் நல்லப்படியா கிடைச்சுதா!? கூட்ட நெரிசல், குளிர்லாம் எப்படி இருந்துச்சாம்!?  வூட்டுக்காரர், பசங்கக்கிட்ட சண்டைப் போடாம வந்தாளா!?

தரிசனம்லாம் நல்லா கிடைச்சுதாம். கூட்டத்துல இடிப்படாம சாமி பார்த்தாளாம். இப்படி அமைதியா சாமி பார்த்தது அவளுக்கே ஆச்சர்யமா இருக்காம். வூட்டுக்காரர்கிட்ட சண்டைப் போடாம ராஜிக்கு பொழுதே போகாதே! ஆனா, அவ பையன்கிட்ட மட்டும் பல்ப் வாங்கி இருக்கா!

அது எப்பவும் நடக்குறதுதானே! என்னாச்சு!?

திருப்பதி போனது அப்புக்கு மொட்டைப் போட்டு குளிச்சு முடிச்சு கோவில் கேலரில போய் தரிசனத்துக்காக உக்காந்திருக்காங்க. இப்பலாம் திருப்பதி கேலரில உக்காந்திருக்குறவங்களுக்கு சூடான டீயும், சாப்பாடும் தர்றாங்க. இவங்க போய் இருக்கும்போது அப்படி சாப்பாடு கொடுக்கும்போது அப்பு, வாங்க போகப் பார்த்திருக்கான். அதுக்கு ராஜ்யோட வூட்டுக்காரர் கூட்ட நெரிசல்ல போகாதடா. இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சு போ. எல்லோருக்கும் பிரசாதம் கொடுப்பாங்கன்னு சொல்லி அப்புவை உக்கார வச்சிட்டாங்க. கூட்டம்லாம் குறைஞ்சப்பின், ராஜி, தன் பையன்கிட்ட, 

அப்பு, இப்ப சாப்பாடு ஃப்ரீயா தர்றாங்கப் பாரு. போய் வாங்கி வான்னு சொல்லி இருக்கா. அதுக்கு, அவ பையன் அம்மா, சாப்பாடு அப்பவும் ஃப்ரீயாதான் தங்காங்க. கூட்டமில்லாம ஃப்ரீயாதான் இருக்குன்னு சொல்லும்மான்னு சொல்லி ராஜிக்கு பல்ப் கொடுத்திருக்கான்.

ஹா! ஹா! ராஜிக்கு தேவைதான். நான் ஒரு விடுகதை சொல்றென். விடை சொல்லு பார்க்கலாம் 

தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன?

நான் விடையை யோசிச்சு வைக்குறேன். நீங்க போய் குளிச்சுட்டு வாங்க மாமா! 

சரி, சரி யோசிச்சு வை.

20 comments:

  1. வீட்ல இருக்குறவங்களையும் விடுறது இல்லையா அவங்களுக்கும் மொட்டையா?

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கெல்லாம் போடும்போது வீட்டில் இருக்குறவங்களை விட்டுட்டா எப்படி சகோ!?

      Delete
  2. குழந்தைகளை எப்பவும் கவனித்து கொண்டே இருக்கணும், அப்பு superappu.
    விடை. முதுகு

    ReplyDelete
    Replies
    1. விடை சரிதான் சுபா. நீயும் பசங்க கட்சியா!?

      Delete
  3. பொன்னுசாமி தான் மனிதர்...

    தொட்டுப் பார்க்கலாம்... எட்டிப் பார்க்க முடியாதா...? முகம் பார்க்கும் கண்ணாடிகளால் பார்க்கலாமோ...? அப்போ விடை : முதுகு...

    ReplyDelete
    Replies
    1. விடை சரிதான் அண்ணா!

      Delete
  4. பெயர் மட்டுமா 'பொன்'னுசாமி ?அவர் இதயமே 'பொன்'தான்!
    +1

    ReplyDelete
  5. பொன்னுசாமியைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். சில நிமிட சோம்பேறித்தனத்தால், வாழ்கையில் இழக்கக்கூடாததை எல்லாம் இழந்து விடுவோம் என்று அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!

      Delete
  6. //ஐநூறு, ஆயிரம், ரெண்டாயிரம் லஞ்சம் வாங்குறவங்களைலாம் மோப்பம் பிடிச்சு, பொறி வச்சு புடிக்க தெரிஞ்ச நம்ம லஞ்ச ஒழிப்பு துறைக்கு லட்சம், கோடின்னு லஞ்சம் வாங்குற ஆளுங்களை மட்டும் கண்டுப்பிடிச்சு, பொறி வச்சு புடிக்காம இருக்காங்களே! எப்படி மாமா!?//
    நம்பாளுக கணக்குல ரெம்ப வீக்கு...

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    ReplyDelete
    Replies
    1. சரி நல்ல டியூசன் மாஸ்டரா பார்த்த்உ கணக்குச் சொல்லித் தரச் சொல்லலாம்.

      Delete
  7. வணக்கம்
    மிக அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. சில நிமிட சோம்பேறித்தனமும், அலட்சியமும் எவ்வளவு பெரிய பாதிப்பை கொடுக்குதுன்னு பாரு.

    yosika vendiya visayam

    ReplyDelete
  9. ஆரணி பஸ் ஸ்டேண்ட்ல பிச்சை எடுத்து வந்த பொன்னுசாமின்ற பெரியவருக்கு உடம்பு சரியில்லாம போகவே ஹாஸ்பிட்டல் போய் செக் பண்ணி பார்த்திருக்கார். அவருக்கு கேன்சர் முத்திய நிலைமைல இருந்தது தெரிய வந்திருக்கு.

    naraga vethanaiyaai yurudan anupavikkum nooi

    ReplyDelete
  10. இனி உயிர் பிழைக்க முடியாதுன்னு தெரிந்தப் பின் பிச்சை எடுத்து தான் சேர்த்து வச்சிருந்த ஒரு ரெண்டு லட்ச ரூபாயை ஆரணிக்கு பக்கத்துல இருக்குற தேவிகாபுரத்துல இருக்குற கன் தெரியாதவங்க படிக்கும் ஸ்கூலுக்கு தானமா கொடுத்துட்டாராம்.

    ponusamy very grate

    ReplyDelete
  11. பதிவுகளின் விஷயங்கள் எல்லோரும் கவனிக்க வேண்டியவை.... மனதை நெகிழ செய்தது ! நன்றி !

    ReplyDelete
  12. எல்லா பெற்றோர்களும் அவசியம் படிக்கவேண்டிய செய்தி.
    ஒரு குழந்தை இறந்தால், அதை பத்து மாதம் சுமந்த தாயின் மனம் எப்படி இருக்கும்., என்று ஒரு நொடி நினைத்தால் எந்த அப்பனும் இந்த தப்பை வாழ்கையில் செய்யமாட்டான!

    பத்து மாதம் சுமந்த தாய்க்கு தான் அந்த முழு வலி தெரியும்..
    தமிழ்மணம் +1

    ReplyDelete
  13. பயனுள்ள செய்திகள்...

    ReplyDelete
  14. Migavum karfulaga irukavendum guzhanthaigal poo ponravargal namvarisugal

    ReplyDelete