Thursday, January 30, 2014

அலங்கார சிடி - கிராஃப்ட்

பெரியவ தூயாவோடு சின்னதுங்க ரெண்டுமே ஒத்துப் போகும். சின்னதுங்க கோவம், ஆசைக்கேத்த மாதிரி, தூயா பேலன்ஸ் பண்ணி நடந்துப்பா. ஆனா, சின்னதுங்க ரெண்டுத்துக்கும் எப்பவுமே ஆகாது. சின்னவ ஃபேன் போடச் சொன்னா, அப்பு நோட்டுல இருக்கும் பேப்பர்லாம் பறக்குது வேணம்ன்னு சொல்வான். 

அப்பு ஃபேன் போடச் சொல்லும்போது எனக்கு குளிருதுன்னு சின்னவ சொல்லுவா. அவனுக்கு பூரி சாப்பிட ஆசை வந்தா, சின்னவளுக்கு தோசை வேணும். அவனுக்கு வேலூர்ல துணி எடுத்தா சின்னவளுக்கு சென்னைக்குப் போகனும். இப்படியே ரெண்டும் போட்டிப் போட்டிக்கிட்டு சண்டைப் போடும். 

அவங்க சண்டை முடிவுல “நீ சரியாய் இருந்தா எல்லாம் சரியாய் இருக்கும்”ன்னு எனக்குதான் டோஸ் விழும். டியூஷன், ஸ்பெஷல் கிளாஸ்,ஸ்கூல் போய் வரும்போதே இந்த லட்சணம்ன்னா லீவு விட்டா என் கதி!?

அதான் அரைப் பரிட்சை லீவுக்கு கிராஃப்ட் செய்ய தேவையானப் பொருட்களை வாங்கி வந்து கொடுத்திட்டேன். தினம் ஒண்ணு செய்யனும்ன்னுச் சொல்லி..., எப்படி செய்யனும்ன்னும் சொல்லியும் கொடுத்திட்டேன். அப்படி லீவுல பசங்க கிளாஸ் பெயிண்டிங் கொண்டு சிடில செஞ்ச டெகரேஷன் தான் இன்னிக்கு பார்க்கப் போறது....,

தேவையானப் பொருட்கள்:
உதவாத பழைய சிடி
கிளாஸ் பெயிண்ட்
அவுட் லைனர்
சிடி மார்க்கர் பேனா


தேவையானப் பொருட்களை எடுத்து வச்சுக்கோங்க. சிடில தூசு இல்லாம சுத்தமா துடைச்சு வைங்க.

உங்களுக்கு பிடிச்ச டிசைனை சிடில சிடி மார்க்கர் பேனாவால வரைஞ்சுக்கோங்க..., வரையத் தெரியனும்ன்னு அவசியமில்ல. நமக்குத் தெரிஞ்ச கோலத்தைக் கூட போட்டுக்கலாம். இல்லாட்டி ட்ரேஸ் கூட எடுத்த்க்கலாம். அப்படி டிரேஸ் எடுக்கும்போது கருப்பு கார்பன் யூஸ் பண்ணுங்க.

அவுட் லைனர் கொண்டு நாம வரைஞ்சிருக்கும் டிசைன் மேல போட்டுக்கோங்க. அவுட் லைனர் டியூப் ல இருக்கும். அதை லேசா அழுத்திக்கிட்டே அப்படியே டிசைன் மேல வரைஞ்சு ஒரு பத்து நிமிசம் காய விடுங்க.

அவுட்லைன் காய்ந்ததும், பொருத்தமான கிளாஸ் பெயிண்ட் கலரை போடுங்க. இதுக்கு பிரஷ் தேவையில்ல. அந்த பாட்டில்ல இருந்து அப்படியே போடலாம். அப்படிப் போடும்போது, குமிழ் வராம பார்த்துக்கோங்க. அப்படி குமிழ் இருந்தா ப்யிண்ட் காய்ஞ்சதும் குமிழ் உடைஞ்சு அந்த இடம் பெயிண்ட் இல்லாம அசிங்கமா இருக்கும்.

அலங்கார சிடி ரெடி. சிடி நடுவில் இருக்கும் ஓட்டை மேல் பெப்சி, கோக் பாட்டில் மூடியை வச்சு அதன் மேல மெழுகு வத்தி ஏத்தலாம்.  இல்லன்னா சின்னதா குங்குமச் சிமிழ் வச்சு பிக்ஸ் பண்ணி வீட்டுக்கு வரும் கெஸ்ட்களுக்கு கொடுக்கலாம். இதையே சுவத்துலயும் தொங்க விடலாம்.


வலதுப்பக்கம் இருக்குறது அப்பு செஞ்சது, இடதுப்பக்கம் இருக்குறது சின்னவ செஞ்சது, கிளாஸ் பெயிண்டிங் செட் 65 ரூபாய்லயும், 85 ரூபாய்லயும் கிடைக்குது. 65 ல 6 கலரும், அவுட்லைனும் கிடைக்குது. 85 10 க்லரும் அவுட்லைனும் கிடைக்குது.

தேவையில்லாத சிடிக்களை குப்பைலதான் போடுறோம். அதனால சுற்றுச்சூழல் பாதிக்கப்படுதுன்னு பெரியவங்கலாம் சொல்றாங்க.அதனால, தூக்கியெறியாம இப்படி எதாவது செஞ்சு பயன்படுத்தலாமே! சுற்றுச்சூழல் பாதிப்புல இருந்து உலகை காப்பாத்த ஏதோ நம்மால முடிஞ்சது!!!

மீண்டும் அடுத்த வாரம் புதுசா ஒரு கிராஃப்ட் செய்யுறதை பார்க்கலாம்,

டாட்டா! பை பை, சீ யூ....,

28 comments:

 1. சூப்பரா இருக்கே... நல்ல ஐடியா. வாழ்த்துக்கள் இருவருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சசி!

   Delete
 2. அழகாக செய்து உள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

  // ஏதோ நம்மால முடிஞ்சது // இது போல் சின்ன சின்ன "முடிஞ்சது" தான் சுற்றுச்சூழலுக்கு நல்லது... வாழ்த்துக்கள் சகோதரி...

  ஆகா...! லீவு விட்டா உங்கள் கதி - கொடுத்து வைத்த சகோதரி...! ஹிஹி... இதை விட என்ன சந்தோசம்...?

  லீவு விட்டா கணினி பக்கமே போகாதீர்கள், லீவு நாட்களில் குழந்தைகளுக்கும் சந்தோசம் கூடும்...! + எங்களுக்கும் ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. என்னை கணினி பக்கம் அனுப்பினாதான் அதுங்க கொட்டமடிக்க முடியும்.

   Delete
 3. அட...அருமையான ஐடியாவா இருக்கே தங்கச்சி...! அண்ணிக்கும் இதை சொல்லிடுறேன் உடனே...!

  ReplyDelete
 4. நல்லா இருக்குங்க.... பயனுள்ள பொழுதுபோக்கு தான்... சுற்றுச்சூழலுக்கும் நம்மால ஆன நல்லது செய்யலாம்... கிளாஸ் கலர்கள் இரண்டு இருக்கு... சிடி இருக்கா பார்த்து ரோஷ்ணிக்கு சொல்றேன்...

  முன்பு தில்லியில் நான் செய்த கைவேலைகளில்... சிடிக்கள் வைத்து செய்த வேலைப்பாடுகள் இந்த இரண்டு பதிவிலும் இருக்கு... முடிந்த போது பாருங்க...

  பிள்ளையார் வால் ஹேங்கிங் - http://kovai2delhi.blogspot.in/2011/08/blog-post_30.html

  சிடி வால் ஹேங்கிங் - http://kovai2delhi.blogspot.in/2012/01/6.html

  ReplyDelete
  Replies
  1. உங்க பதிவை ஏற்கனவே பார்த்திருக்கேனுங்க ஆதி!

   Delete
 5. Replies
  1. நன்றிங்க கிரேஸ்

   Delete
 6. அருமையாக இருக்கிறது
  ஒரு கல்லில் பல மாங்காய்
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா!

   Delete
 7. அடடா கைவசம் இத்தனை வொர்க் வச்சிருக்கீங்களா? இன்னொரு முறை மகாசக்தி ஆக்குவோம் - பெண்கள் மலர் ஆர்ட் & கிராப்ட் புரோக்ராமுக்கு சொல்லித்தர உங்களை ஏற்பாடு பண்ணிடுவோம்.....

  ReplyDelete
  Replies
  1. நான் அம்மாம்பெரிய அப்பாடக்கர் இல்லீங்கோ!

   Delete
 8. அருமையாக செய்துள்ளார்கள்! நன்கு பழக்கப்படுத்திய தங்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சகோ!

   Delete
 9. பரவாயில்லையே, உபயோகம் இல்லாத சிடியில் இவ்வளவு வேலை செய்ய முடியுமா...

  ReplyDelete
  Replies
  1. எனக்கு தெரிஞ்சே இன்னும் பல வகை அலங்காரம் செய்யலாம்.

   Delete
 10. என்னுடைய இரண்டாவது மகளுக்கும் இது மாதிரி எதையாவது செய்துக்கொண்டே இருக்க வேண்டும். அவளுடைய பெட்ரூம் முழுவதும் ஏதோ ஒரு அருங்காட்சி போல இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. சீரியல் ,புரணி, பகல் தூக்கம் இல்லாம எதாவது இதுப்போன்றது செய்வது நல்லதுதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

   Delete
 11. தமிழில் ஒரு புதிய வலைத்திரட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது, உங்கள் தளத்தை மேலும் பிரபலபடுத்த எங்களுடைய வலைத்திரட்டியில் உறுப்பினராக சேர்ந்து புக்மார்க் செய்யுங்கள்.

  எங்களின் இணையதள முகவரி : FromTamil

  ReplyDelete
 12. குழந்தைகளின் ஆக்கத்திறனை அழகாக ஊக்குவிக்கும் கலைவேலைப்பாடு. எடுத்த செயலை நேர்த்தியாக முடிக்கும் பொறுமையும், நேரத்தை பயனுள்ள முறையில் கழிப்பதும், ஒரு புதிய கைவேலையைக் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் என பலவகையிலும் பாராட்டத்தக்கதொரு செயல். குழந்தைகளுக்கும் உங்களுக்கும் பாராட்டுகள் ராஜி.

  ReplyDelete
 13. நல்லா இருக்கு. உங்கள் மகளுக்கும் மகனுக்கும் பாராட்டுகள்.

  ReplyDelete