Saturday, January 11, 2014

தொல்லைக்காட்சிக்கு சமூக பொறுப்பும், அக்கறையும் இல்லையா!? - கேபிள் கலாட்டா

நெகிழ்ந்தது:

புதிய தலைமுறை சேனல்ல ”ரௌத்திரம் பழகு”ன்னு நிகழ்ச்சிப் போடுவாங்க. இப்படி ஒரு நிகழ்ச்சி இருப்பது தெரியும். ஆனா, இதுவரைப் பார்த்ததில்லை. எப்பவாவது பார்த்திருக்கேன். கடந்த வருசத்தின் போராட்டங்கள் பத்தின ஒரு கண்ணோட்டத்தைப் பத்தின நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது.

கணவனால் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி கிட்டத்தட்ட 13 வருச காலம் போலீஸ் ஸ்டெஷனுக்கும், ஹாஸ்பிட்டலுக்கும் போய்க்கிட்டும், வேலைக்கும் போய் மூணு பிள்ளைகளைக் காப்பாத்தி நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்தப்பின், அப்பாக்கூடவே சேர்ந்துக்கோம்மான்னு வீட்டை விட்டு வெளியில் அனுப்பிய சாந்தி, குப்பை பொறுக்கும் தொழிலாளர்கள், பிளாட்பார்ம்ல குடி இருந்தவங்களை வீடு தரேன்னு சொல்லி ஒரு கட்டிடத்தில் சுமார் 50 குடும்பங்களைக் குடியேற்றி, கிட்டத்தட்ட 4 வருடங்களாக கண்டுக்கொள்ளாத ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம், இந்த நவீனக் காலத்திலயும் மின்சாரம்,சாலை, மருத்துவ வசதி செய்துத் தரப்படாத கிராமம்ன்னு பாதிக்கப் பட்ட மக்களுக்காகப் போராடுனதைப் பார்க்கும்போதே மனசை நெகிழ வைத்தது. இனித் தொடர்ந்துப் பார்க்கனும்.

எரிச்சல்: 
இப்பலாம் எல்லா டிவிலயும் வீட்டை துடைக்குற துணி, வீட்டு மனை,   ஒரே நாளில் குபேரனாக்கும் எந்திரம் முதற்கொண்டு முடிக் கொட்டாம இருக்க எண்ணெய் வரைக்கும் கூவி கூவி விக்குறாங்க. இந்த விளம்பரங்களுக்கு முன்னாடி சேனல் காரங்க ஒரு அறிவிப்பு போடுவாங்கப் பாருங்க அதைக் கண்டா மட்டும் அப்படியே பத்திக்கிட்டு வரும்.

இந்த நிகழ்ச்சி விளம்பரதாரர் நிகழ்ச்சி. விள்ம்பரங்களில் வரும் பொருட்களின் பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். பொருட்களை வாங்குவது வாசகர்களின் தனிப்பட்ட பிரச்சனை. இதனால வரும் பாதிப்புகளுக்கு சேனல் பொறுப்பேற்காதுன்னு. அப்ப காசுக்காக எதை வேணுமின்னாலும் ஒளிப்பரப்புமா இந்த டிவி சேனல்கள்!? மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லையா!? சமூகப் பொறுப்பு இல்லையா!?




தேடல்:
முன்னலாம் மக்கள் டிவில சின்ன சின்ன ஆசைன்ற நிகழ்ச்சியை விடாம பார்ப்பேன். ஆர்த்தின்ற ஒரு பொண்ணு சமூகத்து அடித்தட்டு மக்கள்கிட்ட பேசி  அவங்க ஆசைகளில் சிலதை நிறைவேத்தி வைக்கும். ஒரு குழந்தைக்கு ஐஸ் சாப்பிட ஆசை, ஒரு டீன் ஏஜ் பொண்ணுக்கு கலர் கலரான ட்ரெஸ் மேல் ஆசை, தாத்தாக்கு குளிருக்கு போர்த்திக்க போர்வைன்னு அவங்க ஆசையோட பட்டியல் நீளும். ஒவ்வொரு வாரமும் சிலரோட ஆசைகள் தீர்த்து வைக்கும் நிகழ்ச்சி சூப்பரா இருக்கும்.

நிகழ்ச்சிக்கு மெருகூட்டுறதே ஆர்த்தியோட கலகல பேச்சும், சட்டுன்னு மக்களோடு ஒன்றிப் போற குணம்தான். கொஞ்ச நாளா இந்த நிகழ்ச்சி பார்க்காம இருந்தேன். போன வாரம் சேனல் மாத்திக்கிட்டே வரும்போது மறுபடியும் இந்த நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. ஆர்த்திக்கு பதிலா யாரோ ஒரு பொண்ணு நிகழ்ச்சில வந்தது, எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் பண்ணி, ஒப்பிக்குற மாதிரி இருந்துச்சு. சட்டுன்னு சேனல் மாத்திட்டு வந்துட்டேன்.

டவுட்:
ஒரு ஃபேர்னஸ் க்ரீம் விளம்பரத்துல வந்த பொண்ணு தன் ஃப்ரெண்ட்ஸ், அக்கா, தங்கச்சி, லவ்வர்கிட்டலாம் தன்னோட முகம் பளப்பளப்பா இருக்குறதுக்கு காரணம் இந்த க்ரீம்தான்னு பெருமையாச் சொல்லிட்டு இருந்துச்சு. ஆனா, இப்ப திடீர்ன்னு இத்தனை நாள் தான் போட்டுட்டு இருந்த XXXXX க்ரீம் தோத்துப் போச்சுன்னு சொல்லி சோகமா நிக்குது.

ஏன்? ஜெயிச்சது யாருன்னு அவ ஃப்ரெண்ட் கேக்கும்போது XXXXX க்ரீம்தான். ஃப்ரெண்ட்லாம் புரியாம முழிக்க, XXXXX க்ரீம் இப்ப அட்வான்ஸ் ஆகிடுச்சுன்னு சொல்லி சிரிக்குது. அடப் பக்கிகளா! இதை முன்னாடியே தயாரிச்சு வித்திருந்தா பொங்கலுக்கு வெள்ளையடிக்குற மாதிரி இந்த க்ரீமை பூசி வெள்ளையாகிருப்பாங்களே நம்ம பசங்க!!! இத்தனை நாள் நம்பிக்கையும், காசும் வேஸ்டா!?

உண்மை:
பொதிகைல நாதஸ்வரம் (சீரியல் இல்லீங்க.., கல்யாணம் காது குத்துக்குலாம் வாசிப்பாங்களே! அது.) நாதஸ்வரம் செய்ய தேவையான மரம் தேர்ந்தெடுக்குறது முதற்கொண்டு, இழைச்சு, துளைப்போட்டு நாதஸ்வரமாக்குறது வரை அழகா தொகுத்து வழங்குனாங்க. எது எதுக்கோ புது புது சாதனங்களை அறிவியல் கண்டுப்பிடிச்சாலும், நாதஸ்வரம் தாயாரிக்க, மரத்துண்டுல துளைப்போட அந்தக்கால முறைப்படிதான் இன்னும் நடக்குது. நாதஸ்வரம் செய்யுற அன்னிக்கு அசைவம் தொடாம விரதமிருந்துதான் செய்வோம்ன்னு ஒரு பெரியவர் சொன்னார்.

ஒரு நாதஸ்வரம் தயாரிக்க இம்புட்டு மெனக்கெடனுமா?ன்னு தொகுப்பாளினி கேட்டதுக்கு.., நம்ம ஊருல எந்த நல்ல காரியமும் தொடங்கும்போது நாதஸ்வர ஓசையில்தான் ஆரம்பிக்குது. நல்ல காரியத்துக்கு பிள்ளையார் சுழி போட பயன்படும் கருவியை செய்ய கொஞ்சம் மெனக்கெட்டால் தப்பில்லைன்னு பெரியவர் சொன்னார். உண்மைதானே!

கேபிள் கலாட்டா அடுத்த வாரமும் தொடரும்...,

18 comments:

  1. மக்கள் நலனில் சிறிதும் அக்கறையா...? அவர்களுக்கே அவர்கள் மீது இல்லையே...!

    ReplyDelete
  2. சில சேனல்களின் நிகழ்ச்சிகள் நன்றாக உள்ளது.பொதிகை,மக்கள்,சித்திம்,சுட்டி,ஜி தமிழ் இப்படி பல

    ReplyDelete
  3. புகைப்படத்தில் தோன்றும் அந்த பெண் - உங்களின் மனம் கவர்ந்த ஆர்த்தியா? அல்லது உங்களை எரிச்சல் படவைத்த பெண்ணா?

    ReplyDelete
    Replies
    1. இதிலென்ன சந்தேகம் ,எல்லோர் மனங்களைக் கவரும் ஆர்த்தி தான் !பார்க்கும் போதே கூலா இருக்காங்களே !

      Delete
  4. வாராவாரம் டீ வி நிகழ்ச்சிகள் பற்றி எழுதப்போறீங்களா? அருமையா எழுதறீங்க! தொடருங்கள்! சின்ன சின்ன ஆசை நிகழ்ச்சி நானும் பார்த்துள்ளேன்! மக்கள் தொலைக்காட்சியில் வந்த நல்ல நிகழ்ச்சிகளுல் ஒன்று அது! இப்போது டீவி நிறைய பார்ப்பது இல்லை!

    ReplyDelete
  5. //காசுக்காக எதை வேணுமின்னாலும் ஒளிப்பரப்புமா இந்த டிவி சேனல்கள்!? மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லையா!? சமூகப் பொறுப்பு இல்லையா!?//

    பொறுப்பா அப்படினா ? இவர்களுக்கு பணமும் trp rating தான் முக்கியம்

    ReplyDelete
  6. நல்ல அலசல்
    தொடர வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வியாபாரிகள் அவர்கள்
    பொங்கல் நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. நல்ல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சேனல்களுக்கு தங்களால் முடிந்த அளவுக்கு சமூக தளங்ககளில் ஆதரவு தரவேண்டும் அப்போது தான் நல்ல நிகழ்ச்சிகளுக்கான டி ஆர் பி ரேடிங்க் உயரும் அப்போது அனைத்து சேனல்களும் நல்ல தரமான உயரிய நோக்கமுள்ள நிகழ்ச்சிகளை நோக்கி செல்லும். மக்கள் தொலைக்காட்சி பாமக வினுடையது என்பதாலேயே அதன் சிறந்த நிகழ்ச்சிகளை எல்லாம் யாரும் மனதார பாராட்டுவதில்லை. ஆனால் டிஆர்பி ரேடிங்கை மட்டுமே நோக்கி ஓடும் சினிமா ஆதரவு விஜய் டிவியை அனைவரும் ஆதரவு தெறிவிக்கின்றனர். நம்மனதில் உள்ள அழுக்குகள் தான் அடுத்தவர்க்கு தன்மீதான தவறான அபிப்ராயத்தை ஏற்ப்படுத்துவது. துர்மனம் வீசும் பொருளை நல்ல பொருள் விற்கிற கடைக்காரன் நமக்குபிடிக்கவில்லை என்பதற்க்காக அடுத்த கடையில் வீம்புக்காக வாங்கிச்சென்றால் உனக்கு இதுதான் பிடிக்கும் என்று வியபாரி நினைப்பான்.

      Delete
  8. நல்ல அலசல்... நானும் ஆர்த்தி நிகழ்ச்சி பார்த்திருக்கிறேன்... நல்ல தொகுப்பாளினி.

    ReplyDelete
  9. வீட்டு வேலைகளையும் செய்து கொண்டு, வலைப்பதிவினிலும் வலம் வந்து கொண்டு, டீவி சேனல்களையும் பார்க்க உங்களுக்கு நேரம் இருப்பது ஆச்சரியமான விஷயம்தான். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. தொல்லை தீர்க்கும் தொலைக்காட்சி - கேபிளுக்கு கணவர்களின் நன்றி.

    என் தந்தை என்னிடம் சொன்னது :
    கோவாலு நீ குடுத்த் வெச்சவண்டா. ஒன் வயசில நான் இருந்தபோது ஒங்க அம்மாக்கும் பாட்டிக்கும் மதியஸ்தம் பண்ணவே எனக்கு நேரம் செரியா இருக்கும். இந்த மாமியார் மருமகள் சீரியல், சொல்வதெல்லாம் உண்மை எல்லாம் வந்ததுக்க்ப்பறம் ஒம்பக்கமே எந்தப் பொம்பளயும் வரதில்ல பாத்தியா.

    சிரிப்புடன், கோபாலன்

    ReplyDelete
  11. நாதஸ்வரத்துக்கு பெரியவர் சொன்ன கருத்து சால்ப்பொருத்தம்.

    ReplyDelete
  12. இதைவிட விக்கிற பொருளை வாங்கறதுக்கு missed call கொடுங்கன்னு சொல்வாங்களே, அப்ப பத்திக்கிட்டு வரும்....

    ReplyDelete
  13. நாதஸ்வரம் பற்றிய அரிய தகவல்களை பலரும் அறிய தந்திருப்பதற்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. எனக்கு திடீர்ன்னு ஒரு சந்தேகம்.

    இந்த சீரியல் நாதஸ்வரத்தைப் பாத்து குடும்பமே அடரா மாதிரி பாம்பு படமெடுத்து ஆடுமா.


    கே. கோபாலன்

    ReplyDelete
  15. நல்ல பகிர்வு. பாராட்டுகள்.

    ReplyDelete