Tuesday, January 14, 2014

பொங்கலு பொங்கலு வைக்க....,

 வருசம் முழுக்க எத்தனையோ பண்டிகைகள் கொண்டாடிக்கிட்டுதான் இருக்கோம்.  இருந்தாலும் பொங்கல் பண்டிகைன்னாலே மனசுக்கு உற்சாகம் தரும் பண்டிகைப் போல ஏதுமிருக்கான்னு எனக்கு தெரியலை.

      மார்கழி மாசம் பொறந்த உடனே கூட படிக்கும்  பிள்ளைங்கலாம் ஸ்கூல்ல உக்காந்து கோலம் போட்டு பார்ப்போம். அதுக்கு கலர்லாம் செலக்ட் பண்ணிக்குவோம். போகி அன்னிக்கு வீட்டையெல்லாம் சுத்தம் பண்ணி வச்சிடுவோம். நைட் 8 மணிக்கு தெரு வாசல் கழுவி செம்மண் இட்டு கோலம் போட ஆரம்பிப்பேன். நான் ரொம்ப அழகா இருக்குறதால (ஹலோ அழகா? அப்பிடின்னா) ஓக்கே ஓக்கே. நைட் டைம் என்பதால் அப்பா, எதிர்வீட்டு ஐயர் மாமா, கோடிவீட்டு செட்டியார் சித்தப்பா, மாடிவீட்டு கோணார் அண்ணன்லாம் வாசல்ல சேர் போட்டுக்கிட்டு உக்காந்து கதை பேசிக்கிட்டு இருப்பாங்க(ஒரு அழகான பொண்ணுக்கு காவலாம்!!). நான் கோலம் போடுவேன். 

    அம்மா, எதிர்வீட்டு சித்தி, கோடி வீட்டு மாமி, மாடி வீட்டு அண்ணிலாம் கோலத்துக்கு கலர் கொடுப்பங்க. அக்கம் பக்கம் வீட்டில் பெண்குழந்தைகளே கிடையாது. எல்லார் வீட்டுலயும் ஆண் பிள்ளைகளே. அவங்க வீட்டுலலாம் நாந்தான் செல்ல பொண்ணு. அவங்க வீட்டுலயும் நாந்தான் கோலம் போடுவேன். ஆக மொத்தம் 6 வீட்டில் கோலம் போட்டு முடிக்க நைட் 12 மணிக்கு மேல ஆகிடும். நான் கோலம் போடும்போது, நான் தூங்கி வழிய கூடாதுன்னு  காஃபி, பிஸ்கட்டு, ன்னு வாங்கி தந்து பார்த்துப்பாங்க.
                                           
அம்மா அரைச்சு வச்ச மருதாணியை வச்சுக்கிட்டு, தெருவை ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு வருவேன். யார் வீட்டுல நம்மளைவிட அழகா போட்டிருக்காங்கன்னு பார்த்துட்டு வருவேன். என்னைவிட யாராவது அழகா கோலம்  போட்டிருந்தாலும் எதாவது குறையை கண்டுபிடிச்சு நான் போட்ட கோலம்தான் பெஸ்ட்ன்னு என்னை நானே தேத்திக்கிட்டு வந்து படுப்பேன்.

இதான் பிளையார் மேடை

அப்பா முதல் நாள் நைட்டே ஆற்றங்கரை இல்லைன்னா குளத்தங்கரையில் இருந்து களிமண் கொண்டாந்து, வீட்டு வாசல்ல சாமிக்கு ”பா”ஷேப்புல வீடு கட்டி பிள்ளையார் பிடிச்சு வச்சுட்டு படுப்பார். விடிகாலை ஐந்து மணிக்கு எழுந்து குளித்து மஞ்சள் குங்குமம் வைத்து, கரும்பு, அவரைக்காய், கத்திரிக்காய், பூசணி, உருளை, கருணைக்கிழங்கு, முள்ளங்கி, மொச்சைன்னு கிடைக்கும் காய்கறிலாம் வச்சு படைப்பாங்க. பானையோட கழுத்துல ”பச்சை மஞ்சளை” (மஞ்சள் எப்படி பச்சையா இருக்கும்ன்னு கேட்கப்படாது. உலராத மஞ்சள் தான் ”பச்சை மஞ்சள்”)


        நல்ல நேரம் பார்த்து வாசல்ல களிமண்ணால அடுப்பை உருவாக்கி, அதுல வரிசையா மூணு பானையை  வச்சு,   துவரை மிளாறை விறகா பயன் படுத்துவாங்க. முதல்ல, பானை காய்ந்ததும் நெல் போடுவாங்க. அது பொறிந்ததும் பால் ஊத்துவாங்க, பால்பொங்கி வரும் சமயம் தண்ணி ஊத்தி மடக்கு என்னும் மண்ணால் ஆன தட்டை பானை மேல மூடுவாங்க.  வீட்டுல இருக்கும் நண்டு சிண்டுலாம் ஆளாஆளாக்கு பானைகளை பிரிச்சுக்கிட்டு யார் பானை முதல்ல பொங்குதுன்னு பந்தயம் கட்டிக்கிட்டு வேகவேகமா தீ வைப்பாங்க.
                                       
    பொங்கல் எந்த பக்கம் பொங்கி வருதுன்றதை வச்சு அந்த வருசம் வீட்டுல நல்லது நடக்குமா? கெட்டது நடக்குமான்னு பெருசுங்க ஜோஷியம் சொல்வாங்க. அதுக்காகவே அம்மா, சித்தி, அத்தைலாம் எந்த பக்கம் பொங்கி வந்தால் நல்லது நடக்கும்ன்னு பாட்டி சொல்லுவாங்களோ அந்த பக்கம் லேசா பானையை சாய்ச்சு வைக்கும் கூத்துலாம் நடக்கும். பொங்கல் பொங்கி வரும்போது போங்கலோ பொங்கல்ன்னு சத்தமா போட்டி போட்டுக்கிட்டு கூவுவோம்.                                  


       கொதிக்குற தண்ணியில பச்சரிசி, உப்பு போட்டு  பொங்கல் வச்சு இறக்குவாங்க. பொங்கல் பானை ஃபுல்லா வந்திருந்தா அந்த வருசம் ஃபுல்லா நல்ல விளைச்சல்ன்னும், கொஞ்சம் குறைச்சலா வந்தால் விளைச்சல் கம்மின்னு எங்க பாட்டி சொல்லும். 
   அதே அடுப்புல, வெறொரு பானையை ஏத்தி  நவதான்யங்களை வறுத்து, வேக வைத்து கத்திரிக்காய், முள்ளங்கி, அவரைக்காய், பூசணி, வெள்ளரிக்கிழங்கு, உருளை கிழங்கு, பிடி கருணை, கருணைக்கிழங்கு, வாழைக்காய்லாம் போட்டு மிளகாய்த்தூள், உப்பு போட்டு கொதிக்கவைத்து மிளகாய்தூள் வாசனை போனப்பின் புளிக்கரைசலை ஊத்தி, கடுகு, காய்ந்த மிளகாய், பூண்டுலாம் போட்டு தாளித்து பொங்கல் குழம்பு செய்வாங்க. பொங்கலுக்கு இதுதான் எங்க வீட்டுல ஹைலைட்டே. கூடவே வெந்தய்க்கீரை கடைன்சும், பிடிக்கரணை காரக்குழம்பும் வைப்பாங்க. இந்த மூணும்தான் பொங்கலுக்கு எங்க வீட்டுல பெஸ்ட் காம்பினேஷன்.


காலையில பிள்ளையார் வைத்த இடத்துலயும் அடுப்பாண்டையும் சுத்தம் பண்ணி, தண்ணி தெளிச்சு, செங்கல் பொடியால கோலம் போடுவோம். அப்புறம் பூசணி  இலையை கொண்டுவந்து அதுலதான் பொங்கல் வைச்சு படைப்போம். சூரியனுக்கு காட்டி சாமி கும்பிட்டு சாப்பிடுவோம். அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மான்னு எல்லரும் உக்காந்து கதை பேசிக்கிட்டு இருப்பாங்க. நண்டு சிண்டு நட்டுவாக்களிலாம் நாங்க கரும்பு தின்னுக்கிட்டு, விளயாடிக்கிட்டு இருப்போம்.
இப்படித்தான் நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ பொங்கல் கொண்டாடினேன். இன்னிக்கும் என் பிள்ளைகளும் இந்த மகிழ்ச்சியை அனுபவிக்கனும்ன்னும், பாரம்பரியத்தை மறக்ககூடாதுன்னும் இதே முறையில்தான் பொங்கல் வைக்குறேன். இதுல ஒரே ஒரு மாறுதல் பானைக்கு பதில் வெண்கல பானை என்பது மட்டுமே.., பையனுக்கு வேட்டி, சட்டை. பொண்ணுங்களுக்கு  நான் பெற்ற இன்பத்தை என் பிள்ளைகளும் அனுபவிக்கட்டுமே! 

படங்கள்லாம் போன வருசத்திய பொங்கல் கொண்டாட்டத்தின் போது எடுத்தது.

24 comments:

 1. உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


  ReplyDelete
 3. கோலம் போடுறதுக்கு காபி,பிஸ்கட் இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலையாங்க?????

  ReplyDelete
  Replies
  1. கோலம் போட்டாகனுமே! அதனால தூங்காம இருக்க, டீ, காஃபி, பிஸ்கட்லாம் கொடுப்பாங்க.

   Delete
 4. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்... சிறப்பு பகிர்வு : (நிறைவு பகுதி)

  http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-2.html

  ReplyDelete
 6. பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் .....
  இனிய தைப் பொங்கல் +புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக மலரட்டும் ......

  ReplyDelete
 7. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் எங்களது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. இல்லத்தில் இன்பம் பொங்கட்டும்.பொங்கல் நல்வாழ்த்துகள் ராஜி

  ReplyDelete
 9. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 10. நன்றி! எனது உளங்கனிந்த
  பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. பொங்கல் நினைவுகள் அருமை! படங்கள் எங்கோ பார்த்த மாதிரி இருக்கே! ஒருவேளை மீள்பதிவோன்னு நினைச்சேன்! நீங்களே போனவருசம் எடுத்த படம்னு சொல்லிட்டீங்க! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. //அந்த பக்கம் லேசா பானையை சாய்ச்சு வைக்கும் கூத்துலாம் நடக்கும்.// என்னா ஒரு வில்லத்தனம்

  உங்க குடும்பத்துக்குள்ள புகுந்து பொங்கல் கொண்டாடினது மாதிரி இருந்ததுக்கா..

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. பொங்கல் வாழ்த்துகள் அக்கா!!

  ReplyDelete
 14. எனதினிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 15. வணக்கம் சகோதரி
  தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

  ReplyDelete
 16. வணக்கம்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

 17. வணக்கம்!

  திருவள்ளுவா் ஆண்டு 2045
  இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்
  தங்கத் தமிழ்போல் தழைத்து!

  பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
  எங்கும் இனிமை இசைத்து!

  பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
  சங்கத் தமிழாய்ச் சமைத்து!

  பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை!
  கங்குல் நிலையைக் கழித்து!

  பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை!
  எங்கும் பொதுமை இசைத்து!

  பொங்கல் திருநாள் புதுக்கட்டும் சாதிமதம்
  தொங்கும் உலகைத் துடைத்து!


  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 18. நல்லாத்தான் கொண்டாடி இருக்கீங்க பொங்கல்ன்னா மனசுக்கு மகிழ்ச்சி...!

  ReplyDelete
 19. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. நல்ல பொங்கல் கொண்டாடியாச்சு உங்க பதிவுலேயே :) மிக மிக அருமை :)
  பொங்கல் வாழ்த்துகள்!

  ReplyDelete
 21. இது போன்ற பதிவுகளில் தான் பழமையைப் பார்க்க முடிகிறது... எங்க வீட்டிலெல்லாம் குக்கர் பொங்கல்தான்...

  ReplyDelete