Tuesday, January 07, 2014

மசால் வடை - கிச்சன் கார்னர்

இந்துக்கள் பண்டிகையில் கண்டிப்பா வடை, பாயாசம் இருக்கும்.  சாமிக்கு படைக்குறதுன்னா உளுத்தம்பருப்பு வடை இல்லாட்டி கடலைப் பருப்பு வடைதான் செய்வாங்க. வாசமா,மொறு மொறுன்னு இருக்கும் கடலைப் பருப்பு வடைன்னா சாப்பாட்டுக்கு பதிலா ஏழெட்டு கூட உள்ளத் தள்ளுவா தூயா. இப்ப லீவுக்கு அவ வந்தாலே கண்டிப்பா செஞ்சுக் கொடுத்துடுவேன். செய்ய ரொம்ப ஈசியானதும் கூட .

தேவையானப் பொருட்கள்: 
கடலைப்பருப்பு - 1 டம்ப்ளர்
பெரிய வெங்காயம் - 2
ப,மிளகாய் - 1
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 5 பல்
சோம்பு - சிறிது
புதினா, கறிவேப்பிலை, கொ.மல்லி - க்ஞ்சம்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு தேவையான அளவு


கடலைப் பருப்ப் மூழ்கும் அளவுக்கு தண்ணி ஊத்தி ஒரு மணி நேரம் ஊற வைங்க. வெங்காயத்தை தோல் நீக்கி கழுவி பொடியா நறுக்கிக்கோங்க.

ஊற வைத்திருக்கும் கடலைப் பருப்புடன், ப.மிளகாய், காய்ந்த மிளகாய், பூண்டு, சோம்பு, இஞ்சி, உப்பு சேர்த்து கரகரப்பா அரைச்சுக்கோங்க. தண்ணி சேர்க்காதீங்க. லேசா தெளிச்சுக்கிட்டா போதும். 

அரைச்ச மாவுடன், வெங்காயம் சேர்த்துக்கோங்க. 
புதினா, கொ.மல்லி, கறிவேப்பிலைலாம் சேர்த்து பிசைஞ்சு வச்சுக்கோங்க.


வடை மாவை உருட்டி தண்ணி தொட்டு வடையா தட்டிக்கோங்க. கைல வட்டமா வடைத் தட்ட வராதவங்க, ஒரு பிளாஸ்டிக் டப்ப மூடில தண்ணி தொட்டு வடை மாவை அதுல ஃபில் பண்ணி கைல எடுத்த ரவுண்டான வடை மாவு ரெடி. 
வாணலில எண்ணெய் சூடாக்கி தட்டி வச்ச வடை மாவை போட்டு ரெண்டுப் பக்கமும் சிவக்க விட்டு எடுங்க.

மொறு மொறுப்பான சூடான வடை ரெடி. தயிர் சாதம், புளிசாதத்துக்கு ஏத்தது. மாலை நேரத்துல குளிருக்கு இதமா பசங்களுக்கு செஞ்சு தரலாம். வூட்டுக்காரருக்கு கொடுக்கும்போது கூடவே எதாவது கேட்டா கம்பெனி பொறுப்பல்ல! பிக்னிக், கோவிலுக்கு போகும்போது செஞ்சு எடுத்திக்கிட்டு போனா எவ்வளவு நேரமானாலும் மொறு மொறுப்பா இருக்கும். குட்டி குட்டியா செஞ்சு சின்ன பசங்களுக்கு செஞ்சு கொடுத்தா ஆசையா சாப்பிடுவாங்க.

30 comments:

  1. உங்களது கடைசி படத்தை பார்க்கும்போதே, நாக்கில் எச்சில் ஊறுகிறது. கொஞ்சம் செய்து எங்களுக்கு பார்சல் அனுப்புங்களேன்....

    ReplyDelete
    Replies
    1. அட்ரஸ் சொல்லுங்க. பொங்கலுக்கு அனுப்பிடுறேன்.

      Delete
  2. ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...ஆகா...

    ReplyDelete
  3. aaha...
    naalaikku engal veettu margazhi bhajanai lE ungal veettu vadai thaan breakfast.
    oru 1000 vadai immediate aa parcel seyyunga.
    professional courier lE hot pack le vachu pannunga.
    thinasari ange dindugal dhanabalan varaaru.
    naalaikku sooda tharanum.

    subbu thatha.
    www.menakasury.blogspot.com

    ReplyDelete
  4. டிப்ஸ்: கடலைப் பருப்பிற்கு பதில் பட்டாணிப்பருப்பில் செய்தால் இன்னம் சுவையாக இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. அப்படியா! செஞ்சுப் பார்த்துட்டு சொல்றேனுங்க எழில்

      Delete
  5. ஆஹா ...அருமையான செய்முறை அப்படியே எனக்கும் ஒரு பார்சல்
    அனுப்பி வையுங்க தங்கச்சி அக்கா பாவம் .ஒண்ணுமே செய்யாம
    உக்காந்துகிட்டு சாப்பிட்டா அதன் சுவையே தனி :)))))))

    ReplyDelete
  6. அக்கா எனக்கு வடை தட்டவே வராது.தட்டினாலும் எண்ணெயில் இட்டதும் சிறிது மாவு எண்ணெயில் பிரிந்து சின்ன வடைதான் கிடைக்கும்.இவர் கிண்டல் பண்ணிட்டே சாப்பிடுவார்.பசங்கதான் மானத்தை வாங்கிடுவாங்க.

    ReplyDelete
  7. அழகான பொன்னிற‌மான வடைகள் பசியைத்தூண்டுகிறது!!

    ReplyDelete

  8. ///கடலைப் பருப்பு வடைன்னா சாப்பாட்டுக்கு பதிலா ஏழெட்டு கூட உள்ளத் தள்ளுவா தூயா//
    ஒரு சிறுவித்தியாசம் தூயா மாமா சாப்பாடையும் சாப்பிடுவிட்டு.ஏழெட்டு வடையை உள்ளத் தள்ளுவார்

    ReplyDelete
    Replies
    1. குழந்தை சாப்புடுறதைப் பார்த்து கண்ணு வைக்காதீங்க சகோ!

      Delete
  9. //தேவையானப் பொருட்கள்: ///

    இதில் பல ஐட்டங்கள் மிஸ்ஸிங்க்

    வடை சட்டி, கரண்டி, ஸ்டவ், கேஸ், தீப்பெட்டி, வடை சுடுவதற்கு ஒரு ஆள் தேவை என்று நீங்கள் சொல்லி இருக்க வேண்டும் இல்லையென்றால் இந்த காலப் பெண்கள் நீங்கள் கொடுத்த பொருட்கலை எடுத்து வைத்துவிட்டு வடை தன்னால வந்து விடும் என்று நினைப்பார்கள்

    இன்னும் ஒன்று வேண்டும் அதுதாங்க சுட்ட வடையை சாப்பிடுவதற்கு என்னைப் போல ஒரு ஆள் தேவை என்பதை சொல்ல மறந்துட்டீங்க

    ReplyDelete
    Replies
    1. ஆமா அக்கா, அடுத்த முறை இந்த மாதிரி தப்பு தப்பா விட்டு விட்டு எழுதாதீங்க.. ;-)

      Delete
    2. சரிங்க சார்ஸ், இனி இந்த தப்பு நேராது

      Delete
  10. ///தண்ணி சேர்க்காதீங்க. லேசா தெளிச்சுக்கிட்டா போதும். //

    டாஸ்மாக தண்ணியா தெளிவான விளக்கம் கொடுங்க. சும்மா மொட்டையா தண்ணி என்றால் குழப்பமாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. குழாய் தண்ணி,, கேண் தண்ணி, ஆத்து தண்ணி, கிணத்து தண்ணி எதா இருந்தாலும் ஓக்கே. டாஸ்மாக் தண்ணி மட்டும் வேணாம். ஏன்னா, வடை சின்ன குழந்தைகளும் சாப்பிடுமில்ல. அதுக்குதான்

      Delete
  11. ///அரைச்ச மாவுடன், வெங்காயம் சேர்த்துக்கோங்க. //

    வெங்காயத்தோட அரைச்ச மாவு சேர்த்தா வடை நீங்க சொன்ன மாதிரி வருங்களா
    என்னடா இவன் இப்படி எல்லாம் கேள்வி கேட்குறான்னு நினைக்கிறீங்களா என் பொண்டாட்டி யாரிடம் எதை கேட்டாலும் நல்லா விளக்கமாக கேட்டு தெரிஞ்சுக்கணும் என்று சொல்லி இருக்காங்க அதனாலதான்

    ReplyDelete
    Replies
    1. அரைச்ச மாவோடு வெங்காயம் சேர்த்தாதான் வடை நல்லா இருக்கும்.

      Delete
  12. ///கைல வட்டமா வடைத் தட்ட வராதவங்க, ஒரு பிளாஸ்டிக் டப்ப மூடில தண்ணி தொட்டு வடை மாவை அதுல ஃபில் பண்ணி கைல எடுத்த ரவுண்டான வடை மாவு ரெடி. //

    அது சரி நீங்க இப்படி சொல்லிட்டு நீங்க சுட்ட வடை எல்லாம் டிபெரண்ட் சைஸில் வந்து இருக்குதே. ஒரு வேளை படத்திற்கு போஸ் கொடுத்தது மட்டும் நீங்க மீதி எல்லாம் வூட்டுகாரர் தட்டி போட்டாறா என்ன?

    இதை எதுக்கு கேட்கிறேன்னா எங்க வீட்டுல் எங்க வூட்டுகாரம்மா தட்டுவாங்க ஆனா வடையை நான் தான் போடுவேன் எங்க வூட்டுகாரம்மா வடையை தட்டமாட்டாங்க என்னை பூரிக் கட்டையால் லேசா தட்டுவாங்க அது புரிஞ்சு கிட்டு நான் வடையை போட்டு எடுப்பேன்

    ReplyDelete
    Replies
    1. உங்க சாமர்த்தியம் எல்லோருக்கும் வருமா சகோ!?

      Delete
  13. //மொறு மொறுப்பான சூடான வடை ரெடி. தயிர் சாதம், புளிசாதத்துக்கு ஏத்தது//

    இந்த வடை சரக்கு அடிப்பவர்களுக்கு ஏற்ற மிகவும் அருமையான் வெஜிடேரியன் சைடிஸ்

    ReplyDelete
    Replies
    1. அனுபவசாலி சொன்னா சரியாதான் இருக்கும்.

      Delete
  14. நீங்கள் தட்டிக் கொண்டிருக்கும் வடை, படத்தில் உள்ள பெரிய வடைகளில் மேலிருந்து கீழே உள்ள மூன்றாவது வடை எப்படி கண்டுபுடிச்சேன் பாதீங்களா ? வடைக்கு டீ தான் சரியான ஜோடி இது என் தாழ்மையான கருத்து !!!!

    ReplyDelete
  15. படா சோக்கா கீது தாயீ...
    அப்பால... அந்த சுக்கா வறுவல்...? பிளீசு...

    ReplyDelete
  16. அக்கா, மசால் வடையில மசாலே காணோம்? ;-) எங்க ஊர்ல இதை பருப்பு வடைன்னு சொல்லுவோம்..

    ReplyDelete
    Replies
    1. மைசூர் பாக்ல மைசூர் இல்லன்னு சண்டைப் பிடிப்பே போல இருக்கே ஆவி! சோம்பு, பூண்டு, புதினா போட்டதால மசாலா வடைன்னு பேரு.

      Delete
  17. அரைக்கிரையை கழுவி பொடியாக நறுக்கி வடை மாவில் சேர்க்கலாம் .. முருங்கை கீரை கூட சேர்க்கலாம்..!

    ReplyDelete
    Replies
    1. அடுத்த முறை முயற்சி செய்து பார்க்குறேன் அம்மா!

      Delete
  18. மசாலா வடை.... நல்லா இருக்கு.

    ReplyDelete