Wednesday, January 15, 2014

மாட்டுப் பொங்கல்

      மாட்டுப் பொங்கல் அன்னிக்கு மூதாதையர்களுக்கு துணி வச்சு படைக்குறது எங்க ஊர் வழக்கம்.  அதனால அன்னிக்குதான் நாங்க  புது துணிகளை   படைச்சு கட்டுவோம். வீடு வாசல்லாம் மொழுகி, செம்மண் கரை இட்டு பச்சரிசி ஊற வச்சு அரைச்சு, தண்ணி கலந்து, வீடு முழுக்க கோலம் போடுவோம்.
                         
(துணில அந்த மாவு தண்ணியை நனைச்சு அதை லேசா பிழிஞ்சுக்கிட்டே ரெண்டு விரலால கோலம் போடுறதே தனி கலை.)

                            
(வீட்டு வாசல்ல நான் போட்ட கோலம்.......)
                                                            
                                  
     மாட்டுப் பொங்கல் அன்னிக்கு மாலை ஆறு மணிக்கு  விளக்கு வச்ச பின் தான் படைக்குறது வழக்கம். துணிகளை படைச்சு, வீட்டிலிருக்கும் பெரியவங்க, தம்பதி சமேதராய்  எடுத்து குடுப்பாங்க. பெரியவங்கலாம்  தன்னால் முடிந்த அளவு  பணம்  மத்தவங்களுக்கு குடுப்பாங்க.அதுக்காகவும் பசங்க காத்துக்கிட்டு இருப்பாங்க.

   சாம்பார், பொறியல், வடை, பாயாசம், இனிப்பு போண்டா, கொழுக்கட்டை இதெல்லாம் கண்டிப்பா செய்யனும், செய்து சாமிக்கு படையல் போட மணி எட்டாகிடும். பெரியவங்கள்லாம் டி.வி பார்த்துக்கிட்டும் கதை பேசிக்கிட்டும் சாப்பிட்டு முடிக்கும்வரை பிள்ளைகள்லாம் தவிப்பா பார்த்துக்கிட்டும் சீக்கிரம் சாப்பிடுங்க, எதிர்வீடு, பக்கத்துவீட்டுல எல்லாம் பசங்க டிரெஸ் போட்டுட்டாங்கன்னும் கூச்சல் போட்டுக்கிட்டும் இருப்பாங்க.

(7 மணிக்கு படைக்க போற துணிகள் மஞ்சள் தடவி மதியம் மூணு மணிக்கே தயார்...,)
                              

(ஸ் அப்பாடா..., ஒரு வழியா  எட்டு மணிக்கு படைச்சுட்டோம்...)
                               

   நாந்தான் சின்ன பையன் எனக்குதான் முதல்ல டிரெஸ் தரனும்ன்னு கடைக்குட்டி சொல்ல, நாந்தான் மூத்த பெண் எனக்குதான் முதல்ல டிரெஸ்ன்னு பெரிய பொண்ணு வாதிட, அவங்கவங்க பிள்ளைகளுக்கு சப்போர்ட் பண்ணி,  செல்ல  சண்டைக்கு அம்மாக்கள் தயாராக.., யாருக்கு முதல்ல ட்ரெஸ் தரதுன்னு குழம்பிய பெரியவங்களை ஒரு தட்டுல எல்லார் ட்ரெஸ்ஸும் வச்சு எல்லா குட்டீசுக்கும் ஒரே நேரத்துல ட்ரெஸ் குடுக்க வச்சுட்டான் அப்பு

( பிள்ளைகளெல்லாம் தாத்தா, பாட்டி காலில் விழுந்து டிரெஸ்ஸையும்
,அவர்களின் ஆசியையும் வாங்குதுங்க..)

                                 

(பிள்ளைகளுக்கும் சந்தோஷம், பெரியவங்களுக்கும் சந்தோஷம்...,)
  
குழந்தைகளை தொடர்ந்து பெரியவங்க நாங்கலாம் ஜோடியாய் பெரியவங்க  காலில் விழுந்து டிரெஸ் வாங்கிக்குவோம். துணியோடு சேர்த்து அவங்களால் முடிந்த அளவு பணம் தருவாங்க. அதை பிரிச்சுக்குறதுல தகராறு பண்ணிக்கிட்டு இருக்கும்போது, குட்டீஸ்கள் அப்பா, அம்மாவுக்கு இடையில்  சமாதான படுத்துற மாதிரி வந்து பணத்தை அதுங்க அடிச்சுக்கிட்டு போய்டும்ங்க. 

    புது துணி உடுத்திக்கிட்டு  அவங்கவங்க நட்பு வட்டத்தோடு கோயிலுக்கு போவோம்.  வத்தலும், தொத்தலுமா  இருக்கும் ரெண்டே ரெண்டு மாட்டை என்னமோ அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டுல மாட்டை அடக்குற மாதிரி எங்க ஊரு “பிரசாந்த், சிம்பு, தனுஷ்”லாம் பயங்கரமா  சீன் போடுவாங்க. அந்த வீரத்துல  எங்க ஊர் ”தாப்ஸீ, ஹன்சிகா மோத்வானி, கார்த்திகா”லாம்  மயங்கி புது காதல்லாம் பிக்கப் ஆகும்.


                                     (பெரியவங்ககிட்ட ஆசி வாங்கும் ஜோடிகள்...,)


                                 (பிள்ளைகளுக்கு தாத்தா, பாட்டி பணம் குடுக்குறாங்க....,)

                    (மாடுகள் வந்து சேருமிடம்.. நைட்டுல எடுத்ததால் மாடுங்க தெரியல...,)

   காணும் பொங்கலன்று எல்லாரும் கோவிலுக்கு போவோம். கோவிலுக்கு போகும் முன் சின்ன மாமனர், மாமா, சித்தப்பா, அண்ணன்கள் எல்லாரும் எல்லாருக்கும் பைசா குடுப்பாங்க. எப்படியும் பெரியவங்களுக்கு ஆயிரம் ரூபாயும், சின்னவங்களுக்கு 250 ரூபாயும் சேர்ந்துடும் பொங்கல் அன்று. 

    முன்னலாம் 3 கி.மீ நடந்து போவோம். எல்லா உறவுகளும் பேசிக்கிட்டு அரட்டை அடிச்சுக்கிட்டும் கரும்பு, பொரி சாப்பிட்டுக்கிட்டும் போவோம். இப்போலாம் டூவீலர்ல போய்ட்டு வந்துடறோம். நடந்து போய்வந்த போது இருந்த உற்சாகம் இப்போ வண்டில போய் வரும்போது இல்லைன்னு எல்லாரும் உணர்கிறோம்.

    அத்தோடு பொங்கல் கொண்டாட்டம் முடிஞ்சுது. அன்னிக்கு பொங்கல் முடிந்தாலும் அதன் நினைவு பல மாதங்கள் நெஞ்சில் நிற்கும். அடுத்த பொங்கல் எப்போ வரும்ன்னு காத்து கிடப்போம்.

   எங்களுக்குள்ளும் சண்டைகள், சச்சரவுகள் உண்டு. ஆனால், அதெல்லாம் இந்த பண்டிகையின்போது கொஞ்சம் கொஞ்சமா மாறி உறவுநிலை சகஜமா மாறிடுறதை கண்கூடா பலமுறை பார்த்திருக்கேன். பண்டிகைகள் வருவதன் நோக்கமும் அதுதானே!!??

படங்கள் போன வருசத்தியது...,


15 comments:

 1. அடடா...பெரியோர்களும் சிறியோர்களும் இன்பத்தில் பொங்கும் உண்மையான பொங்கல் இதுதான்

  ReplyDelete
 2. இனிமையான நினைவுகள்... மிக்க சந்தோசம்... இந்த வருடம் படங்கள் எடுக்கவில்லையா...?

  இனிய திருவள்ளுவர் தினம், மாட்டுப் பொங்கல் தினம் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. எனதினிய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. மலரும் நினைவுகளை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. காலில் விழுவதை நான் அறவே வெறுப்பவன்; அதே சமயம், எங்க அம்மா அப்பா காலில் மட்டும் தான் விழுவேன்.

  மிக நன்றாக எழுதிய இடுகை: கோவிலுக்கு போய் இல்ல சாமியார் காலில் விழுவதை விட தாத்தா பாட்டி காலில் விழுவது ஒரு நல்ல பழக்கம்; அவர்கள் மனதும் குளிரும்; நம்ம்கும் உடனே ஆசிர்வாதாம் கிடைக்கும்!
  தமிழ்மணம் +1

  ReplyDelete
 6. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
  Vetha.Elangathilakam

  ReplyDelete
 7. இனிய பொங்கல் நினைவுகள்! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. எளிமையான கோலம் மிகவும் அழகாகப் போட்டுள்ளீர்கள் .வாழ்த்துக்கள்
  சகோதரி ஒவ்வொரு ஆண்டிலும் இந்த இன்பம் தொடரட்டும் .

  ReplyDelete
 9. நாங்களும் இதுபோல் தான் செய்வோம்..ஆனா நான் வெஜ் தான் செய்து படைப்போம்.இன்னிக்கு ஆடு கோழி மீன் எல்லாமே செய்து ருசிப்போம்.பொங்கல் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 10. உங்களுடைய பதிவு எனக்கு அந்நாளில் சிறுவயதில் எங்கள் தாத்தா – அம்மாச்சியோடு கொண்டாடிய மாட்டுப் பொங்கலை நினைவூட்டியது. நன்றி! மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. அற்புதமான பதிவு
  முடிவில் பண்டிகையின் அர்த்தத்தை
  விளக்கியவிதம் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. உறவுகளோடு பண்டிகைகள் கொண்டாடும் சுகமே மனதை இன்னும் இளமையாக்கிவிடும் இல்லையா ? வாழ்த்துக்கள் தங்கச்சி...

  ReplyDelete
 13. இனிமையான நினைவுகள்.. உறவுகள் பலப்படுவது மகிழ்ச்சி....

  இன்று எனது பக்கத்தில்

  http://kovai2delhi.blogspot.in/2014/01/blog-post_16.html

  ReplyDelete
 14. ற்புதமான பதிவு! பொங்கல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete