Monday, January 27, 2014

அப்புவின் ரெயின் மாமா! - ஐஞ்சுவை அவியல்

என்னங்க மாமா! முகம் ஒரு மாதிரி இருக்கு!?

ஒண்ணுமில்ல புள்ள!

ஏன் மாமா!? என்கிட்ட சொல்லக்கூடாதா!?

சொல்லலாம். சொன்னாலும் பிரயோசனம் இல்லியேன்னு பார்க்குறேன். என்னோடு சேர்ந்து உனக்குதான் மனசு சங்கடம். 

அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமா! நீங்க சொல்லுங்க. என்னால முடிஞ்சா ஹெல்ப் பண்றேன். இல்லாட்டி யோசனை சொல்றேன்.

யோசனைதானே! அதான் வஞ்சகனை இல்லாம எல்லோரும் கொடுப்பீங்களே! விவசாய லோன் வாங்குனேன். அதை திருப்பிக் கட்ட நாளைக்குதான் கடைசி நாள். என்கிட்ட பைசா இல்ல. அதான் யோசிக்குறேன். 

இம்புட்டுதானா!? என்கிட்ட கொஞ்சம் பைசா இருக்கு. தர்றேன் மாமா.

உனக்கேது புள்ள பைசா!?

அதுவா!? நீங்க வீட்டுச் செலவுக்கு கொடுத்ததுப் போக மிச்சம் பிடிச்சது. அதுமில்லாம, வரட்டி தட்டி வித்தது, நம்ம தோட்டத்துல விளைஞ்ச அவரை, பூசணி, தக்காளிலாம் வித்து கொஞ்சம் காசு சேர்த்து வச்சிருக்கேன். 

அப்படியா! சரி கொண்டா புள்ள. எனக்கு காசு வந்ததும் திருப்பி தந்துடுறேன். 

ம்ம் இந்தாங்க மாமா! நீங்க கேட்ட காசு. சரியா இருக்கான்னு பார்த்துக்கோங்க.

நோட்டை எண்ணிப் பார்க்குறது ஒருப் பக்கம் இருக்கட்டும். அந்த நோட்டு 2005க்கு அப்புறம் அச்சடிச்சதான்னு பார்க்கனும். அதான் முக்கியம்.

ஏன் மாமா!

கறுப்புப் பணத்தை ஒழிக்க 2005க்கு முன் வெளி வந்த ரூபாய் நோட்டுகளை முக்கியமா 500, 1000 ரூபாய்களை, ஜனவர் 31க்குள் எந்த பேங்கல்யும் கொடுத்து புது நோட்டுக்களை வாங்கிக்க சொல்லி ரிசர்வ் பேங்க் உத்தரவு. நீங்க நோட்டை கொடுத்து மாத்தும்போது எந்த தகவலும் தர வேணாமின்னும், ஃபிப் 1 லிருந்து மாற்றப்படும் ரூபாய்க்கு நீங்க யார்ன்ற தகவலும், எப்படி காசு வந்துச்சுன்ற தகவலும் சொல்லியாகனும்ன்னு ரிசர்வ் பேங்க் சொல்லி இருக்கு. இது நல்ல முயற்சின்னு ஒரு பக்கமும், இதனால் கறுப்புப் பணம் ஒழியாதுன்னு இன்னொரு பக்கமும் வழக்கம்போல கூவிக்கிட்டு இருக்காங்க. 

ம்ம்ம் என்னமோ மாமா! ஒரு எழவும் எனக்கு புரிய மாட்டேங்குது.

ம்ம் உனக்கு புரியாட்டி போகட்டும். நம்ம உசேன் பாய் குழந்தைக்கு கிட்னி ஃபெயிலியர்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்களே! என்னாச்சு!? குழந்தை இப்ப எப்படி இருக்கு!? 

குழந்தை இப்ப நல்லா இருக்குங்க மாமா! எப்பவுமே, நம்மாளுங்களும், முஸ்லீம்களும் ஒண்ணுக்குள் ஒண்ணா இருப்பாங்க. இப்ப அந்த உறவை பலப்படுத்துற மாதிரி, உசேன் பாய் கூட வேலை செய்யும் ரங்கராஜன்ன்றவர் கிட்னிக் கொடுத்திருக்கார். ரங்கராஜன் ஒண்ணும் வசதியான, படிச்ச ஆள் இல்ல. காய்கறி மார்க்கட்ல மூட்டைத் தூக்கும் தொழிலாளி. ஏழைங்குறதுக்காக அவர் தன் கிட்னியை விக்கலை. உசேன் பாயும் ரங்க ராஜனும் ஃப்ரெண்ட்ஸ், உசேன் பாய்க்கு ஒரே குழந்தை. அதான் அவர் குழந்தையை காப்பாத்த ரங்கராஜன் ஹெல்ப் பண்ணி இருக்கார். இதுக்காக, ரங்கராஜனைப் பாராட்டி, லயன்ஸ் கிளப் சார்பா ரங்கராஜனோட பையன் படிப்பு செலவை ஏத்துக்கிட்டாங்க.

அப்படியா! நல்ல விசயம். சாதாரண மக்களுக்குள் மத வேறுபாடில்லை. சில்ரோட சுய லாபத்துக்காகத்தான் மதம், ஜாதின்ற பேர்ல நாம அடிச்சுக்குறோம்ன்னு இதிலிருந்து தெரியுது! டிவி பொட்டியை போடு புள்ள ரெயின் அங்கிள் என்ன சொல்றார்ன்னு பார்க்கலாம்!?

ரென் அங்கிள்னா தெரியாதா உனக்கு!? டிவில மழை பெய்யுமா!? பெய்யாதான்னு சொல்வாரே ரம்ணன்! அவர்தான் ரெயின் அங்கிள்.  ஒரு முறை ராஜி வீட்டுக்கு போயிருந்தேன். அங்க, அவளோட பையன் அப்பு, ஸ்கூல் பேக் எடுத்து பக்கத்துல வச்சிக்கிட்டு, ஹோம் வொர்க் செய்யாம டிவி பார்த்துட்டு இருந்தான். டெய்! டிவி பார்க்காம போய் ஹோம் வொர்க் எழுதுன்னு சொன்னேன். இருங்க அங்கிள், இப்ப நியூஸ்ல ரெயின் அங்கிள் வருவார். அவர் நாளைக்கு மழை வருமா!? வராதான்னு சொன்னப் பின் நான் போய் ஹோம் வொர்க் செய்யுறேன்னு சொன்னான்.

டேய்! அதுக்கும், நீ ஹோம் வொர்க் செய்யுறதுக்கும் என்னடா சம்பந்தம்ன்னு கேட்டதுக்கு, மழை வந்தா ஸ்கூல் லீவ் விடுவாங்கல. அப்புறம் அனாவசியமா ஏன் ஹோம் வொர்க் முடிக்கனும்!? இன்னிக்கு ஜாலியா இருந்துட்டு நாளைக்கு எழுதுவேன்னு சொன்னான். உன் ஃப்ரெண்டைப் போலவே அவ பிள்ளையும் சோம்பேறி புள்ள.

போதும்! போதும்! என் ஃப்ரெண்ட் பத்தி பேசுறதை விடுங்க. என் போனுக்கு வந்த கடி ஜோக் ஒண்ணு சொல்லவா!?

ம்ம் சொல்லு!!

குடும்பத்தை மறந்தவர்கள், சாப்பாட்டை மறந்தவர்கள், ஏன் சிரிப்பைக் கூடத் தொலைத்தவர்கள், எந்நேரமும் நிலைகுத்திய பார்வையுடன் இருப்பவர்கள்.. யார்? அது யார்!?

சின்னக் குழந்தைக்குக் கூடத் தெரியுமே.. அது ரிஷிகள், முனிவர்கள் என்று.

 அது அந்தக் காலம். இந்தக்காலம்.. அது சாப்ட்வேர் எஞ்சினியர்கள்!

நல்லா இருக்கு. ஜோக் நீ சொல்லிட்டே! நான் விடுகதை கேக்குறேன் பதில் சொல்லு...,

சொல்றேனுங்க மாமா!!


ஓடையில் ஓடும் நீர், ஒருவரும் குடிக்க முடியாத உப்பு நீர் அது என்ன!?

மாமா! இம்புட்டுதானா!? விடை இப்ப சொல்லவா!? இல்ல பைசா கொண்டு வந்து கொடுத்துட்டு சொல்லவா?!

பைசா கொடுத்துட்டே சொல்லு புள்ள!!

19 comments:

 1. இன்னும் இவ்வுலகில் மனிததன்மை இறக்கவில்லை,ரங்கராஜன் போன்றவா்கள் இருக்கும் வரை உலகம் அழியாது.நம்பிக்கை வாழும்,
  அப்பு தாயைப் போல பிள்ளை.
  விடை கண்ணிர்

  ReplyDelete
  Replies
  1. அவன் நல்லா வேலைச் செய்வான் சுபா! நாந்தான் கொஞ்சமே கொஞ்சம் சோம்பேறி!

   Delete
 2. முத்தான தகவல்களாகப் பதிவு செய்கிறீர்கள் ..வாழ்த்துகள் ராஜி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கிரேஸ்

   Delete
 3. உரையாடல் மூலம் சமீபத்திய செய்தியை சொல்லி விட்டீர்கள்... "பைசா கொடுத்துட்டே" 'கண்ணீரு'டன் சொல்லுங்க சகோ...!

  ReplyDelete
  Replies
  1. சரியான விடைதான் அண்ணா!

   Delete
 4. அருமை!அரசியல் வியாதிகளுக்கு மட்டும் தான் இனம்,மதம்,சாதி எல்லாம்.மனிதத்துக்கு அல்ல!

  ReplyDelete
 5. //நோட்டு 2005க்கு அப்புறம் அச்சடிச்சதான்னு பார்க்கனும்.//

  தகவுலுக்கு நன்றி ப்துசா நான் நோட்டு அடிக்கும் போது கவனத்தில் கொள்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. நீங்க நோட்டடிக்குறதை போலீசும் கவனத்துல வச்சிக்கும்

   Delete
 6. ரெண்டாயிரத்து ஐந்து என்று "வருஷம்" எழுதாத நோட்டுகளைத்தான் பேங்க்ல கொடுத்து மாற்றிக்கலாம்ன்னு நண்பன் ஒருத்தன் சொல்றான், எதுக்கும் விசாரித்துக் கொல்லவும்.

  மனிதநேயம் மனிதனிடம் இப்பவும் இருக்குறதாலத்தான் கொஞ்சம் மழையேனும் பெய்யுது உலகில்...

  ReplyDelete
  Replies
  1. உங்க ஃப்ரெண்ட் சொல்லுறது தப்பு! 2005க்கு முந்தைய நோட்டுகளைதான் மாத்திக்க சொல்றாங்க.

   Delete
 7. ரெயின் மாமா // ரமணன் அவர்களின் டவுசர் கிழிந்தது போங்க ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 8. மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கும் மனிதநேயர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். வாழ்க ரங்கராஜன்! இந்த ரூபா நோட்டு சமாச்சாரம் ஓரளவு விவரம் தெரிஞ்ச நமக்கே குழப்பமாத்தேன் இருக்குது. பாமர ஜனங்கள்ளாம் பாவம்மா...!

  ReplyDelete
 9. மிகவும் சிறப்பான விஷயங்கள் சொன்ன அவியல்.

  மனித நேயம் கொண்ட ரங்கராஜன் வாழ்க! அவருக்கு எனது வணக்கங்கள்....

  ReplyDelete
 10. சுவாரஸ்யமான விஷயங்கள்... ரங்கராஜன் என்ற சிறப்பான மனிதருக்கு என் வணக்கங்கள்...

  ரூபாய் நோட்டு விஷயம் கவனிக்க வேண்டியது தான்...

  உப்பு கரிக்கும் நீர் கண்ணீர்...

  ReplyDelete
 11. இந்த நோட்டுத் தகவலை நான் இரண்டு நாட்கள் முன்னாடி தான் கேள்விப்பட்டேன், நண்பர்கள் சொன்னது 1000 ரூபாய் மட்டும் தான் எண்டு. நீங்கள் 500 ரூபாயும் சேர்த்து சொல்லுகிறீர்கள். நான் எதற்கும் இங்கு என்னிடம் வைத்திருக்கும் 500 ரூபாய் நோட்டுக்களை ஷரீஃப் பார்த்துக்கொள்கிறேன்.
  தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 12. சகோ - "//குடும்பத்தை மறந்தவர்கள், சாப்பாட்டை மறந்தவர்கள், ஏன் சிரிப்பைக் கூடத் தொலைத்தவர்கள், எந்நேரமும் நிலைகுத்திய பார்வையுடன் இருப்பவர்கள்.. யார்? அது யார்!?//"

  - சீரியல் பார்க்கும் பெண்கள் தான் இதற்கு சரியான விடை.
  அவர்கள் தான் எப்பப்பார்த்தாலும், குடும்பத்தையே மறந்து, கணவனுக்கு சாப்பாடு போடுவதை மறந்து, அழுக்காச்சி சீரியலை பார்த்துக்கொண்டு, தானும் அழுது வடிவார்கள்.

  ReplyDelete