எங்க ஊர் பக்கம்லாம் நெசவு தொழில்தான் முதன்மையானது. மார்கழி மாசம் முழுக்க விடிகாலை 4 மணி முதல் நைட் 11 மனி வரை தறி நெய்வாங்க. கல்யாணம், காட்சி, சினிமான்னு எந்த பொழுது போக்கும் இல்லாம தறிவேலை செஞ்சு, கூடுதலா காசு சம்பாதிச்சு பொங்கலை சிறப்பா கொண்டாடுவாங்க. பொங்கல் கழிஞ்சு பத்து பதினைஞ்சு நாளுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து மீண்டும் நெசவு நெய்வாங்க. நெசவு மட்டுமில்ல மத்த எல்லாத் தொழில்களும் பொங்கல் கழிச்சு நல்ல நாள் பார்த்துதான் ஆரம்பிப்பாங்க. இந்த ஒரு வாரக் காலத்துக்குள் கோவில், டூர்ன்னு சுத்திட்டு வருவாங்க. அதுமாதிரி நாமளும் எதாவது ஒரு கோவிலுக்கு போகலாம் வாங்க!!
யாராவது சொல்லுங்க. எங்க போகலாம்!?
நானே சொல்றேன். சித்தவடம் ன்னு சொல்கிற கோட்டலாம்பாக்கம்ங்கிற ஊர்ல
எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீசிவகாமசுந்தரி சமேதே சிதம்பரேஸ்வரர்
திருக்கோவிலுக்கு போகலாம் வாங்க!!
இந்தக் கோவில் பத்தி திருவதிகைக்கு பக்கத்தில் உள்ள ஒரு மடம் என்பது பெரியபுராணத்துலக் குறிப்பு இருக்கு. இப்ப கோட்லாம்பாக்கம் ன்னு சொல்கிறாங்க. எட்டாம் நூற்றாண்டு காலங்களில் இது சித்தாண்டிமடம், சித்தாத்தமடம் அப்படின்னுதான் புராணங்களில் சொல்லப்பட்டு இருக்கு. இப்ப சித்தவடம்ன்னு சொல்றாங்க.
மேலும், இதுக்கு கோடாலம்பாக்கம் என்ற பெயரும்
உண்டாம் அதுவும் மருவி காலபோக்கில் கோட்லாம்பாக்கம்ன்னு அழைக்கபடுதுன்னு
சொல்கிறாங்க. .கோடல் என்பது செங்காந்தள் மலரைக்குறிக்கும். எனவே இந்த இடம்
செங்காந்தள் மலர்கள் நிறைந்த பகுதியாக முற்காலத்தில் இருந்திருக்கலாம்ன்னு
சொல்லபடுது. சரி, இனி கோவிலுக்குள் போகலாம் வாங்க!
கோவிலுக்குள் நுழைந்தவுடன் மற்ற சிவன்
கோவில்களில் இருப்பது போல முதலில் நாம் தரிசிப்பது நந்தியை தரிசிக்காம முதலில் நாம் தரிசிப்பது முழுமுதல் கடவுள் விநாயகரைதான். இதற்க்கு சில சிறப்பு
காரணங்கள் இருக்கலாம். அதை நமக்குச் சொல்லத்தான் யாருமில்ல. அவர் பின்னே பலிபீடமும், அதனை
அடுத்து நந்தியும் இருக்கு. நாம இப்ப விநாயகரை வணங்கிவிட்டு மூலவரை வழிப்படுமுன்
வெளிபிரகாரத்தை வலம் வரலாம். திருநாவலூரில்
அவதரித்தவர் சுந்தரமூர்த்திநாயனார் இவரது காலம் சுமார் எட்டாம் நூற்றாண்டுன்னு சொல்லப்படுது. திருமணபருவம் வந்த போது இறைவனால் தடுத்தாட்கொண்ட வரலாறு போன பதிவில்
பார்த்தோம். அப்படி இறைவனால் தடுதாட்கொள்ளப்பட்ட சுந்தரர் பல்வேறு பதிகங்கள்
பாடினார்.
இடதுப் பக்கம் இருப்பது வீரபத்திரர். வலப்பக்கம் இருப்பது
குபேரர். நடுவில் சுந்தரருக்கு இறைவன் அருள் புரியும் காட்சிதான் மேல இருக்கும் படத்தில் நாம் தரிசிப்பது. மேலும் பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பியும்,
பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் பெருமானும், பெரியப்புராணத்துக்கு முன்பு வந்த எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் பாடிய திருத்தொண்டர்
புராணத்தை மேற்கோள் காட்டிப் பாடப்ட்டது எனவும் கூடுதல தகவல். சுந்தரர் தம் திருத்தொண்டத் தொகையில்
பாடிய நரசிங்கத்தரையர் எனும் அரசர்கூட பல்லவ சக்கரவர்த்தியாக இருந்த ராஜசிம்ம
பல்லவனைக் குறிக்கும் என ஆராய்ச்சியாளர்களாலும், அந்த அரசன் பல்லவன் இல்லை, சிற்றரசன் சிலர்
சொல்கின்றனர்.
சுந்தரருடைய பெருமைகளைக் கேட்டுத்தெரிந்து கொண்ட சேரநாட்டு அரசராகிய சேரமான் பெருமாளும் திருவாரூர் வந்து அவரைச்சந்தித்து அவருடன் கூடவே இருந்து, ஒரே சமயத்தில் கைலாயம் சென்றதாக பெரியபுராணப் பாடல்களில் சொல்லபடுகின்றன. அதனால் இந்த கோவில் எந்த
நூற்றாண்டை சேர்ந்தது என அறியமுடியவில்லை. அங்கே இருந்த சில பெரியவர்களிடம்
கேட்டும் கூட தெரியவில்லை .
இது கருவறையின் கோபுரம். இனி இந்த கோவிலினுடைய ஸ்தல வரலாற்றை பார்க்கலாம்.
ஒருநாள் சுந்தரர் திருத்துறையூர் கோயில்
கொண்டிருக்கும் சிஷ்ட குருநாதரை தரிசித்து, பின்னர் அங்கிருந்து அட்டவீரட்டானத்தலங்களுள் ஒன்றான திருஅதிகை வீரட்டானம் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஈசனை தரிசிக்க தற்போது புதுப்பேட்டைன்னு
அழைக்கப்பட்ட ரோஜபுரியின் வழியாக சென்றார். ஆனா, திருவதிகையில் திருநாவுகரசர்
என்று அழைக்கப்பட்ட அப்பர் பெருமான் உளவாரபணி செய்து வந்தார். எனவே அந்த இடத்தை தன்கால்கலால் மிதித்தால்
பாவம்ன்னு நினைச்சு ரோஜாபுரியை அடுத்துள்ள கேடிலம்பாக்கம்ங்கிர ஊரில் உள்ள
சித்தவடமடம் என்கின்ற வழிப்போக்கர் தங்கும் சத்திரத்தில் தங்கிச் செல்ல நினைத்தார்.
இங்கே ஒரு
அண்ணாமலை உண்ணாமுலையம்மன் சன்னதி இருக்கு
அண்ணாமலையாரை இங்கேயே வணங்கிவிட்டு ஸ்தல வரலாறை தொடரலாம்.
அங்க இரவு உணவு
உண்டபிறகு அங்கிருந்த திண்ணையில் படுத்து உறங்கினார். அப்போது.. திண்ணையிலே
உறங்கிக்கொண்டிருந்த சுந்தரரின் தலையிலே ஏதோப் பட்டதைப் போலிருந்தது. உடனே
கண்விழித்து பார்த்த போது அவரது தலையிலே கால்படுமாறு ஒரு வயதான மனிதர்
படுத்திருந்தார்! பாவம் பெரியவர் தூக்கத்திலே தெரியாமல் கால்பட்டிருக்லாம் என
நினைத்து சற்று தள்ளிப் போய் படுத்துக்கொண்டார் சுட்னரர். மீண்டும் நல்ல தூக்கத்தில் மீண்டும்
தலையில் ஏதோ படுவதை உணர்ந்த சுந்தரர் கண்விழித்து பார்த்தபோது மீண்டும் அந்த
பெரியவரின் கால்கள் தன தலையில் படுமாறு படுத்திருந்ததால் ஒரு சலிப்போடு அடுத்த திண்ணையில் போய் படுத்து
கொண்டார். பயணக் களைப்பில் நன்றாக சுந்தரரும் உறங்கிபோனார்.
மீண்டும் தலையில்
ஏதோ தட்டுபட கண்விழித்த சுந்தரர் அதே பெரியவர்
இந்த திண்ணையிலும் வந்து சுந்தரருடைய தலையில் கால் வைத்து படுத்திருக்க
சுந்தரருக்கு நல்ல கோபம் வந்து யாரையா கிழவர் நீர்?நிம்மதியாக படுக்க விடமாடீரா என
கோபம் கொண்டார்.
ஸ்தல வரலாற்றை
கேட்டுக்கொண்டே இங்கே இருக்கிற நவக்கிரகத்தை சுத்தி வரலாம். நவக்கிரக கோவிலின் பக்கத்திலயே நடராஜர்
சன்னதியும் இருக்கு. அவரையும் தரிசித்து விட்டு வரலாற்றை தொடர்வோம்.
தலியின் மீது கால் போட்டுத் தன்னை தூங்க விடாமல் கிழவன் மேல் கோபம் கொண்ட சுந்தரர் என்னை நிம்மதியாய் உறங்கவிடாமல்
செய்கிறீரே! யார்நீர்? "என்று கேட்டார். அதற்கு அந்தப்பெரியவர் ,"என்னைத் தெரியவில்லையா?"என்று கேட்டுச் சற்றே உட்புறமாக நோக்கிச் சென்று மறைந்தார். அந்த இடத்திலே ரிஷப வாகனத்தில் உமையவளோடு சிவப்பெருமான் காட்சியளிக்க பரவசப்பட்டுப்போன சுந்தரர் வந்திருந்தது ஈசன் என அறியாமல் நான் பாவம் செய்தேன்
என்று சொல்லி இந்த பதிகத்தை பாடினாராம்
தம்மானை அறியாத சாதியார் உளரே
சடைமேற் கொள்பிறையானை விடைமேற் கொள்விகிர்தன்
கைம்மாவின் உரியானைக் கரிகாட்டில் ஆடல்
உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்
தெம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல் வைத்திடும் என்னும்
ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறிகெடிலவட வீரட்டானத்
துறைவானை இறைபோது மிகழ்வன் போலியானே.
இந்த பதிகத்தில் பத்து பாடல்கள் உள்ளன. திருவதிகை இறைவனை
நினைந்து பாடிய அப்பதிகத்தை இங்கு வைத்துப்பாடினார் சுந்தரர் அவருக்கு இறைவன்
காட்சித் தந்த இடமே தற்போதைய மூலஸ்தானம் என்று சொல்லபடுது.
அடுத்து இங்கே கால
பைரவர் சன்னதியும், சூரிய பகவான் சன்னதியும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது. இந்த
வட்டத்திலுள்ள கோவில்களில் பெரும்பாலும் இப்படிதான் இருக்கு. அதுபத்தின விவரங்கள்
தெரிந்து கொள்ள முடியவில்லை.
தென்முகக் கடவுளான
தட்சிணாமூர்த்தி மூலவர் சன்னதிக்கு வெளியே வீற்றிருகிறார். இந்த ஸ்தலத்திற்கு
வந்த வடலூர் வள்ளல் பெருமான் இந்நிகழ்ச்சியை நினைந்து
வியக்கின்றார்..சிவபெருமானை நோக்கி, “திருமுடியில்
பிறையணிந்த பெருமானே, திருமாலும் பிரமனும் வேதமும் தத்தம் முடிமேல்
அமையவேண்டும் என நின் திருவடி நோக்கித் தவம் கிடந்து வேண்டவும், அங்கெல்லாம் வராமல், ஆரூரனாகிய சுந்தரர் பித்தன் என்று பேசியும், முடிமேல் அடிவைத்தாய் என்று மறுக்கவும், விடாது தொடர்ந்து சென்று
அவர் முடிமேல் நின்றதே, உமது திருவடிக்கு சுந்தரர் முடிமேல் அத்தனை
ஆசைபோலும் என பாட்டாய் பாடபெற்றதும் இந்த ஸ்தலமே
ஒருமுடிமேல்பிறைவைத்தோய்
அரிஅயன்ஒண்மறைதம்
பெருமுடிமேலுறவேண்ட
வராதுனைப்பித்தனென்ற
மருமுடியூரன்முடிமேல்
மறுப்பவும்வந்ததவர்
திருமுடிமேலென்னஆசைகண்
டாய்நின்திருவடிக்கே.
இது செல்வகணபதி
சன்னதி. இந்த கோவிலானது நந்தன வருஷம் உத்தராயணம் தை மாசத்தில் 14 ம் தேதியில் (27.01.2013) ல் ராஜகோபுரம்
உபயதாரரகளால் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது என கல்வெட்டு
குறிப்பும் வைக்கப்பட்டு இருக்கு.
இது தாயார் சன்னதி. இங்கிருக்கும் அம்பாளின் திருநாமம் சிவகாமசுந்தரி இறைவன் பெயர் சிதம்பரேஸ்வரர்,
சிற்றம்பலநாதர் எனவும் அழைக்கபடுகிறார். வெளியே நால்வர் சன்னதியும் இருக்கு.
திருக்கோவிலை வலம் வரும் போது வெளிப்பிரகாரத்தில் அண்ணாமலையார் சன்னதிக்கு பின்புறம் ஆஞ்சநேயரும், ராஜக்கோபுரத்தை ஒட்டி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரும். வெளியே கருடாழ்வார் வாகனமாகவும் அதனை அடுத்து வள்ளி தெய்வயானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் சன்னதியும் மயில் வாகனமும் இருக்கு.
இந்த திருக்கோவிலுக்கு விழுப்புரம் வழியாகவும் போகலாம். விழுப்புரத்திலிருந்து அரசூர் வந்து அங்கிருந்து பண்ருட்டி செல்லும் வழியில் புதுப்பேட்டை என்னும் இடத்திலிருந்து 3 கி மீ தொலைவில் உள்ளது இந்த திருக்கோவில். பண்ருட்டிலிருந்து மடப்பட்டு வழியாக செலலும் மார்க்கத்தில் அங்கு செட்டிபாளையம் என்னும் ஊரில் இருந்து 1 கிமீ தொலைவில் இருக்கு. பஸ்ல போறவங்களுக்கு பண்ருட்டிலிருந்து நேரடியாக இங்கே மினி பஸ் இருக்கு கடலூரில் இருந்தும் பண்ருட்டி வந்து இந்த ஸ்தலத்தை அடையலாம்.
எங்க ஊர் பக்கம்லாம் பொங்கல் பண்டிகை 3 நாள் கொண்டாட்டம். மச்சினர், மூத்தார் பிள்ளைகள்லாம் வந்து வீடுலாம் தலைக்கீழா இருக்கு. போய் ஒழுங்குப் பண்ணனும். வேலை இருக்கு. நான் கிளம்பறேன். வேறு ஒரு கோவில் பத்தின தகவல்களுடன் மீண்டும் அடுத்தவாரம் சந்திக்கலாம்.
நன்றி! வணக்கம்!
அருள்மிகு ஸ்ரீசிவகாமசுந்தரி சமேதே சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு அருமையான படங்கள் மூலம், நாங்களும் சென்று வந்தோம்... நன்றி சகோதரி... பெயர்க் காரணங்கள், ஸ்தல வரலாறு - அனைத்து விளக்கங்களும் சிறப்பு... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅருமையான ஆலய தரிசனம்! நன்றி!
ReplyDeleteபரணீதரனுக்கு இணையாக
ReplyDeleteஆன்மீகச் சுற்றுலாப் பதிவுகள்
படங்களுடன் மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
தங்களின் அருளால், நாங்கள் கோவிலுக்கு போகாமலே நீங்கள் பதிவில் இடும் கோவில்களின் புகைப்படங்களையும் செய்திகளையும் பார்த்து அந்த இறைவனின் அருளை பெறுகிறோம்.
ReplyDeleteஇதுக்காக நீங்க கூலி எல்லாம் கேட்காதீங்க. எங்களுக்கு ஒவ்வொரு கோவிலையும் சுற்றிக்காட்டியே, நீங்கள் புண்ணியம் தேடிக் கொள்கிறீர்கள்.
தரிசித்தேன்...
ReplyDeleteராஜி புண்ணியத்தில் சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரரை தரிசித்தேன். நன்றி. தொடரட்டும் உங்கள் பனி.
ReplyDeleteஅருமையான தரிசனம்! அழகான கட்டுரை! நன்றி! நன்றி!
ReplyDeleteநல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பணி ...
ReplyDeleteஸ்தல அறிமுகம் படங்களுடன் அருமை....
ReplyDeleteவாழ்த்துக்கள்.
கேடுகளை அகற்றும் கோடாலம்பாக்கம் ஆலயம் பற்றி முழுமையான தகவல்களுக்குப் பாராட்டுக்கள்..!
ReplyDeleteசிறப்பான தகவல்கள். அழகிய படங்கள்......
ReplyDeleteபகிர்ந்தமைக்கு பாராட்டுகள்.