Tuesday, January 28, 2014

வெங்காய சட்னி - கிச்சன் கார்னர்

என் பசங்களுக்கு வெங்காய சட்னின்னா உயிர். அந்த சட்னி செய்யும் நாளில் மட்டும் எக்ஸ்ட்ரா ரெண்டு இட்லி இல்ல தோசை உள்ள இறங்கும். வெங்காயம் விக்குற விலையில கொஞ்ச நாளா அந்தப் பக்கம் போகாம இருந்தேன். இப்பதான் கொஞ்சம் விலை குறைஞ்சு இருக்கே! அதனால, இனி அடிக்கடி செஞ்சு கொடுத்துட வேண்டியதுதான்!

தேவையான பொருட்கள்:
உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி
மிளகாய் - 10
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 2
தேங்காய் - 2 பத்தை
புளி - சுண்டைக்காய் அளவு
பூண்டு - பத்து பல்
எண்ணெய் - 2 டீஸ்பூன்

வெங்காயம், தக்காளியை கழுவி பெரிய பெரிய துண்டுகளா வெட்டிக்கோங்க. தேங்காயை கழுவி சின்ன, சின்னதா வெட்டிக்கோங்க. புளில ஓடு, தூசு இல்லாம எடுத்து கழுவி வச்சுக்கோங்க.


ஒரு வாணலில ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் உளுத்தம்பருப்பும், மிளகாயும் போட்டு வறுங்க.

லேசா வறுபட்டதும், வெங்காயத்தை போட்டு வதக்குங்க.

ஒரே மாதிரி வெங்காயம் வதங்கவும், சீக்கிரம் வதங்கவும் கொஞ்சம் உப்பு சேருங்க.
வெட்டி வச்சிருக்கும் தக்காளியை சேர்த்து வதக்குங்க.

தக்காளி வெந்ததும் தோல் உரிக்காதப் பூண்டை சேருங்க.
சுத்தம் செய்த புளியை சேருங்க. 
அடுத்து தேங்காயை சேர்த்து லேசா வதக்கி, அடுப்பிலிருந்து வாணலியை இறக்கி ஆறினதும் உரல் இல்லாட்டி மிக்சில போட்டு அரைச்சு எடுங்க. 

ருசியான வெங்காய சட்னி ரெடி. இது தண்ணியா இல்லாம கொஞ்சம் கெட்டியா இருந்தா நல்லா இருக்கும். நைசா அரைக்காம கொஞ்சம் கரகரப்பா அரைச்சா நல்லா இருக்கும். மிக்சில அரைச்சா நைசாகிடும் உரல்ல அரைச்சா செம டேஸ்டா இருக்கும். ஆனா, இப்பலாம் யாருக்கு உரல்ல அரைக்க நேரம் இருக்கு. தேவைப்பட்டா கடுகு, கறிவேப்பில போட்டு தாளிச்சுக்கலாம். இல்லேன்னாலும் பரவாயில்ல!

அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட சந்திக்கலாம். 

போய் வரேனுங்க சகோஸ்!

29 comments:

  1. அக்கா இது என் favourate சட்னி.சுடான இட்லி,தோசைக்கு ஏத்த சட்னி. Travelக்கு ஏத்தது.

    ReplyDelete
    Replies
    1. வெளில கொண்டுப் போகும் தேங்காய் சேர்த்து இப்படி அரைச்சுக் கொண்டு போனால் சீக்கிரமே ஊசிப் போகுமே சுபா!

      Delete
  2. நாக்கில் எச்சில் ஊறுகிறது..

    ReplyDelete
    Replies
    1. தயங்காம மேல இருக்கும் இட்லில ரெண்டு எடுத்து சாப்பிடுங்க,

      Delete
  3. உரல்ல அரைக்க நேரம் எல்லாம் இருக்கிறது... ஆனால் யார் அரைப்பது என்பது தான் பிரச்சனையே... ஹிஹி...

    செய்முறை குறிப்பிற்கு நன்றி சகோ....

    ReplyDelete
    Replies
    1. சரி உண்மையை சொல்லிடுங்க உங்க வீட்டுல நீங்கதான் அரைப்பது என்று ஹிஹி..

      Delete
    2. நிஜாமாவே நேரமின்மைதான் காரணம் அண்ணா! பசங்களுக்காகவும், வீட்டுக்காரருக்கும் ருசியாய் சமைச்சுப் போடனும்ன்னு எல்லோருக்கும் ஆசைதான். ஆனா, அதிகப் பட்சம் காலை எட்டு மணிக்குள் காஃபி, டீ, காம்ப்ளான், காலை சிற்றுண்டி, மதியத்துக்கு லஞ்ச், அதை பேக்கிங், வீடு கூட்டுதல், பாத்திரம் துலக்குதல்ன்னு செம பிசியால்ல பெண்கள் இருக்காங்க.

      Delete
  4. சின்ன வேன்காயம்ன்னா இன்னும் ருசியா இருக்குமோ

    ReplyDelete
    Replies
    1. எங்க ஊர் பக்கம் சின்ன வெங்காயம் பயன்படுத்துறதில்ல. கல்யாணம், காதுகுத்தலுக்குதான் பயன்படுத்துவாங்க

      Delete
  5. எனக்கு மிகவும் பிடித்த சட்னி இதுதான்.... கல்யாணம் ஆன நாளில் இருந்து எனக்கு வெங்காயம் உரிச்சே என் பொண்டாட்டி திண்டாடரா !!

    ReplyDelete
    Replies
    1. கல்யாணம் ஆன நாளில் இருந்து உங்க மனைவியை அழுக வைப்பது நீங்க தானா? பொண்பாவம் பொல்லாதைய்யா

      Delete
    2. ஹலோ மிஸ்டர் மதுரை தமிழா! இதை உங்க வீட்டு கண்ணாடி முன் நின்று சொல்லும்.

      Delete
  6. எனக்கும் பிடித்த சட்னி.... ஆனா பூண்டு தான் சேர்த்ததில்லை... இனி சேர்த்து செய்கிறேன்... பூண்டு தோலுடனா அரைப்பது?

    எங்கம்மா கையால சூடான இட்லியும், வெங்காய சட்னியும் போட்டி போட்டுக் கொண்டு நானும் தம்பியும் சாப்பிடுவோம்... அது கதை...

    ReplyDelete
    Replies
    1. அப்ப நீங்க பண்ணிய சட்னியை வெங்கட் சார் &உங்க குழந்தை மட்டும்தான் சாப்பிடுவாங்களா பாவங்க அவங்க

      Delete
    2. இப்படியே எடக்கு மடக்கா பேசிட்டு இருந்தா உங்களுக்கு உங்க வூட்டம்மா சாப்பிட எதும் தரப் போறதில்ல!

      Delete
  7. படிக்கும் போதே நாவில் நீர் ஊறுகிறது! எனக்கும் இது பேவரிட்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  8. மல்லிகைப்பூப்போல இட்லியும் அந்த சட்னியையும் பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு. என் மனைவியும் இந்த சட்னியை நல்லா செய்வார்கள். நீங்கள் சொன்னது போல், இன்க்ட சட்னி செய்த அன்னைக்கு, இன்னும் ரெண்டு இட்லி உள்ளேபோகும்.

    ReplyDelete
    Replies
    1. ஏன் உங்க மனைவி ரொம்ப உறைப்பா பண்ணிடுவாங்களா அதனாலதான் இன்னும் ரெண்டு இட்டிலி உள்ளப் போகுதோ?

      Delete
    2. நான் அதிக காரத்தை விரும்புகிறவன். ஆனா பாருங்க என்னுடைய மனைவியின் சமையலில் காரம் கொஞ்சம் கம்மியாகவே இருக்கும். ஆனா இந்த சட்னியில மட்டும் கொஞ்சம் காரம் தூக்கலா செய்வாங்க, அதனால கூட ரெண்டு,மூணு இட்லி உள்ளப்போயிடும்.

      Delete
    3. ///நான் அதிக காரத்தை விரும்புகிறவன்.//

      நீங்க உங்க மனைவியை அதிகம் விரும்புகிற ஆள் என்றல்லவா நினைத்தேன்,

      Delete
  9. My favourite chutney... Will be very delicious!

    ReplyDelete
  10. என் மகனுக்கும் பிடிக்கும் வெங்காயச் சட்னி..புளி சேர்த்ததில்லை..செய்து பார்க்கிறேன்..நன்றி ராஜி!

    ReplyDelete
    Replies
    1. செஞ்சுப் பார்த்து ரிசல்ட் சொல்லுங்க கிரேஸ்

      Delete
  11. வெங்காயம் பண்ணிய சட்னியா? ஸாரி வெங்கயா சட்னியா பார்க்க நல்லவே இருக்கு ஆனா அதை அனுப்பி வைச்சாதான் டேஸ்ட் பார்த்து உண்மையில் நல்லா இருக்கா இல்லையான்னு சொல்ல முடியும்

    ReplyDelete
    Replies
    1. வெங்காயம் படிக்க, வெங்காயம் செய்த வெங்காய சட்னி

      Delete
  12. நல்ல சட்னி.....

    இட்லிக்கு நல்ல காம்போ...

    ReplyDelete