ராஜி நல்லவ, படிச்சவ, நாலும் தெரிஞ்சவ, ரொம்ப அறிவாளி, அவளுக்கு எல்லாம் தெரியும்ன்னு எங்க ஊர்க்காரங்களுக்கு நினைப்பு!!?? அதனால, சென்னை போகும்போது படிக்கிற
பசங்களுக்கோ இல்ல மத்தவங்களுக்கோ ரொம்ப முக்கியமான, எளிதில் கிடைக்காத புத்தகங்களை ஹிக்கின்பாதம்ஸ்ல வாங்கி வரமுடியுமான்னு கேட்பாங்க. அங்க போகும் போது புத்தகத்தோடு, அழகான ஆங்கிலேயர்
கால கட்டத்தை நின்னு ரசிச்சுப் பார்ப்பேன். ரசிச்சுப் பார்ப்பதோடு சரி, அப்பலாம் அதை பத்தி பெருசா
நினைக்க தோணல. இப்ப மௌன சாட்சிகளில் சென்னை நகரத்தின் புராதான கட்டிடங்களை பத்தி பதிவாக்கும் போது ஹிக்கின்பாதம்ஸ் மனசுல வந்தது. அதனால, இந்த வாரம் மௌனச்சாட்சிகளில் ஹிக்கின்பாதம்ஸ் இடம்பிடிச்சாச்சு! .
இதுதான் ஹிக்கின்பாதம்ஸ் பற்றிய பழைய படம். இதான் முதல் படமா இருக்கும்ன்னு நினைக்கிறேன். இந்தப் படத்தினை பதிவு செய்தவர் அதை பற்றி
சொல்லும்போது ஒரு செகண்ட் சேல் கடையில ஹிந்து சட்டங்கள் என்ற நூலை பார்த்து இருக்கிறார். அந்த புத்தகத்தினை விட அதில் இருந்த விளம்பரம் அவருக்கு பொக்கிஷமாக இருந்ததாம். அந்தப் புத்தகம் அச்சிடப்பட்ட வருஷம் 1878. அதுதான் முதல் பதிப்பு என இருந்ததாம். அப்ப ஹிக்கின்பாதம்ஸின்
ஆரம்பகட்ட வடிவமைப்பின் படம் இதுவாகத்தான் இருக்கும் என நம்புகிறேன் என்று சொல்கிறார். ஏனெனில் இப்ப இருக்கிற இந்த ஸ்டோர் 1904 ம் ஆண்டுதான் முழுமை அடைஞ்சு இப்ப இருக்கிற தோற்றத்துக்கு
வந்தததாம். இனி இதனுடைய முழு
வரலாற்றை பார்க்கலாம்....,
இந்தியாவில இருக்குற மிகப் பழமையான புத்தகக்கடையில மிகவும் முக்கியம் வாய்ந்ததும் பழமையானதுமான ஹிக்கின்பாதம்ஸ் சென்னை மவுண்ட் ரோட்ல இருக்கு. ஏபல் ஜோசுவா ஹிக்கின்பாதம்ஸ் ன்னு சொல்லப்படுகிற பிரிட்டிஷ் லைப்ரேறியன் 1840 ல பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவ மிஷினரிகள் நடத்தின வெச்ல்யன் புக் ஷாப்ங்கிர புத்தக கடையை நிர்வாகம் பண்ணுவதற்காக நியமிக்கபட்டார். அப்ப அது மிகவும் நஷ்டத்துல இயங்கியது. அதனால அதை நிர்வாகித்து வந்த மிஷனரிகள் அதை மிகவும் குறைந்த விலைக்கு விற்க முடிவு செய்தனர்.
அப்ப ஹிக்கின்பாதம்ஸ் அதை வாங்கி தன்னுடைய சொந்தக் கடையாக மாற்றி 1844 ல் ஹிக்கின்பாதம்ஸ்ன்னு பெயரிட்டார். அது அதன் பிறகு நல்ல லாபத்துடன் ஒரு தரமான புத்தகக் கடையாக, அப்ப இருந்த சென்னை பிரெசிடென்சியில் மிக முக்கியமான புத்தக கடையாக விளங்கியதாம். ஏன் இந்தியாவில இப்ப இருக்கிற புத்தக கடைகளில் மிகவும் பழமையான புத்தக கடை இந்த ஹிக்கின்பாதம்ஸ் ன்னு சொல்லபடுகிறது. ஜான் முர்ரே என்பவர் கூட தன்னுடைய 1859 ல் வெளியிட்ட குறிப்புகளில் கூட ஹிக்கின்பாதம்ஸ் மெட்ராஸ் பிரெசிடென்சில தலைசிறந்த புத்தக கடையாக இருந்தது என சொல்கிறார்.
அப்ப்பத்திய சென்னை
கவர்னராக இருந்த லார்ட் த்ரவேல்ல்யன் கூட
புரிந்து கொள்ளமுடியாத பல்வேறு விவரிக்கமுடியாத மெட்ராஸ் வாழ்கையில் எனக்கு
மிகவும் பிடித்தது இந்த ஹிக்கின்பாதம்ஸ் புக் ஷாப் ன்னு சொல்லிருக்கிறார். மேலும்
அந்த காலத்தில் சாக்ரடீஸ், பிளாட்டோ,
யூரிபிடிஸ், அரிஸ்டாஃபனீஸ், பிண்டர், ஹோரஸ், பெட்ரார்க், ரூசோ மொஎன்ஸ் கால்டரோன் மற்றும் ரெசின் இவர்களது புத்தகங்களும் விக்டர் ஹ்யூகோ போன்ற
சமிபத்திய ஜெர்மன் நாவலாசிரியர்களான ஷில்லர் மற்றும் கோதே மற்றும் பிரஞ்சு
நாவலாசிரியரின் அழகிய பதிப்புகளும் இங்கே கிடைச்சிருக்கு. .சாதாரண புத்தகம் முதல் தீவிர
புத்தக ரசிகர்களின் எல்லாவித தேவைகளையும் ஒரே இடத்துல நிறைவேற்றும் புத்தகக் கடையாக
இது இருக்குன்னு சொல்லி இருக்கிறார்.
இந்த நிறுவனம் எழுதுப்பொருள் விற்பனை மற்றும் தங்களது சொந்த அச்சகத்தில் அச்சிடப்பட்ட புத்தகங்களை 1860 முதல் விற்பனை செய்ய தொடங்கியது. மேலும் இங்கிலாந்து மகாராணியின் பிரகடனங்களை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியிடும் அதிகாரப்பூர்வ வெளியீட்டாளர்களாக 1858 ல் அங்கீகரித்தது. பின்னர் பிரிட்டிஷ் மகாராணியின் 1875 இந்திய வருகைக்கு பிறகு பிரிட்டிஷ் இந்திய கம்பனியின் அரசு அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களாக நியமிக்கபட்டனர். அதன் முதல் வெளிடாக 1889 ம் ஆண்டு இனிப்பு உணவுகளை ”இனிப்பு தின்பண்டங்கள்”ன்ற ஒரு சிறிய நூலை ய்வேர்ன் என்பவரது படைப்பில் வெளியிட்டனர்.
மேலும் பல்வேறு நிறுவனங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் அரசாங்கதிற்கும், அதிகாரபூர்வமான விற்பனையாளர்களாக ஹிக்கின்பாதம்ஸ் அந்த காலகட்டத்தில் விளங்கியிருக்கு. மேலும், ஏபல் ஜோசுவா ஹிக்கின்பாதம்ஸ் 1888 முதல் 1889 வரை மெட்ராஸ் பிரெசிடென்சியின் ஷெரிப் ஆகவும் பணியாற்றினார். மேலும் 1890 முதல் 1920 கன்னிமரா பொது நூலகதின் மொத்த சப்ளையர்களாக இருந்தனர் ஜேம்ஸ் ஹிக்ஸ், என்பவர் 1890 முதல் இதன் பொது மேலாளராக பணியாற்றினார். அந்த சமயத்தில் இவர்களுக்கு சாமான்ய
மக்கள் முதல் பிரிட்டிஷ் பிரதமர் கிளமெண்ட் அட்லி (1945-1951) மைசூரின் கடைசி மகராஜா ஜெயச்சாமராஜா உடையார் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் ரெவ் மில்லர் வரை பல்வேறு வாடிக்கையாளர்கள் இருந்தனர்.
ஏபெல்
ஹிக்கின்பாதம்ஸ் தன்னுடைய மகன் சி.எச்.ஹிக்கின்பாதம்சையும் இத்தொழிலில் ஈடுபடுத்தினார். 1891 ம் ஆண்டு ஏபெல் ஹிக்கின்பாதம்ஸ் மரணமடைந்த பின்னர்
அவரது அவரது மகன் சி.எச்.ஹிக்கின்பாதம்ஸ் இந்நிறுவனத்தை நடத்தி வந்தார்.அவர்
மெட்ராசை தாண்டியும் மேலும் பல்வேறு ரயில்வே நிலையங்களிலும் புக் ஸ்டால் நிறுவி
தன்னுடைய வியாபாரத்தை விரிவுப்படுத்தினார். 1904 ம் ஆண்டு தன் நிறுவனத்தை புதிய கட்டிடத்திற்கு மாற்றினார்.
1929லேயே 400 ஆட்கள் இந்நிலையத்தில் வேலை செய்து வந்துள்ளனர். 1921
-ஆம் ஆண்டு அசோசியேட்டட் பப்ளிசர்ஸின் ஜான் ஓக்ஷாட் ராபின்சன் என்பவரால் வாங்கப்பட்டு, பின்னர் அமால்கமேசன்சு குழுமத்தால் அசோசியேட்டட் பப்ளிசர்ஸ் 1945 இல் வாங்கப்பட்டதிலிருந்து இன்று வரை அக்குழுமத்திடமே இருந்து வருகிறது.
இது
ஹிக்கின்பாதம்ஸின் தற்போதைய நிலை. தென்னிந்திய மாநிலங்களில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா
முதலிய இடங்களில் 22 கடைகள் இயங்குகிறது. 1990கள் வரை இந்தியாவின் மிகப்பெரிய புத்தகக்கடையாக விளங்கியது. அண்ணா
சாலையில் உள்ள இதன் முதன்மைக் கட்டிடத்தை விலைக்கு வாங்கி அங்கு பெரும் பல்மாடி
வணிக வளாகம் அமைக்க முயர்சித்தனராம்
ஆனால் அது இயலாமல் போயிற்றாம் 1989ஆம் ஆண்டு மேற்கொண்ட இந்தக்
கட்டிடத்தின் பராமரிப்பு பணிகளினால் அது முன்காலங்களில் எப்படி இருந்ததோ அதே தோற்றத்தில் சீரைமைத்தனராம்
மீண்டும் அடுத்த வாரம் வேற ஒரு முக்கியமான இடத்திலிருந்து மௌனச்சாட்சிகளுக்காக சந்திக்கலாம்.
நன்றி! வணக்கம்!!
மௌனச் சாட்சி அற்புதம்
ReplyDeleteவிதையிலிருந்து நுனிவரை
ஒரு பெரும் ஆலமரத்தைப் பார்த்த பிரமிப்பு
படங்களுடன் பகிர்வு மிக மிக அற்புதம்
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வருகைக்கும் பதிவை ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றிப்பா!
Deletetha.ma 1
ReplyDeleteஹிக்கின்பாதம்ஸ்க்கு இவ்வளவு பெருமைகளா? தங்களின் இந்த வார மௌன சாட்சி சூப்பர்
ReplyDeleteவருகைக்கும் பதிவை ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றி சகோ!
Deleteஒவ்வொரு வருட தகவல்களோடு ஹிக்கின்பாதம்ஸ் சிறப்புகளுக்கு நன்றி...
ReplyDeleteவருகைக்கும் பதிவை ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றிண்ணா!
Deleteஇங்கு நான் நிறைய புத்தகங்கள் வாங்குவதுண்டு....இங்கே பதிப்பகத்தார்களுக்கு முன் விளம்பரமின்றி அறிவுசார்பான புத்தகங்கள்தான் முன்னிலையில் இருக்கும் இங்கேதான் என் கணணி அனுபவத்தை வளர்க்கும் புத்தகங்கள் தமிழ்-ஆங்கிலம் இரண்டிலும் வாங்கி வளர்த்துக்கொண்டேன் தங்கள் பகிர்வுக்கு நன்றி போலித்தனங்கள் இல்லாத அறிவுக்கூடம்
ReplyDeleteபுது தகவலை அளித்தமைக்கு நன்றி சகோ
Deleteபடங்களுடன் பகிா்ந்த தகவல்களும் சிறப்புங்க அக்கா. நன்றி.
ReplyDeleteரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கே சசி! நலமா!?
Deleteபுத்தகம் என்றாலே ஹிக்கின்போத்தம்ஸ் எனக்கு முதலில் னியானிவு வரும். அதனை பற்றிய அரிய தகவல்களை படங்களுடன் பகிர்ந்து கொண்டது அருமை, நன்றி ராஜி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!
Deleteஅக்கா நான் ஒரு புத்தகபுழு,பைத்தியம்.சென்னைக்கே வர கூடாது என்கிற என் வைராக்கியத்தை உடைத்தது 2 விஷயம்தான். 1.கன்னிமாரா லைப்ரரி.2.ஹிங்கின் பாதம்ஸ்.கல்யானம்முடிந்து சென்னை வந்ததும் கணவரிடம் கேட்டதும் 2இடத்துக்கு போவதட்கு. ஆனால் இதுவரை போனதும் இல்லை.12 வருடமாகியும்.
ReplyDeleteஎன் கணவருக்கு பிடிக்காதது புக்..
Thanks அக்கா
என் வீட்டுக்காரருக்கும் புத்தகத்தோட தெரிவதில்ல. புத்தகம் வாங்கினாலே காசை கரியாக்குறான்னு திட்டுவார்
Deleteதகவல்கள் தொகுத்த விதம் அருமை அறியாத. பல. விஷயங்களை மௌன. சாட்சிகள். முலம் பகிர்விட்டமைக்கு நன்றி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க அமிர்தா
DeleteExcellentma!
ReplyDeleteநன்றிண்ணா!
Deleteஹிக்கின்பாதம்ஸ் வரலாறு கண்டு மூக்கின் மேல் விரல் போனது !
ReplyDeleteத ம 1 1
நல்ல விதமாய்தானே!
Deleteஅறிந்து கொண்டேன்.
ReplyDeleteஅறிந்துக் கொண்டதற்கு நன்றி
Deleteஹிக்கின் பாதம்ஸ் உள்ளே சென்றது இல்லை! வெளியே நின்று பார்த்திருக்கிறேன்! நிறைய தகவல்கள் தந்த பதிவு! நன்றி!
ReplyDeleteஅடுத்த முறை ஹிக்கின்பாதம்ஸ் உள்ள போய் புத்தகங்களை வாசிச்சுட்டு பார்த்துட்டு வாங்க சகோ!
Deleteபல அறியாத தகவல்கள். எப்படி இந்த ஹிக்கின்பாதம்ஸ் பற்றி எனக்கு தெரியவந்தது என்பது நினைவில்லை. ஆனால் அப்போதெல்லாம் வேலூரிலிருந்து ஏதாவது வேலே என்று சென்னை வந்தால் ஹிக்கின்பாதம்ஸில் நுழைந்து மணிக்கணக்கில் புத்தகங்களை ஆராய்ந்து வாங்கிச்செல்வதுண்டு. ஆனால் சென்னைக்கு குடிவந்த பின் கடந்த 15 ஆண்டுகளாக அதனுள் நுழையவேயில்லை என்பதைச் சொல்ல வெட்கமாக இருக்கிறது. ஒரு விஷயம்......... அங்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் புத்தகத்தைப் பிரித்து படித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் காகிதம் எடுத்து குறிப்பெழுத அனுமதி கிடையாது!
ReplyDeleteநிஜம்தானுங்க சகோ! ஆனா, இப்ப செல்போன்ல ஃபோட்டோ எடுத்துக்குறாங்க நம்மாளுங்க
Deleteபடங்களுடன் சிறப்பான பகிர்வு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!
Deleteநானும் ஹிக்கின்பாதம்ஸ் ரசிகன்தான். பள்ளி நூலகத்தில், அவர்களது நூலகளைப் படித்து இருக்கிறேன். சுமார் 25 வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள அந்த புத்தகக் கடைக்கு சென்றுள்ளேன். அவர்களது ஒன்றிரண்டு நூலகளையும் வைத்துள்ளேன். ஆனாலும் அந்தக் கடையின் வரலாறு எனக்குத் தெரியாது. உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். படங்களுடன் பகிர்ந்த சகோதரிக்கு நன்றி!
ReplyDeleteவருகைக்கும், கருத்துகளை அறிந்துக் கொண்டமைக்கும் நன்றி
Deleteமௌன சாட்சி அற்புதம்
ReplyDeleteபலமுறை ஹிக்கின்பாதம்ஸ் சென்றிருக்கின்றேன்
நல்லது ஐயா!
Deleteமிக அருமையான பதிவு சகோ. நான் கல்லூரி படிக்கும் காலத்தில் வகுப்புக்களுக்கு போவதை விட Higginbothams தான் கதியே எனக் கிடப்பேன், அதை விட்டால் கன்னிமாரா நூலகம். Hgginbothams போவதற்கு இரு காரணங்கள் உண்டு ஒன்று புத்தகம், மற்றொன்று புத்தகம் வாங்க வரும் அழகிய பெண்கள். :)
ReplyDeleteஅந்த விளம்பரத்தில் Higginbothams-யின் கட்டடத்துக்கு அருகே பாருங்கள் வயலும், மரங்களும் உள்ளன. அந்தக் காலக் கட்டத்தில் சென்னை நகரம் எவ்வளவு அழகாக இருந்திருக்கும் அல்லவா.
அதற்கு அடுத்த படத்தில் வளர்ச்சி பெற்ற சென்னையில் சாலைகள் எவ்வளவு காலியாக, அகளமாக இருக்கின்றது. அருகில் உள்ள கட்டடங்களும் நேர்த்தியாகவும் என்னவோ வெளிநாட்டு நகரம் போல உள்ளது.
ஆனால் இன்றைய தோற்றம் கட்டடம் சிதையாமல் இருந்தாலும் வெளிப்புற சாலை மக்கள் நெருக்கடிக்குள்ளும், குப்பை கூழமாகவும், சீரற்ற கட்டடங்கள் அருகே கிளைத்துக் கொண்டும். நினைக்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கின்றது.
எனக்கு மட்டும் டைம் மெசின் கிடைத்தால் பின்னோக்கி போய் நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த சென்னையில் போய் வாழ்ந்துவிடுவேன்.
இன்றைய சென்னைலயும் அழ்கு இருக்கு. கூடவே குப்பை, துர்நாற்றம், தூசும் இருக்கு.
Deleteஅறியாத விஷயத்தை முழுமையாக அறிந்துகொள்ளமுடிந்தது.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!
Delete