Thursday, January 23, 2014

பழைய வளையல்தான் ஆனா, இப்ப புதுசு! - கிராஃப்ட்

என் அம்மாக்கு புது புடவை, நகைங்க மேல ஆர்வம் இல்ல. எங்க போனாலும் சிம்பிளாதான் போவாங்க. அவங்க வளர்த்ததாலயோ என்னமோ எனக்கும் புடவை, நகை மேல ஆர்வம் இல்ல. தேவைக்கு மீறி வாங்கி குவிக்க மாட்டேன். 

ஆனா, கழுத்துக்கு, காதுக்கும் நகை இருக்கோ இல்லியோ,  புடவைக்கு மேட்சா வளையல் இருந்துடனும். தங்க வளையல் பிடிக்காது. கலர் கலரான மெட்டல் வளையல் பிடிக்கும். எங்க போனாலும் வளையல் மட்டும் வாங்கி வந்துடுவேன். அப்படி காசு கொடுத்து வளையல் வாங்கினாலும் ரெண்டே நாள்ல உடைச்சுப் போட்டுடுவேன். அதைப் பொறுப்பா, பாதுகாக்கனும்ன்ற அறிவு இல்ல. உனக்கு தண்டவாளத்துலதான் வளையல் செஞ்சுத் தரனும்ன்னு தூயா திட்டுவா. 

ஒரு செட்டுல சில வளையல் உடைச்சுட்டா அந்த செட்டுல மத்த வளையலை வெளில போட்டு போக முடியாது. தூக்கி போடவும் மனசு வராது. ஏன்னா ஒவ்வொரு வளையல் பின்னாடியும் ஒரு கதை இருக்கும். அதனால தேவை இல்லாத வளையல்களை கேரி பேக்ல போட்டு பரண் மேல வச்சிருந்தேன். வெளில வீசி எறின்சா சுற்று சூழல் பாதிப்புன்னு ஒரு பக்கம் மனசு அடிச்சுக்கும்.

திருப்பதிக்கு போயிருந்தப் போது அங்கிருக்கும் கடைகள்ல கண்கள் மேஞ்சுக்கிட்டு இருக்கும்போது, பட்டு நூலால செஞ்ச வளையல் கண்ணைப் பறிக்கவே விலை கேட்டேன். ஒரு செட் 50 ரூபாய்ன்னு சொன்னாங்க. ஒரு செட் வாங்கி வந்துட்டேன். வீட்டுக்கு வந்து அந்த வளையல்களை பார்க்கும்போது ஒரு யோசனை வந்துச்சு. நாமளே ஏன் இந்த வளையல்களை செய்யக்கூடாதுன்னு. உடனே ஒரு செட் வளையல் செஞ்சுட்டேன். அதான் இன்னிக்கு பதிவுல பார்க்கப் போறோம்.

தேவையான பொருட்கள்:
தேவையான கலர்ல உல்லன் நூல்
குந்தன் கற்கள்
சின்னதும் பெருசுமான கோல்ட் முத்துகள்
ஃபேப்ரிக் க்ளூ.
4 வளையல்

ஒரு வளையல்ல க்ளூ தடவி ரெண்டு வளையலையும் ஒட்டி அரை மணிநேரம் காய விடுங்க.

உல்லன் நூலை வளையலில் முடிப் போட்டு ரெண்டு இழையாக்கிங்கோங்க,

வளையலில் கம் தடவி, உல்லன் நூலை நெருக்கமா சுத்தி வாங்க.
அங்கங்க பசை தடவி உல்லன் நூலை ரொம்ப நெருக்கமா சுத்திக்கிட்டே வாங்க.

உல்லன் நூலை சுத்தி முடிச்சதும் வளையலோட உள்பக்கமா முடிச்சுப் போட்டு பிசிறு தெரியாம மிச்சம் இருக்கும் உல்லன் நூலை கட் பண்ணிடுங்க.


நான் திலகம் ஷேப்புல இருக்கும் கண்ணாடியும் ரெண்டு திலகம் ஷேப் கற்களுக்கிடையில் ஒரு முத்து வச்சிருக்கேன். கற்களை உங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒட்டிக்கலாம்.
திலகம் ஷேப் கற்களுக்கிடையில் மூன்று சின்ன முத்துகளை நீளமா வச்சு செண்டர் வளையலை ரெடிப் பண்ணி இருக்கேன்.

வெறும் முத்துகளை மட்டும் அங்கங்கு ஒட்டி, ஓர வளையல்களை ரெடி பண்ணி இருக்கேன்.

கால் மணி நேரத்துல ஒரு செட் வளையல் ரெடி. என்னோட ரோஸ் நிற பட்டு சேலைக்கு மேட்சான வளையலை நானே ரெடிப் பண்ணிட்டேன். குறைஞ்சது 35 ரூபாய்க்கு விற்கலாம்.

அடுத்த வாரம் வேற ஒரு கிராஃப்ட் செய்யுறதைப் பத்தி பார்க்கலாம்.

டாட்டா, பை பை, ஸீ யூ

20 comments:

  1. வளையல் நல்லா இருக்கு..
    வாழ்த்துகள் ராஜி!

    ReplyDelete
    Replies
    1. வழ்த்துகளுக்கு நன்றி கிரேஸ்

      Delete
  2. அவங்க வளர்த்ததாலயோ என்னமோ எனக்கும் புடவை, நகை மேல ஆர்வம் இல்ல. தேவைக்கு மீறி வாங்கி குவிக்க மாட்டேன். //

    நல்ல பழக்கம். கணவர் கொடுத்து வைத்தவர். என் மனைவியும் இதுபோலத்தான். ஆகவே நானும் கொடுத்து வைத்தவன் :))

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி

      Delete
  3. அக்கா வளையல்கள் ரொம்ப அழகு.எனக்கும் dress,jewel,etc பிடிக்காது.பிடிச்சது toys, books,books தான்

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் புத்தகங்களை பிடிக்கும். அதைவிட வளையல்கள்ன்னா ரொம்ப பிடிக்கும் சுபா! ஆனா, பொறுப்பா பாதுகாப்பா வச்சுக்க தெரியாது

      Delete
  4. வளையல்கள் மனத்தைக் கவர்ந்து நிற்கிறது ! மிகவும் ரசித்தேன்
    பகிர்வுக்கு மிக்க நன்றி .மேலும் தொடர என் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. முடிந்த வரை தொடர்கிறேன் அக்கா!

      Delete
  5. அழகாக இருக்கு...

    என்னது விற்கலாமா...? வாழ்த்துக்கள் சகோதரி...

    ஒவ்வொரு வளையல் பின்னாடியும் உள்ள கதையை அடுத்த பகிர்வுகளில் படிக்க முடியுமா...? ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. அட! ஒரு பதிவை தேத்த ஐடியா கொடுத்த அண்ணனுக்கு மிக்க நன்றி. எடுக்க வேண்டியதுதான் கேமராவை. புடிக்க வேண்டியதுதான் ஃபோட்டோக்களை, போட வேண்டியதுதான் பதிவை!!

      Delete
  6. எனக்கும் அப்படித்தான்...இந்த மேட்சிங்கும் எனக்குப் பிடிக்காது..ஆனா அடுத்தவர் செய்து கொள்வதை ரசிப்பேன்...இப்படி ஒரு தொழிலாளிக்கு ஆப்பு வெச்சுட்டீங்களே வளையல் செய்ய கற்றுக்கொடுத்து...

    ReplyDelete
    Replies
    1. ஐயோ! நான் என் தேவைகளுக்கு மட்டும்தான் செஞ்சுக்குவேன் எழில்

      Delete
  7. கைத்தொழில் ஒன்றைக்கற்றுக்கொள்....சூப்பர்....

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நாளைக்கப்புறமான கருத்துக்கு நன்றி ஜீவா!

      Delete
  8. அக்கா வளையல்கள் அருமை... நானும் செய்ய போறேன்... :P

    ReplyDelete
  9. நல்லா இருக்கு.... பாராட்டுகள்.

    ReplyDelete